நல்ல செய்தி என்னவென்றால், பாண்டிசேரியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இந்த ஆண்டு தீபாவளியில் இருந்து பஸ்ஸிலோ ரயிலிலோ சென்று சிரமப்பட வேண்டாம். ஜாலியாக சிறிய ரக விமானத்தில் பறக்கலாம். எப்படி என்று சொல்கிறோம் வாருங்குங்கள்.
தமிழகத்தில் விமான நிலையம் என்று எடுத்துக்கொண்டால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் உள்ளன. புதுச்சேரியை பொறுத்தவரை ஒரு சிறிய விமான நிலையம் உள்ளது. ஆனால் அதன் விமான சேவை என்பது குறைவாகவே உள்ளது. ஒரு நாளைக்கே இரண்டு விமானங்கள் தான் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏர் சஃபா நிறுவனம், புதுச்சேரியிலிருந்து சென்னை, திருப்பதி, வேலூர், மதுரை, சேலம், கோவை, திருச்சி, துத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் 19 இருக்கை கொண்ட சிறிய ரக விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் முதற்படியாக புதுச்சேரியிலிருந்து கோவை மற்றும் பெங்களூருவிற்கு வெள்ளிக்கிழமை சோதனை முறையில் விமானங்களை இயக்கிப் பார்த்துள்ளது.
இது குறித்து ஏர் சஃபா (இந்தியா) மேலாண் இயக்குநர் கே. முருகப்பெருமாள் கூறுகையில், 19 இருக்கைகள் கொண்ட குறைந்த தொலைவு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கோவை என இரண்டு விமான நிலையங்களுடன் இதர நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். மேலும் இதற்காக செக் குடியரசிடமிருந்து (czech republic ) 5 சிறிய ரக விமானங்களை முன்பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
அவை விரைவில் தமிழகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதுசேரியில் இருந்து தமிழகத்திற்கு இயக்க இருக்கும் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அந்த அனுமதிகள் அங்கீகரிக்கப்பட மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் என்பதால் இந்த விமான சேவை என்பது இந்த ஆண்டு தீபாவளி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி செயல்பாட்டுக்கு வந்ததும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 2000 -2500 ரூபாய் வரையான டிக்கெட்டுகளில் மக்களை அழைத்துச்செல்லும் என்று அறிவித்துள்ளது. புதுச்சேரி - சென்னை இடையே மட்டும் நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் விமான சேவை தேவைப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் மற்ற நகரங்களுக்கு மக்களின் வரவேப்பை பொறுத்து இயக்கத் திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டையிலுள்ள விமான நிலையத்திலிருந்து 2013-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், பயணிகள் எண்ணிக்கை குறைவால் 2014-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு, சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசின் உதான்(UDAN) திட்டத்தின் கீழ், புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் பாருங்க: சென்னை டூ ஊட்டி... இந்த கோடை விடுமுறைக்கு கம்மி பட்ஜெட்டில் சூப்பர் ட்ரிப்.. முழு செலவு விவரம் இதோ!
அதற்கு அடுத்தபடியாக தற்போது ஏர் சஃபா நிறுவனம் தான் விமான சேவையைத் தொடங்க உள்ளது. இந்நிறுவனம் பெரிய நிறுவனங்களுடன் போட்டு போடா வரவில்லை. அத்தைக்கு கூடுதல் இணைப்பாக மட்டுமே செயல்பட இருக்கிறோம் என்று அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight travel, Pondicherry