கொரோனா காலத்தில் ரயில் பயணமா? நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் இவை..

மாதிரி படம்

முடிந்தவரை ஒரு இ-டிக்கெட்டைப் பெறுங்கள். அதனால் பயண ஆவணங்களை பெறுவதற்கு நீங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.

 • Share this:
  கொரோனா தொற்று நோயின் தாக்கம் இந்தியா உட்பட உலக மக்களின் இயல்பு வாழக்கையை புரட்டி போட்டுள்ளது. மேலும் பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பமான தொடக்கத்தில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

  ரயில், பேருந்து, விமான சேவைகள் முடக்கப்பட்டன. ஏனெனில் SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் நோயான கொரோனா தொற்றுநோய் பரவும் அபாயத்தை பயணம் அதிகரிக்கிறது என்று சி.டி.சி உள்ளிட்ட சுகாதார நிறுவனங்கள் எச்சரித்தன.

  அந்த வகையில் இந்தியாவில் தொற்றுநோய்களின் போது, அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் பிற வேலைகள் அல்லது பிற நோக்கங்களுக்காக பயணிக்க விரும்புவோர் பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

  இருப்பினும், கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்ததன் காரணமாக ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதால், கடந்த சில மாதங்களில் பயண கட்டுப்பாடுகள் சற்று குறைந்துவிட்டன. அந்த வகையில் பண்டிகை காலங்களில் உங்கள் பணியிடத்திற்கு அல்லது சொந்த ஊருக்கு ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்வது குறித்து நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்றால், உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் அவசியத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்தே மக்கள் 6 அடி தூரம் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசங்களை அணிய வேண்டும், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என பல வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அந்த வகையில், ரயில்களில் பயணம் செய்யும் போது மற்ற பயணிகளுக்கு அருகில் உட்கார்ந்து அல்லது நின்று வரும் போது ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அப்படியானால் ரயில் பயணங்களின் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பற்றி காண்போம்:  பயணத்திற்கு முன்பு செய்ய வேண்டியவை :

  ரயில் கால அட்டவணையை முன்பே சரிபார்க்க வேண்டும்.

  முடிந்தவரை ஒரு இ-டிக்கெட்டைப் பெறுங்கள். அதனால் பயண ஆவணங்களை பெறுவதற்கு நீங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. எனவே தொடர்பு இல்லாத முன்பதிவு மற்றும் கட்டணங்களைச் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்.

  பயணத்தின் போது, 3 முகக்கவசங்கள், ஒரு கை சுத்திகரிப்பான் மற்றும் சில கிருமிநாசினி துடைப்பான்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் முகக்கவசம் அழுக்கடைந்தால் அதனை மாற்றிக்கொள்ளும் வகையில் சீல் செய்யப்பட்ட பையில் சில கூடுதல் முகக்கவசங்களை எடுத்துச் செல்லுங்கள்.

  நீங்கள் வேலைக்கு செல்வதற்கு முன், சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும், பின்னர் உங்கள் முகக்கவசங்களை அணியுங்கள். பணியிடத்திற்கு வரும் வரை அதைத் தொடவோ, அகற்றவோ கூடாது.

  நீங்கள் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன் கையுறைகளை அணியுங்கள், ஏனெனில் ரயில்களில் கதவு கைப்பிடிகள் போன்றவற்றைத் தொடும்போது இவை தடையாக செயல்படும். உங்கள் பணியிடத்தை அடைந்தபின் கையுறைகளை சரியான முறையில் அப்புறப்படுத்தலாம்.  பயணத்தின் போது செய்ய வேண்டியவை:

  டிக்கெட் இயந்திரங்கள், லிஃப்ட் பட்டன்கள் மற்றும் பெஞ்சுகள் போன்ற அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை தொடுவதை தவிர்க்கவும். இந்த மேற்பரப்புகளை நீங்கள் தொட்டால், உடனடியாக உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும் அல்லது 60 சதவீத ஆல்கஹால் கொண்ட ஒரு சானிடைசரைப் பயன்படுத்துங்கள்.

  மற்ற பயணிகளிடமிருந்து குறைந்தது 6 அடி தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் குழுக்களாக இருப்பதை தவிர்க்கவும். ரயில் நிலையத்தில் எங்கு நிற்க வேண்டும், உட்கார வேண்டும், எவ்வாறு வரிசையில் நிற்க வேண்டும் மற்றும் வெளியேறுவது போன்றவற்றை குறிக்கும் அறிகுறிகளைப் பின்பற்றுங்கள்.

  கொரோனா பரவலால் தாமதமான பரிசோதனை.. மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பு அபாயம்.. ஆய்வாளர்கள் எச்சரிக்கும் விஷயம் என்ன?

  ரயில் நிலையத்தில் பொது குளியலறையை பயன்படுத்திய பிறகு குறைந்தது 20 விநாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும்.

  பயணத்தின் போது தண்ணீர் பாட்டில் மற்றும் உணவுப் பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து வருவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மற்ற பயணிகளிடம் இருந்து தண்ணீர் பாட்டில்களை ஏற்கவோ அல்லது மற்றவர்களுக்கு வழங்கவோ வேண்டாம்.

  நீங்கள் ரயில் நிலையத்தில் உணவு அல்லது தண்ணீரை வாங்கினால், தொடர்பு இல்லாமல் அல்லது சரியான மாற்றத்தில் பணம் செலுத்துங்கள்.

  உங்கள் பயணத்தின் போது சாப்பிட மற்றும் குடிக்க முகக்கவசங்களை அகற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக உங்கள் பணியிடத்தை அடையும் வரை காத்திருங்கள். அதுவே சாப்பிட அல்லது குடிக்க உங்கள் முகக்கவசங்களை நீக்க வேண்டும் என்றால், எல்லா நேரங்களிலும் கிருமிநாசினியை மேற்பரப்பில் வைப்பதை உறுதி செய்யுங்கள். ரயில் நிலையம் அல்லது ரயிலில் பயணிக்கும்போது எச்சில் துப்புவதைத் தவிர்க்க வேண்டும்.  பயணத்தின் இலக்கை அடைந்த பிறகு செய்ய வேண்டியவை:

  ரயில் பயணம் முடிந்து நீங்கள் உங்கள் பணியிடம் அல்லது இலக்கை அடைந்ததும் உங்கள் கைகளை குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பு போட்டு தண்ணீரில் கழுவவும்.

  உங்கள் பயணத்தின் போது நீங்கள் அணிந்திருந்த முகக்கவசத்தை அகற்றி, அதை புதியதாக மாற்றவும். முன்பு அணிந்த முகக்கவசத்தை அப்புறப்படுத்த ஒரு சீல் செய்யப்பட்ட பையில் வைக்கலாம்.

  பணியிடத்தில், மதிய உணவு நேரத்தில் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உணவு விடுதியில் பாதுகாப்பான தூரத்தையும் பராமரிக்கவும்.

  சில வகையான பயண முறைகள் உங்களுக்கு கொரோனா வைரஸை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும். ஆனால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும், பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யலாம். ஒருவேளை நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், சமீபத்தில் கொரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தால் அல்லது கொரோனா சோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்தால், இதுபோன்ற பொது போக்குவரத்து பயணத்தை தவிர்ப்பது நல்லது.

  பண்டிகை நாட்களில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்னைகள் என்னென்ன? தவிர்க்க என்ன வழி..?

  ரயில் நிலையத்தில் சுகாதார பரிசோதனை குழுவினரால் பயணத்தை மேற்கொள்ள மறுக்கப்பட்ட பின்னர் ரயிலில் ஏறுவது ஒரு குற்றச் செயலாகும். அதனை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொது இடங்களில் துப்புதல், சிறுநீர் கழித்தல் அல்லது திறந்த வெளியில் மலம் கழிப்பது தண்டனைக்குரிய குற்றம். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நெறிமுறையை பின்பற்றாதவர்களின் மீது ரயில்வே சட்டம் -1989ன் தொடர்புடைய பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sivaranjani E
  First published: