கேரவன் அல்லது மோட்டார்ஹோம் எனப்படும், வாகனத்திலேயே தங்கிக் கொள்ளும் வசதியுடன் கூடிய சுற்றுலா சேவையை உத்தரகண்ட் அரசு விரைவில் தொடங்க இருக்கிறது. நாட்டில் முதல் முறையாக கேரவன் சுற்றுலா சேவையை இந்த மாநில அரசு அறிமுகம் செய்கிறது.
முன்னதாக, உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத் துறை சார்பில், சுற்றுலா மற்றும் தங்கும் வசதிகள் சார்ந்த மாநாடு - 2022 அண்மையில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில், கேரவன் சுற்றுலா வாகனம் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. அதனை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார்.
சுற்றுலா வாகனத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு முழுமையான சௌகரியத்தை வழங்கும் வகையில் வீடு போன்ற அதே செட் அப் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக, அடுப்புடன் கூடிய கிச்சன் பகுதி, ஃபிர்ட்ஜ், மைக்ரோவ் மற்றும் பொருள்களை வைத்துக் கொள்வதற்கான வசதி உள்ளிட்டவை அதில் இருக்கும். குளியலறை, குளிப்பதற்கு ஷவர் வசதி ஆகியவை இடம்பெறும். சுற்றுலாப் பயணிகளுக்கான லிவிங் ஏரியாவில் சோஃபா, டிவி, மடக்கும்படியான பெட் ஆகிய வசதிகள் கிடைக்கும். வாகனத்தின் அளவு எவ்வளவு பெரியது என்பதைப் பொருத்து அதில் எத்தனை பேர் தங்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
சுருக்கமாக சொல்வதென்றால், உங்களுக்கான வீடு என்பது 4 சக்கரங்களின் மீது இடம்பெற்றிருக்கும். வீட்டுக்கு வெளியே மற்றொரு வீடாக இது இருக்கும். கேரவன் சுற்றுலா வாகனத் துறையின் மேலாளர் இதுகுறித்து பேசுகையில், “எங்களது முதலாவது சுற்றுலா வாகனத்தை, சுற்றுலாத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தியாவில் கேரவன் சுற்றுலா கலாசாரத்தின் தொடக்கமாக இது இருக்கும்’’ என்று கூறினார்.
டிராவல் செய்ய திட்டமிடும் முன் ஸ்மார்டாக பேக்கிங் செய்து பழகுவது அவசியம் : எப்படி தெரியுமா..?
சுற்றுலாப் பயணிகளுக்கு கேரவன் சுற்றுலா வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கொள்கைகளை உருவாக்கும் நடவடிக்கையை உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத் துறை மேற்கொண்டு வருகிறது. கேரவன் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான கேரவன் பார்க் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தற்போது இரண்டு வாகனங்கள் களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கிலும், சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க இயலாத நினைவுகளை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மாநில அரசு தெரிவிக்கிறது.
கோவிட்-19 தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில் பயணம் செய்வது சரியா? பாதுகாப்பான பயணத்திற்கு டிப்ஸ்
டெல்லியைச் சேர்ந்த மோட்டார் ஹோம் அட்வென்சர்ஸ் என்ற நிறுவனம் ஏற்கனவே இதுபோல சுற்றுலாவுக்கான “ஹோம் ஆன் வீல்ஸ்’’ வாகனங்களை தயாரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மோட்டார்ஹோம் அட்வென்சர்ஸ் நிறுவனமானது வாகனங்களை தயாரித்து கொடுக்கிறது. அந்த நிறுவனத்தின் முயற்சியை முன்னுதாரணமாகக் கொண்டு உத்தரகாண்ட் அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.