ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆச்சரிய வரலாறு.. ஒடிசாவில் இவ்வளவு சங்கதி இருக்கா? டூர் மூலம் ஒரு பாரம்பரிய பயணம்!

ஆச்சரிய வரலாறு.. ஒடிசாவில் இவ்வளவு சங்கதி இருக்கா? டூர் மூலம் ஒரு பாரம்பரிய பயணம்!

ஒடிசா சுற்றுலா

ஒடிசா சுற்றுலா

ஒடிசாவின் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றை மேம்படுத்த உதவும் வகையில் இந்த வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Odisha (Orissa), India

ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்லும் போது அதன் வரலாறு , கட்டிடக்கலை, அந்த இடம் சார்ந்த கதைகள், கட்டியவர்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அவற்றை தெரிந்து கொள்ளாவிட்டால் அந்த இடத்தை பார்ப்பதே பயனற்றதாகிவிடும். இவற்றை சொல்ல கைட் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. அதற்கு ஒரு தீர்வு காணும் விதமாக ஒடிசா ஒரு முன்னெடுப்பை கொண்டு வந்துள்ளது.

ஒடிசாவில் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தின் சிறந்த வரலாற்று மற்றும் கலாச்சார தளங்களுக்கு நடைப்பயணத்தை மேற்கொள்ளும் போது அதன் வரலாற்றை ஒளி வடிவில் தெரிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவின் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றை மேம்படுத்த உதவும் வகையில் இந்த வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டன.

ஒடிசா வால்க்ஸ்(odissa walks) என்பது ஒடிசா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய முயற்சியாகும். இது 10 ஆம் நூற்றாண்டின் முக்தேஷ்வர், 11 ஆம் நூற்றாண்டின் லிங்கராஜ் கோவில், சாந்தி ஸ்தூபம், கந்தகிரி குகைகள் மற்றும் உதயகிரி குகைகள் ஆகியவற்றின் கண்கவர் நடைப்பயணத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.

சாகச விரும்பிகளுக்கு குட் நியூஸ்! கண்டிப்பா இந்த ராட்சத ஊஞ்சல மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த தளங்களில் சரியான தகவல் மற்றும் வரலாற்றை வழங்கும் வழிகாட்டி மூலம், பார்வையாளர்கள் இந்த தளங்களின் ஒரு பகுதியாக இருக்கும் வளமான கட்டிடக்கலை, சடங்குகள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

10 ஆம் நூற்றாண்டு முக்தேஷ்வர் கோவில்

முக்தேஷ்வர் கோவில் 10 ஆம் நூற்றாண்டின் கலிங்கத்தின் சந்திரவன்ஷி வம்சத்தில் எஞ்சியுள்ள இடமாகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் 10 ஆம் நூற்றாண்டின் கல் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோவிலில் உள்ள நுணுக்கமான சிற்பங்கள் பாதுகாக்கப்பட்ட ரகசியங்கள் மற்றும் புராண கதைகளைச் சொல்கிறது.

11 ஆம் நூற்றாண்டு லிங்கராஜ் கோவில்

நேர்த்தியான கோவில் கட்டிடக்கலைக்கு மற்றொரு உதாரணம் 11 ஆம் நூற்றாண்டின் லிங்கராஜா கோவில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், பண்டைய வேதமான பிரம்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. லிங்கராஜ் கோவில் ஒடிசாவில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும்.

நிலாவையும் நட்சத்திரங்களையும் ஜாலியா ரசிக்கலாம்... சுற்றுலாவை தொடங்க ராஜஸ்தான் அரசு திட்டம்

சாந்தி ஸ்தூபி

கிமு 261 கலிங்கப் போர் நடந்த இடத்தில் நீங்கள் சாந்தி ஸ்தூபி அல்லது அமைதி பகோடாவைக் காணலாம். தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள தௌலிகிரியில் சாந்தி ஸ்தூபி அமைந்துள்ளது. பேரரசர் அசோகரின் இதய மாற்றத்தை நினைவுகூரும் இந்த ஸ்தூபி, 1973 இல் கலிங்க நிப்பான் புத்தர் சங்கத்தால் கட்டப்பட்டது.

கந்தகிரி குகைகள்

கந்தகிரி குகைகள் முக்கியமான ஜெயின் புனிதத் தலங்களில் ஒன்று. இந்த பழங்கால குகைகளில் ஒரு காலத்தில் பல சமண அறிஞர்கள் இருந்தனர். கிமு 2 ஆம் நூற்றாண்டில் மன்னர் கர்வேலாவால் கட்டப்பட்ட இந்த குகைகள் ஜெயின் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

உதயகிரி குகைகள்

உதயகிரி குகைகளும் சமண அறிஞர்களுக்காக உருவாக்கப்பட்டவை. உதயகிரியில் மொத்தம் 18 குகைகள் உள்ளன. மன்னன் கர்வேலா, சமண மதத்தின் பக்கம் திரும்பியதால், ஒரு நாளுக்கு மேல் ஒரே இடத்தில் தங்காமல் பயணிக்கும் சமண அறிஞர்களுக்காக இந்த குகை தங்குமிடங்களை உருவாக்க முடிவு செய்தார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Odisa, Odisha, Tourism