சவுதி அரேபியாவில் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய ஆஃபரை அந்நாட்டு அரசும் விமான நிறுவனமும் இணைந்து கொண்டு வர திட்டமிட்டு வருகிறது.
அந்த புதிய திட்டத்தின்படி சவுதி ஏர்லைனில் பதிவிடும் சில குறிப்பிட்ட பயணிகளுக்கு 4 நாட்கள் விசா ஏதும் இன்றி சுதந்திரமாக நாட்டிற்குள் உலா வர அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதனால் சுற்றப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு சுற்றுலா துறையும் மேம்படும் என்று கருதுகின்றனர்.
இதுகுறித்து சவூதி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ஷஹ்ரானி கூறுகையில், சவூதி ஏர்லைன்ஸ் புதிய விசா இல்லாத பயண திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த திட்டத்தில் பயணி தனது டிக்கெட்டை பதிவு செய்யும்போது, அவர்களுக்கு விசா தேவையா இல்லையா என்று கேட்கப்படும்.
குறுகிய காலத்திற்கு வர விரும்பும் மக்கள் விசா வேண்டாம் என்று குறிப்பிட்டால், அதற்கென தனியாக வழங்கப்படும் படிவத்தை நிரப்பி, சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதை மூன்று நிமிடங்களுக்குள் செய்துவிடலாம். எளிய நடைமுறைகளை தான் கையாள உள்ளோம்.
இதன் மூலம் குறிப்பிட்ட விமானங்களில் பயணிக்கும் பயணிகள் சவுதி நாட்டிற்குள் நுழைவதோடு நான்கு நாட்கள், அதாவது சுமார் 96 மணி நேரம் சவுதி அரேபியாவுக்குள் விசா இன்றி ராஜ்யத்தின் பிராந்தியங்களில் சுற்றித் திரிந்து உம்ரா எனும் வழிபாடு செய்ய சுதந்திரம் அளிக்கப்படும்.
பல இஸ்லாமிய சமூகங்கள் சவுதி அரேபியாவில் உள்ள , குறிப்பாக ஜித்தா நகரத்தில், உம்ராவின் சடங்குகளைச் செய்து, பின்னர் தங்கள் புனித பயணத்தை முடிக்க விரும்புவர். தங்களது பயணத்தில் ஒரு நிறுத்தப் புள்ளியாக சவுதி அரேபியா இறங்கி வழிபாடு நடத்த எண்ணுவர். அவர்களுக்கு வழிபாடு சேவையை வழங்குவதற்காக தான் இந்த திட்டம் முக்கியமாக கொண்டு வரப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க : இந்த நதியின் நீரில் சமைத்து உண்டால் மரணம்.. எச்சிலால் உருவான சபிக்கப்பட்ட நதியின் கதை பற்றி தெரியுமா..?
இன்னும் இந்த சேவை எப்போது தொடங்கப்படும் என்ற தெளிவான அறிக்கையை அரசு வெளியிடவில்லை. ஆனால் இந்த திட்டம் சரியாக நடந்தால் நாட்டிற்குள் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதோடு , சவுதி விமான நிறுவனம் தனது சர்வதேச விமானங்களை 40 சதவீதம் அதிகரிக்கவும், உள்நாட்டு விமானங்களில் 5,00,000 கூடுதல் இருக்கைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Saudi Arabia, Travel, Trip