ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

22 வகையான நாட்டுப்புற திருவிழாக்களை தொடங்க இருக்கும் ராஜஸ்தான் சுற்றுலாத் துறை!

22 வகையான நாட்டுப்புற திருவிழாக்களை தொடங்க இருக்கும் ராஜஸ்தான் சுற்றுலாத் துறை!

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

தொற்றுநோய்களின் போது கடினமான நேரத்தை எதிர்கொண்ட உள்ளூர் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க இந்த மேடை பயன்படுத்தப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajasthan, India

கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த ராஜஸ்தான் மாநில அரசு நாட்டுப்புற கலை விழாக்களை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தானில் சுமார் 22 வகையான நாட்டுப்புற திருவிழாக்களை மாநில அரசு பஞ்சாயத்து முதல் மாநில அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. கலாச்சாரப் போட்டிகள் நடத்த சுற்றுலாத் துறை விரிவான திட்டத்தைத் தயாரித்து 27 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இந்த விழாக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், கலைஞர்களை மேம்படுத்தவும் உதவும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதைப் பற்றி அறிந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜஸ்தான் நாட்டுப்புற கலை விழா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும். திருவிழாவை நடத்துவதற்கு முக்கிய உள்ளூர் சுற்றுலா இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும், என்றார்.

இதையும் படிங்க:நிலாவையும் நட்சத்திரங்களையும் ஜாலியா ரசிக்கலாம்... சுற்றுலாவை தொடங்க ராஜஸ்தான் அரசு திட்டம்

தொற்றுநோய்களின் போது கடினமான நேரத்தை எதிர்கொண்ட உள்ளூர் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க இந்த மேடை பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரி கூறினார். இதற்கான திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், உதய்பூர், பிகானெர், அல்வார், ஜோத்பூர், சவாய் மாதோபூர் போன்ற இடங்களுக்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள பல ஆராயப்படாத சுற்றுலாத் தலங்களுக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

ராஜஸ்தானின் கர்பா, கல்பேலியா,கூமர், கச்சி கோடி, கைர் ஆகிய நடனங்களை காண்பதற்கும் ராஜஸ்தானிய முறை கத்புத்லி பொம்மலாட்டங்களை காணவும் அதிக மேடைகள் அமைக்கபடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது .

ஏற்கனவே ராஜஸ்தான் பகுதியுள் நகரங்களை விட்டு வெளியே உள்ள இடங்களில் இரவு வானின் அழகை ரசிக்க சுற்றுலா துறை ஏற்பாடு செய்து வரும் நிலையில் இது கூடுதல் போனஸ் தான்.

First published:

Tags: Rajastan, Tourism, Travel, Travel Guide