பிப்ரவரி மாதம் முடிந்துவிட்டது. ஆனால் அதற்குள் மே மாதம் வந்தது போல வெயில் கொளுத்துகிறது. எப்போது கோடை விடுமுறை வரும் எப்போது குளிர் பிரதேசங்களுக்கும் நீர்நிலைகளுக்கு ட்ரிப் போடலாம் என்று சிந்திக்கத் தொடங்கி விட்டனர் மக்கள். இடையில் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இப்போதே பயண டிக்கெட்டுகளை புக் செய்துகொண்டால் கம்மி பட்ஜெட்டில் முடித்துக்கொள்ளலாம். கடைசி நேரத்தில் கூட நெரிசலில் டிக்கெட்டுக்கு தள்ளாடத் தேவை இல்லையே என்ற உங்கள் கணக்குகள் எல்லாம் எங்களுக்கும் புரிகிறது.
அதற்காகத்தான் இந்த கோடை விடுமுறைக்கு ஏற்ற ஸ்பாட்டுகளை பட்ஜெட் விபரங்களோடு உங்களுக்கு சொல்கிறோம். அதன்படி நீங்கள் உங்கள் பயணத்தை இப்போதே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். பயண கட்டணம், தாங்கும் வசதி எல்லாவற்றையும் இப்போதே ஏற்படுத்தி வைத்துக் கொண்டால் கோடை விடுமுறையில் நீங்கள் கூலாக ட்ரிப் போகலாம் அல்லவா? கோடை விடுமுறை என்று சொன்னதும் நம் மண்டைக்கு மேல் எரியும் முதல் பல்பாக ஊட்டி தான் எரியும். குழந்தைகள், பெரியவர்கள் என்று குடும்பத்தோடு செல்வதற்கு ஊட்டியை விட பெஸ்ட் ஸ்பாட் வேறெதுவும் இருக்க முடியாது. சென்னையில் இருந்து ஊட்டி செல்வதற்கான டிராவல் பிளானை தான் சொல்ல இருக்கிறோம்.
ட்ரிப் என்று எடுத்துக்கொண்டால் முதலில் நாம் கவனிப்பது போக்குவரத்து வசதியை தான். சென்னையில் இருந்து ஊட்டிக்கும் கோயம்புத்தூருக்கும் தினந்தோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளிலேயே சொகுசு பேருந்துகளும், குளிர் சாதன பேருந்துகளும் உள்ளன. டிக்கெட் விலை ரூ. 575 இல் இருந்து ஆரம்பிக்கிறது. இது வேண்டாமென்றால் நீங்கள் தனியார் சொகுசு பேருந்துகளையும் கூட புக் செய்துகொள்ளலாம்.
பேருந்து வேண்டாம் எனக்கு ரயில் பயணம் தான் சரி பட்டு வரும் என்றால் சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் இரவு 9 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இரவு சென்னையில் கிளம்பினாள் காலை விடியும்போது மேட்டுப்பாளையம் அடையலாம்.இதனுடைய கட்டணம் ரூ. 325 இல் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து ஊட்டிக்கு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது, விமானம் என்று முடிவு செய்தால் கோவை வரை விமானத்தில் சென்றுவிட்டு அங்கிருந்து பேருந்து, ரயில், வாடகை கார் மூலம் ஊட்டிக்கு போகலாம். எந்த போக்குவரத்தில் புக் செய்தாலும் போகும் போதே திரும்பி வருவதற்கான டிக்கெட்டையும் சேர்ந்து போடுங்கள். கடைசி நேரத்தில் பதற தேவை இல்லை.
ஊட்டியில் ரூம், ஹோட்டல், வீடு, ரிசார்ட், டென்ட் ஹவுஸ் என்று அனைத்து வகையான தங்குமிடங்களும் உள்ளது. உங்களின் தேவைக்கு ஏற்ப புக்கிங் செய்துகொள்ளலாம். தனியார் இணையதளங்கள் பல புக்கிங் வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன. அவலாஞ்சி ஏரி அருகே சூப்பரான டென்ட் ஸ்பாட் உள்ளது. அதை மிஸ் பண்ணிடாதீங்க.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
இதையும் படிங்க: ஊட்டி போற ப்ளானா? கண்டிப்பா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க..!
இந்த இடங்களை எல்லாம் பொறுமையாக பார்த்து ரசிப்பதற்கு 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் அதனால் அதற்கு ஏற்ப உங்கள் பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ளுங்கள். இப்போதே புக்கிங் செய்தால் 20000 முதல் 30,000 க்குள் ஒரு முழு குடும்பமும் ட்ரிப் சென்று வரலாம். கோடை விடுமுறையை குளுகுளுவென்று ஊட்டியில் கொண்டாடி விடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.