மார்கழி மக்களிசை மேடையில் உற்சாக நடனம்.. இதுவரை பார்த்திராத வகையில் மாஸ் காட்டிய பா.ரஞ்சித்..!

பா.ரஞ்சித்

 • Share this:
  நீலம் பண்பாட்டு மையம் இயக்குநர், பா.ரஞ்சித் நடத்தி வரும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியின் 5 வது நாளான நேற்றைய ஒப்பாரி நிகழ்ச்சியின் இறுதியில் ரஞ்சித் மேடையில் உற்சாகத்துடன் ஆடிய நடன வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

  மார்கழி மாதம் என்றாலே கச்சேரிகளும் , கர்நாடக சங்கீதமும்தான் சென்னை முழுவதும் ஒளிக்கும். அதையெல்லாம் தலைகீழாக்கும் விதமாக 2018 ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய வானம் நிகழ்ச்சி சென்னை முழுவதும் களை கட்டியது.

  இந்நிகழ்ச்சி, நாட்டுப்புறப் பாடல்கள், கானா பாடல்கள் என சென்னைவாழ் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைத்திருக்கும். அப்படி இந்த வருடமும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் டிசம்பர் 24 தேதி தொடங்கப்பட்டு 31 தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் நாட்டுப்புறக் கலைஞர்கள், கானாப் பாடகர்கள் பலரும் பங்குபெற்று , பறை இசையுடன் மக்களை மகிழ்விக்கும் விதமான நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் அரகேற்றி வருகின்றனர். அதோடு சினிமாப் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்குகொள்வது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த், டி. இமான் , சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் பங்குபெற்றனர்.

  அந்த வகையில் 5 ஆம் நாளான ஒப்பாரி நிகழ்ச்சியில் ஒப்பாரி பாடல்களும், பறை இசையும் அரங்கத்தை அதிர வைத்தது. அதன் இறுதி நிறைவு நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் அரங்கத்தில் ஏறி பறை இசைக்கு நடனமாடும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.  எப்போதும் சில வார்த்தைகளையும், புன்னைகையை மட்டுமே உதிர்க்கும் ரஞ்சித் இந்நிகழ்ச்சியின் இறுதியில் யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் உற்சாகத்துடன் , முகம் நிறைய புன்னகையோடு நடனம் ஆடியது பலரையும் ரசிக்க வைத்தது. அவர் போடும் ஒவ்வொரு ஸ்டெப்புகளுக்கும் அரங்கத்தில் இருந்த இளைஞர்கள் கூச்சலிட்டு அவரை உற்சாகப்படுத்தும் விதம் காண்போர் யாரையும் ரசிக்க வைக்கும். இதோ அந்த வீடியோ....  இந்த நிகழ்ச்சிகள் இன்றோடு இன்னும் 3 நாட்கள் இருக்கின்றன. இன்றைய நிகழ்ச்சி ராஜா அண்ணமலைபுரத்தில் நடைபெறவுள்ளது. அடுத்த நாளுக்கான நிகழ்ச்சி பங்கேற்பாளர்களும், இடமும் அன்றைய நாளின் 5 மணிக்குத்தான் அறிவிக்கப்படும். இறுதி நாள் கேஸ்ட்லெஸ் கலக்டிவ் குழுவின் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
  Published by:Sivaranjani E
  First published: