முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த மொத்த இந்திய மாநிலத்துக்கும் ஒரே ஒரு ரயில் நிலையம் தானாம்! - எங்கே தெரியுமா?

இந்த மொத்த இந்திய மாநிலத்துக்கும் ஒரே ஒரு ரயில் நிலையம் தானாம்! - எங்கே தெரியுமா?

பைராபி

பைராபி

21,089 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிசோரம் மாநிலத்தின் தலைநகரமான ஐஜ்வாலில் ஒரு ரயில் நிலையம் கூட  இல்லை

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Mizoram, India

உலகத்தில் அதிக பணியாளர்களை கொண்டு இயங்கி வரும் நிறுவனமாக இந்திய ரயில்வே துறை தான் உள்ளது. அதே போல ஆசியாவிலேயே மிகப்பெரிய இரயில் வலையமைப்பு மற்றும் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உலகின் இரண்டாவது பெரிய ரயில் நெட்வொர்காக இருந்து வருகிறது. 1850களில் பம்பாய் முதல் தானே(thane) வரையான பாதையை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டது.

அன்று தொடங்கி சரக்கு அனுப்ப உருவாக்கப்பட்ட ரயில் பாதை பயணிகளை ஏற்றி செல்ல மாற்றப்பட்டது. அதன் பின்னர் விரைவு ரயில், அதிவிரைவு ரயில், மெட்ரோ, புல்லட் ரயில் என்று பயந்துகொண்டு இருக்கிறது ரயில்வே தொழில்நுட்பம். அதோடு வடக்கே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக லட்சக்கணக்கான ரயில்கள் தினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. சாலைகளில் இணைக்க முடியாத தூரங்களை எல்லாம் ரயில் தண்டவாளங்கள்தான் இணைத்து வருகின்றன.

இப்படி இருக்கும் காலத்தில், ஒரு மொத்த இந்திய மாநிலத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு ரயில் நிலையம் தான் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். மாவட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ரயில் நிலையங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் மாநிலத்திற்கே ரே ஒரு ரயில் நிலையமா என்று கூட தோன்றும். ஆனால் உண்மை அதுதான். அந்த மாநிலம் வடகிழக்கு இந்தியாவில்  உள்ள மிசோரம் மாநிலம்.

மிசோரம் மாநிலத்தில் மொத்தமாக 11 மாவட்டங்கள் உள்ளன. சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் இந்த மொத்த மாநிலத்திலும் பைராபி(Bairabi) என்ற நகரில் மட்டும்தான் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள யார் ரயிலில் போக ஆசைபட்டாலும் பைராபி நகருக்கு தான் கிளம்பி வர வேண்டும். நினைத்து பாருங்க.. சென்னை சென்ட்ரல் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கே ரயில் நிலையம் என்று சொன்னால் என்ன ஆகும். சும்மாவே சென்ட்ரல் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. மொத்தமாக வந்தால் மூச்சு நின்று விடும்.

ஆனால் மிசோரத்தில் அப்படி தான் நடந்து வருகிறது. மிசோரத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில்  பயணிகள் இந்த ரயில் நிலையத்தில் தான் காத்திருந்து ரயிலை பிடிக்க வேண்டும். ரேசெர்வேஷன் செய்யாவிடில் நிலை என்ன ஆகும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை! மாநிலத்தில் உள்ள ஒரே ரயில் நிலையம் என்பதால் இது நவீன வசதிகளை எல்லாம் ஒருங்கே கொண்டிருக்கும் என்று தப்பாக நினைவிடாதீர்கள்.

பைராபி ரயில் நிலையத்தில் முறையான வசதிகளும் எதுவுமே கிடையாது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம்  3 நடைமேடைகள் மட்டுமே உள்ளன. ரயில்கள் வந்து செல்வதற்கு நான்கு ரயில் வழித்தடங்கள்  உள்ளன. அதுவும் 2016-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் மிக சிறிய ரயில் நிலையமாகவே இருந்துள்ளது. 2016 இல்  மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தான் இந்த அளவுக்காவது முன்னேறியுள்ளது.

இத்தனை மக்களுக்கும் சேர்த்து ஒரே ரயில் நிலையம் இருக்கிறதே, என்று மிசோரமில் இன்னொரு ரயில் நிலையம் அமைப்பதற்கு இந்திய ரயில்வே சமீப காலத்தில் தான் பரிந்துரை செய்துள்ளது. மேலும்  பைராபி ரெயில் நிலையத்தை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதற்கான செயல் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.ரயில்வேயில் பரிந்துரையை அடுத்து பைராபி-சாய்ராங் ரெயில் பாதை திட்ட பணிகள் 51.38 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் பாருங்க: இந்த ஒரு ரயில் பாதைக்காக பிரிட்டிஷாருக்கு இன்றும் பணம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசு...

பொதுவாக தலைநகரத்திக்கு தான் மக்கள் வந்து பின்னர் மற்ற இடங்களுக்கு பிரிவார்கள். ஆனால் மொத்தமாக 21,089 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிசோரம் மாநிலத்தின் தலைநகரமான ஐஜ்வாலில் ஒரு ரயில் நிலையம் கூட  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கிழக்கு மாநிலங்கள் இந்த மாதிரியான விஷயங்களில் தான் பின்தங்கி விடுகிறது. சுற்றுலா துறை மேம்பட மற்ற பல முயற்சிகள் நடந்தாலும் போக்குவரத்துக்கு சிக்கல் பெரிய சிக்கலாக இருக்கிறது.

First published:

Tags: Indian Railways, Mizoram