முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நடுவே சவப்பெட்டி.. கல்லறைகளோடு ஒரு காஃபி... குஜராத்தில் உள்ள விநோத உணவகம்!

நடுவே சவப்பெட்டி.. கல்லறைகளோடு ஒரு காஃபி... குஜராத்தில் உள்ள விநோத உணவகம்!

கல்லறை உணவகம்

கல்லறை உணவகம்

கல்லறைகள் இருந்தாலும் எந்த தயக்கமும் இன்றி மக்கள் சகஜமாக இங்கு அமர்ந்து சாப்பிட பழகிவிட்டனர். அதேபோல அந்த கடையில் எந்த அமானுஷ்ய நிகழ்வுகளோ வித்தியாசமான உணர்வுகளோ ஏற்படவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ahmadabad, India

பிரியாணி என்றால் தலப்பாக்கட்டி, முனியாண்டி விலாஸ். பார்டர் கடை பரோட்டா, என்று உணவுகளை வைத்து புகழ் பெற்ற  உணவகங்களை பற்றி கேட்டிருப்போம். தீம்களை வைத்து ஒரு சில உணவகங்கள் பிரபலம் ஆகி இருக்கும். இருக்கும் இடத்தை வைத்து கூட பிரபலம் ஆகும். ஆனால் கல்லறையால் பிரபலமான ஒரு உணவகத்தை பற்றி தெரியுமா?

என்ன கல்லறையால் எப்படி ஒரு உணவகம் பிரபலம் ஆகும் என்று யோசிக்கிறீர்களா? ஆமாங்க ஒரு உணவகம் இருப்பதே கல்லறை மீது தான். கல்லறை மீது சவப்பெட்டிகளை சுற்றி தான் மக்கள் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அது தான் அந்த கடையின் ஸ்பெஷாலிட்டி.  அதுவும் வேற ஏதோ ஒரு நாட்டில் இல்லை. நம் இந்தியாவில் தான் அப்படி ஒரு கடை இருக்கிறது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் லால் தர்வாசா பகுதியில் அமைந்துள்ள நியூ லக்கி உணவகம் தான் இந்த கல்லறை உணவகம். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலான இந்த கடை இயங்கி வருகிறது. நியூ லக்கியின் உரிமையாளர் கிருஷ்ணன் குட்டி கடையை தொடங்க ஒரு இடத்தை வாங்கியுள்ளார். நேரில் சென்று பார்த்தபோது அது ஒரு கல்லறை என்பது தெரிய வந்துள்ளது.

காசு இல்லாத நேரத்தில் கல்லறை இருந்தால் என்ன காட்டேரி இருந்தால் என்ன ? தொழில் செய்ய நிலம் கிடைப்பதே பெரிது என்று வாங்கி விட்டார். பின்னர், இந்த கல்லறைகளையே தனது தொழிலின் யுத்தியாக மாற்ற புத்திக்குள் ஒரு கணக்கு போட்டார். கடையை கட்ட இந்த கல்லறைகளை இடிப்பதற்கு பதிலாக இதை சுற்றி கட்டினால் என்ன என்று யோசித்தார். அதன்படியே கல்லறைகளை விட்டுவிட்டு அதை சுற்றி மக்கள் அமர்ந்து உண்ணும் மேசைகளை போட்டார்.

உண்மையில் புதைகுழிகளை முக்கிய ஈர்ப்பாக மாற்றிய அவரது பிசினஸ் டெக்னிக் நன்றாக ஒர்க் அவுட் ஆனது. கல்லறைகள் இருந்தாலும் எந்த தயக்கமும் இன்றி மக்கள் சகஜமாக இங்கு அமர்ந்து சாப்பிட பழகிவிட்டனர். அதேபோல அந்த கடையில் எந்த அமானுஷ்ய நிகழ்வுகளோ வித்தியாசமான உணர்வுகளோ ஏற்படவில்லை.

உணவகத்திற்குள் சுமார் 24 கல்லறைகள் உள்ளன. இந்த கல்லறைகள் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில சூஃபி துறவிகளுக்கு சொந்தமானது என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.  இறந்தவர்கள் கல்லறையை யாரும் மிதிக்காதபடி கல்லறைகளைச் சுற்றி இரும்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கல்லறைகளால் தான் தனது தொழில் மேம்பட்டது என்று கிருஷ்ணன் குட்டி சொல்கிறார்.

இங்குள்ள பணியாளர்கள் இந்த கல்லறைகளை தினமும்  சுத்தம் செய்து ஒவ்வொரு நாளும் புதிய மலர்களால் அலங்கரித்து மரியாதை செலுத்துகிறார்கள். இறந்தவருக்கு மரியாதை செய்வது மிகவும் முக்கியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த கடைக்கு பிரபல ஓவியர் எம். எப். ஹுசைன் அடிக்கடி வருவாராம். அவரது ஓவியங்களையும் இந்த கடையில் மாட்டியுள்ளனர்.

இதையும் பாருங்க: இந்த கோவிலில் இருக்கும் கடவுள்கள் பேசுமாம்... இந்தியாவில் இருக்கும் மர்ம கோவில் பற்றி தெரியுமா..?

கல்லறைக்கு அருகே சாப்பாட்டை கொண்டு போனாலே இறந்தவர்கள் ஆவி நம்மை பின்தொடரும் என்று சொல்லும் மக்களிடையே கல்லறையை சுற்றியே உணவகத்தை காட்டியுள்ளனர்.  அகமதாபாத் பக்கம் போனால் நியூ லக்கி உணவகம் போக மறந்து விடாதீங்க.

First published:

Tags: Ahmedabad, Hotel