ஹோம் /நியூஸ் /lifestyle /

வானில் பறக்க ரெடியா? சென்னையில் பாராகிளைடிங், பாராமோட்டரிங் ஐடியாக்கள்

வானில் பறக்க ரெடியா? சென்னையில் பாராகிளைடிங், பாராமோட்டரிங் ஐடியாக்கள்

பாராகிளைடிங்

பாராகிளைடிங்

Paragliding in chennai: பாராகிளைடிங் மெரினா கடற்கரையிலும், பாராசைலிங் (கடல் வழியாக) சென்னையில் உள்ள கோவளம் கடற்கரையிலும் நடத்தப்படுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பறவை போல் மனிதனுக்கு சிறகு இல்லை. ஆனால் பறக்கும் ஆசை மனிதனை விட்டு போவதில்லை. சிறகே இல்லாமல் பறக்க வாய்ப்பு கிடைத்தால் எல்லோருக்கும் வானில் பறந்து மிதக்கும் நிலையில் இருந்து நகரத்தை பார்க்க ஆசை இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்ற வெளி நாட்டுக்கோ வெளிமாநிலங்களுக்கோ போக தேவை இல்லை. சென்னையிலேயே அதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பாராச்சூட் மூலம் வானில் பறக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றனர். பாராகிளைடிங், பாராமோட்டரிங், பாராசைலிங் என்ற வகைகளில் பறக்கலாம்.

பாராமோட்டரிங்:

சென்னையில் மோட்டார்கள் மூலம் பாராகிளைடிங் போன்று பார்வையாளர்கள் அனுபவிக்கும் வசதி உள்ளது. இந்த நுட்பம் பாராமோட்டரிங் என்று அழைக்கப்படுகிறது. பாராமோட்டோரிங்கில், பாராசூட் இணைக்கப்பட்ட சிறிய மோட்டார்கார் இருக்கும். ஒன்று அல்லது 2 நபர் அமரும் வசதியோடு அமைக்கப்பட்டிருக்கும். அதில் நாம் அமர்ந்ததும் வாகனம் சமவெளி நிலத்தில் வேகமாக இயக்கப்படும். பின்னர் அந்த வண்டியை காற்று வீசும் திசையோடு வேகமாக இயக்குவர். இதனால் பாராசூட்டில் காற்று நிறைந்து வானத்தில் உயரும்.

பாராகிளைடிங் :

பாராகிளைடிங் மெரினா கடற்கரையிலும், பாராசைலிங் (கடல் வழியாக) சென்னையில் உள்ள கோவளம் கடற்கரையிலும் நடத்தப்படுகிறது. பாராகிளைடிங்கில், ஒருவர் பாராசூட் இணைக்கப்பட்ட சாதனத்தை அணிந்து கொள்வார். அதிவேக படகில் மோட்டார் இணைக்கப்பட்ட ஒரு நீண்ட கயிறு அந்த நபரை காற்றில் இழுக்கும். அந்த வேகத்தில் பாராஷூட்டில் காற்று நிறைந்து உயரும்.

பயணங்களால் கிடைக்கும் பயன்கள் என்ன?

வானத்தில் உயரும் போது நகரத்தின் சிலிர்ப்பையும் உற்சாகத்தையும் அனுபவிக்கலாம். உடலில் அட்ரினலின் வேகம் அதிகரித்து பயத்துடன் கூடிய குதூகல அனுபவத்தைத் தரும். .

பாராகிளைடிங் செய்ய சிறந்த நேரம்:

பருவமழைக்கு முந்தைய குளிர்காலம், ஜூலை முதல் அக்டோபர் வரையான காலம், ஜனவரி , பிப்ரவரி மாதங்கள் சிறந்த காலம் ஆகும். அதிகாலை மற்றும் மாலை நேரங்கள் பறக்க சிறந்த நேரம்.

எடை வரம்பு: 80 கிலோ வரை உள்ள நபர்கள் பாராகிளைடிங் செய்யலாம்.

கட்டணம் : ஒரு சவாரிக்கு தோராயமாக 2,500 செலவாகும். பீக் சீசனில் 20 நிமிட தனிநபர் சவாரிக்கு சுமார் ரூ.700 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆன்லைன் மூலம் உங்கள் டிக்கெட்டுக்களை பதிவு செய்து கொள்ளலாம். குழுவாக செல்பவர்களுக்கு அதற்கான பேக்கேஜ் வசதியும் உள்ளது.

உயரம்: உயரம் பொதுவாக வானிலையைப் பொறுத்தது. நல்ல வானிலை இருந்தால் அதிகபட்சம் 1000 அடி உயரம் வரை கொண்டு செல்லப்படுகிறது.

இடம்: மெரினா கடற்கரைகள் மற்றும் கோவளம் கடற்கரையில் இந்த வசதிகள் இருக்கிறது.

நேரம்: காலை 6-9 , மாலை 3-6 மணி வரை.

சராசரி பறக்கும் நேரம்: 10-15 நிமிடங்கள்

சென்னையில் பாராக்ளிடிங் வசதி வழங்கும் நிறுவனங்கள்:

அட்வென்ச்சர் ஏரோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்

பாலவாக்கம், சென்னை

ஏரோ ஸ்போர்ட்ஸ்

துரைப்பாக்கம், சென்னை

First published:

Tags: Marina Beach, Travel Guide, Travel Tips, Trip