இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது சரிஸ்கா தேசியப் பூங்கா. இது ஜெய்பூரில் உள்ள அல்வார் பகுதியில் 866 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த தேசியப் பூங்காவானது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து 107 கிலோமீட்டர்கள் தொலைவிலும் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. 1955 ஆம் ஆண்டு இது வனவிலங்குப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் இந்த தேசியப்பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பூங்காவானது வறண்ட பகுதியில் அமைந்துள்ள, 24 புலிகளின் தாயகமான விளங்கும் இந்தியாவின் பிரபலமான தேசிய பூங்காக்களில் ஒன்றாக விளங்குகிறது. சரிஸ்கா பூங்காவின் சிறப்பம்சங்கள் என்ன.. என்னென்ன உயிரிழங்கள் இங்கு வாழ்கின்றன என்ற முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
வேட்டையாடுதல் போன்ற காரணங்களால். சில ஆண்டுகளுக்கு முன்பு, சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் இருந்த புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதாவது அவை இயற்கையாக உண்டு வாழும் உயிரினங்களின் எண்ணிக்கையை விட குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டில், சரிஸ்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, அவற்றின் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்து வருகிறது.
புலிகள் தவிர அங்கு வாழும் உயிரினங்கள் :
வறண்ட வெப்பமண்டலக் காடுகளைக் கொண்ட இச்சரணாலயத்தில் கடமான், புள்ளிமான், காட்டுப்பூனை நரி, கழுதைப்புலி, அனுமன் குரங்கு, ரீசசு குரங்கு, நீலப்பசு போன்ற விலங்குகள் காணப்படுகின்றன. இலையுதிர் காடுகள், பாறைகள் மற்றும் சமவெளிகளின் 866 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள சரணாலயத்தை ஜீப் சஃபாரிகள் மூலம் சுற்றிப்பார்ப்பது ஒரு புதிய அனுபவத்தை தரும். இந்த பூங்காவில் வனவிலங்குகள் நம்மை வெகுவாக கவர்ந்தாலும், அங்கு இயக்கப்படும் அந்த ஜீப் சஃபாரி மூலம் 17 ஆம் நூற்றாண்டின் கன்க்வாரி கோட்டை, சிலிசேர் ஏரி, ஜெய் சமந்த் ஏரி மற்றும் கர்-ராஜோரின் பழமையான கோயில்களுக்கு அழைத்துச் செல்கின்றன. மேலும் இந்த பூங்காவில் பல்வேறு வகையான பறவைகளும் காணப்படுகின்றன. சுமார் 220 வகையான பறவைகள் இங்கு வாழ்கின்றன. இவற்றில் வெளிநாட்டுப் பறவைகளும் ஆகும்.
Also Read : அசாமில் தென்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள ’தங்க நிற’ புலிகள்
ஜீப் சஃபாரி இயக்கப்படும் நேரம் :
சரிஸ்கா தேசிய பூங்காவில் ஜீப் சஃபாரி செல்வது புது அனுபவத்தை தரக்கூடியதாகும். அப்படி நீங்கள் அந்த பூங்காவிற்கு சென்று சுற்றிப்பார்க்க விரும்பினால் குளிர்காலத்தில், காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை நேரத்தில் மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் இயக்கப்படுகின்றன. கோடை காலத்தில், காலை 6:00 மணி முதல் 10:00 வரையும், பிற்பகல் 2:30 முதல் மாலை 6:30 வரையும் ஜங்கிள் சஃபாரி இயக்கப்படுகிறது. இது ஒரு மறக்கமுடியாத சுற்றுலா அனுபவத்தை உங்களுக்கு நிச்சயமாக வழங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Park, Tiger, Travel Guide, Travel Tips