Home /News /lifestyle /

இந்தியாவில் மழைக்காலங்களில் இந்த சுற்றுலா இடங்களுக்கு பிளான் செய்யாதீங்க!

இந்தியாவில் மழைக்காலங்களில் இந்த சுற்றுலா இடங்களுக்கு பிளான் செய்யாதீங்க!

மழைக்கால பயணம்

மழைக்கால பயணம்

monsoon travel tips: ஜூலை ஆரம்பித்தாலே சுற்றுலா சீசன் தொடங்கி விட்டது என்று பொருள். மழை , ஈரக்காற்று வீசி குளுமையைப் பரப்பி சுற்றுலாப் பயணிகளை தன்பால் இழுக்க எல்லா இடமும் தயாராகிக்கொண்டிருக்கும்.

ஜூலை ஆரம்பித்தாலே சுற்றுலா சீசன் தொடங்கி விட்டது என்று பொருள். மழை , ஈரக்காற்று வீசி குளுமையைப் பரப்பி சுற்றுலாப் பயணிகளை தன்பால் இழுக்க எல்லா இடமும் தயாராகிக்கொண்டிருக்கும்.

ஆனால் இந்த மழை காலத்தில் தவிர்க்க வேண்டிய இடங்களும் சில உண்டு. இதை தவிர்க்க முக்கிய காரணம் இதன் புவியியல் அமைப்பு. அதிக மழை பொழிந்தால் வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு ஆகிய சம்பவங்கள் நிகழும் இடங்களை இந்த காலகட்டத்தில் தவிர்க்கலாம்.எதிர்பாராத வானிலை உங்கள் விடுமுறைத் திட்டங்களைக் கெடுத்துவிடும். மழை காலம் முடிந்த பின்னர் அல்லது ஆரம்பிக்கும் நேரத்தில் பார்த்தல் நன்று. அப்படிப்பட்ட சில இடங்கள் இதோ!

ராசாளியாக பறக்க ரெடியா? இந்தியாவில் நீங்க மிஸ் பண்ணக்கூடாத சாலைப்பயண வழிகள் இதோ...

கின்னவுர்: ஹிமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் கின்னவுர் பள்ளத்தாக்கு ஆண்டு முழுவதும் அழகாக இருக்கும். இருப்பினும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் அல்லது மழைக்காலங்களுக்குப் பிறகு இந்த இடத்திற்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுவது சிறந்தது. ஜூலை முதல் செப்டம்பர் காலத்தில் இடைவிடாத மழையின் காரணமாக கின்னவுர் அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் மேக வெடிப்புகளைக் காண்கிறது. வானிலை மிகவும் எதிர்பாராததாக மாறுவதால், பருவமழை மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கின்னவுர்


உத்தரகாண்ட் : டெல்லிக்கு அருகாமையில் இருப்பதால், இந்த இடம் ஆண்டு முழுவதும் நெரிசலாகவே இருக்கும். பருவமழையின் போது ​​உத்தரகாண்டின் மேல் பகுதிகளில் நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகள் ஏற்பட்டு மேலும் மோசமடையும். உத்தரகாண்ட் மலையேற்றத்திற்கு பெயர் பெற்ற ஊர். ஆனால் இந்த நிலச்சரிவுகளால் மிகவும் ஆபத்து நிறைந்த இடமாக மாறிவிடுகிறது. எனவே மழை காலத்தில் இங்கே செல்வதைத் தவிர்க்கலாம்.

உத்தரகாண்ட்


அசாம் : அசாமின் பல்வேறு பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் நிலச்சரிவுகள் பற்றிய அறிக்கைகள் அடிக்கடி வரும். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் ஒரு சம்பவமானது நிகழும். மழை பெய்யும் போது அது பசுமையால் சூழப்பட்டிருந்தாலும், மழை பொழியும் நேரத்தில் அசாம் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்த ஆண்டும், அசாம் வெள்ளத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அசாம்


பீகார் : பருவமழைக்குப் பிறகு, அதாவது அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் பீகாருக்குச் செல்ல சிறந்த நேரம். புர்ஹி, கோசி, கந்தக் மற்றும் பாக்மதி போன்ற முக்கிய ஆறுகள் இமயமலையில் இருந்து உருவாகி வடக்கு பீகாரில் பாய்வதால், அவை அடிக்கடி பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்த காரணமாகின்றன. அதனால் வெள்ளத்தில் உங்கள் விடுமுறையை கழிக்க வேண்டாமே.

பீகார்


வரலாறோடு ஒரு ட்ரெக்கிங் பயணம்- செஞ்சி கோட்டை!

மேகாலயா
இந்த ஆண்டு, ஜூன் 1 முதல் 22 வரை, இப்பகுதியில் கடந்த ஆண்டுகளை விட 161% அதிக மழை பதிவாகியுள்ளது. சாதாரண மழையான 503.1 மிமீ பொழியும். இந்த ஆண்டு 1314.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் நிலச்சரிவு மற்றும் நெடுஞ்சாலைகள் தடைப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகள் மட்டுமின்றி, மொபைல் நெட்வொர்க் இணைப்பும் தடைபட்டுள்ளது. எனவே, மழைக்காலத்தில் மேகாலயாவைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால மாதங்களில் ஒரு பயணத்தைத் திட்டமிடுங்கள்.

மேகாலயா


டார்ஜிலிங்
பெரும்பாலான கிழக்கு மாநிலங்களைப் போலவே டார்ஜிலிங், மழைக்காலத்தில் மந்தமாக மாறிவிடும். பெரும்பாலான நாட்களில் தொடர்ந்து மழை பெய்வதால், மக்கள் நாள் முழுவதும் ரெயின்கோட் அணிந்து வெளியே வர வேண்டும் அல்லது உள்ளே இருக்க வேண்டும். இந்த நேரத்தில், தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரிவது நல்லதல்ல, ஏனெனில் பாதைகள் வழுக்கும்.

டார்ஜிலிங்


மும்பை
மழைக் காலங்களில் மும்பையின் இயற்கை எழில் கொஞ்சும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இது மக்களுக்கு பல மடங்கு சிரமங்களை அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்க. இடைவிடாத மழை காரணமாக உள்ளூர் ரயில் சேவைகள் பெரும்பாலும் நிறுத்தப்படும் அதே வேளையில், தண்ணீர் தேங்குவதால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது மிகவும் கடினமாகிறது.

மும்பை
Published by:Ilakkiya GP
First published:

Tags: Assam, Flood, Floods in Himachal Pradesh, Meghalaya, Mumbai Flood, Travel, Travel Guide

அடுத்த செய்தி