உலகம் முழுவதும் பல குகைகள் உள்ளன. அவை காலப்போக்கில் எதோ ஒரு காரணத்தால் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மாறி விடுகின்றன. ஆனால், இன்றுவரை தீர்க்கப்படாத ஒரு ரகசியதால் ஒரு குகை பிரபலம் ஆகியுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? அப்படி ஒரு குகையின் கதை தான் இது.
2012 இல் மாயன் காலண்டர் முடிவடைகிறது, அதனால் உலகம் முடிய போகிறது என்று நம்பினோம். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், உத்தரகாண்டில் இருக்கும் ஒரு குகையின் கருவறையில் உலகம் அழியும் ரகசியம் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தின் கீழ் உள்ள கங்கோலிஹாட்டில் இருந்து 14 கிமீ தொலைவில் புவனேஷ்வர் என்ற கிராமம் அமைந்துள்ளது. கிராமத்தின் நடுவில் பாதல் புவனேஷ்வர் குகைக் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 90 அடிக்கு கீழே அமைந்துள்ள இந்த குகை உள்ளே செல்ல மிகவும் குறுகிய பாதைகள் இருப்பதை காணலாம்.
இந்து மதத்தின்படி காலச் சுழற்சி ஒரு யுகமாக அளவிடப்படுகிறது அவை சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. அதில் திரேதா யுகத்தில் அயோத்தியை ஆண்ட சூரிய வம்சத்தைச் சேர்ந்த ரிதுபர்ணன் என்ற மன்னனால்தான் இந்தக் கோயில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது .
இங்குதான் ரிதுபர்ணன் , பாம்புகளின் அரசனான ஆதிசேஷனை சந்தித்து அவரது வழிகாட்டுதலின் பேரில் இந்த குகையின் உள்ளே சிவன் , விஷ்ணு , பிரம்மன் மற்றும் பிற தெய்வங்களின் தரிசனத்தைப் பெற்றார் என்று கதைகள் கூறுகின்றனர். அதற்கு பின் துவாபர் யுகத்தில் பாண்டவர்கள் அதை மீண்டும் கண்டுபிடித்து வழிபட்டதாக நம்பப்படுகிறது.
அடுத்த யுகமான கலியுகத்தில் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் இந்த குகையை கண்டுபிடித்து செம்பு சிவலிங்கத்தை நிறுவினார் என்ற கதைகளும் உண்டு. அதன் பின்னர் அனைத்து மக்களின் பார்வைக்கு இந்த குகை திறந்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மனிதனாக இருந்த விநாயகர் யானை தலையோடு இணைந்து தான் விநாயகர் ஆனார் என்ற கதை நமக்கு தெரியும். அப்படி துண்டிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் தலை இக்கோயிலில் இருப்பதாகவும் அதை ஆதி விநாயகர் என்றும் வழிபடுகின்றனர். சிவனை வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் சந்திர மாதத்தின் 13வது நாளான திரயோதசி அன்று, 33 கோடி தேவர்களும், தேவியர்களும் சிவபெருமானை வணங்குவதற்காக பாதாள புவனேஷ்வரில் இறங்குவதாக நம்பப்படுகிறது.
அதோடு மற்றொரு சுவாரசியமான கதையை சொல்கிறார்கள். அது தான் இந்த கோவில் மறைந்துள்ள ரகசியமே. இந்த கோவிலில் ரணத்வார், பாப்த்வார், தர்மத்வார் மற்றும் மோக்ஷத்வார் என நான்கு வாயில்கள் முன்னர் இருந்ததாம். அதில் ராவணன் கொல்லப்பட்டபோது, பாப்த்வார் மூடப்பட்டது. அதே போல மகாபாரதப் போருக்குப் பிறகு, ரணத்வாரும் மூடப்பட்டது. மற்ற இரண்டு வாயிலை மூடினால் உலகம் இறுதிக்கு வரும் என்று சொல்கின்றனர்.
இதையும் படிங்க : 2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!
அதேபோல 4 யுகங்களை குறிக்கும் 4 தூண்கள் கோவில் கருவறையில் உள்ளது. மற்ற மூன்று தூண்களை விட கலியுக தூண் பெரியது. இது தற்போது வளர்ந்து வருகிறது. என்று அது குகையின் மேற்கூரையை தொடுகிறதோ அன்று உலகம் அழிந்து விடும் என்று நம்புகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Caves, Travel, Uttarkhand