வியட்நாமைச் சேர்ந்த Vietravel தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கடந்த வாரம் டெல்லியில் உள்ள வியட்நாம் தூதரகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின்போது, வியட்நாமுக்கு இந்தியா தான் சிறந்த சுற்றுலா சந்தை என்று கூறினார்.
"கொரானா பரவலால் முழுமையான சீனாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இந்தியா எங்களுக்கு சிறந்த சுற்றுலா சந்தையாக மாறி உள்ளது," என்று Vietravel இன் தலைமை நிர்வாக அதிகாரி டிரான் டோன் தி டுய் ANI இடம் கூறினார். தாய்லாந்திற்குச் செல்வதற்குப் பதிலாக வியட்நாமுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
“இந்திய சுற்றுலாப் பயணிகள் வியட்நாம் சென்று இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஆயிரம் ஆண்டு கலாச்சார தொடர்புகள், வியட்நாமின் சாம் கலாச்சாரம் மற்றும் பல யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தளங்களுடன் வியட்நாமின் இயற்கை நிலப்பரப்பின் தனித்துவத்தை ஆராய வேண்டிய நேரம் இது.
இதையும் படிங்க: உங்க சேலரி ஸ்லிப்ல இத கவனிச்சு இருக்கீங்களா.. இந்த ஆப்சன் இருந்தா உங்க பயணம் ஜாக்பாட் தான்
இரு நாடுகளுக்கும் இடையே பயண நேரம் வெறும் 5 மணி நேரம் தான். எனவே இந்த எளிமையான பயணத்தை இந்தியர்கள் அதிகம் மேற்கொள்ள வேண்டும்" என்று வியட்நாம் தூதர் ங்குயின் தானஹ் ஹை வேண்டுகோள் விடுத்தார்.
Vietravel நிறுவனம் வியட்நாம்-இந்தியா சுற்றுலாவிற்கு இடையே இருவழி நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்காக இந்திய நிறுவனத்தின் இரண்டு முக்கிய பங்குதாரர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடும். இந்த நடவடிக்கைகள் 2022 முதல் 2023 வரையிலான பருவத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவைக் காட்சிப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வியட்நாமிற்குச் செல்ல விரும்பினால், அவர்களுக்கு “விசா ஆன் அரைவல்” ஆப்ஷன் உள்ளது. அதாவது வியட்நாம் சென்ற உடன் அங்குள்ள விமான நிலையத்தில் விசா பெற்றுக்கொள்ளலாம்.
இந்த விசா, வியட்நாம் நாட்டிற்கு வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதன் பின்னர் அதை நீடித்துக்கொள்ளலாம். முன்கூட்டியே விசா பெறவில்லை என்றாலும் விரட்னாமிற்கு பயணம் செய்வது இவ்வளவு எளிதாக இருக்கும்போது மிஸ் பண்ணலாமா?
வியட்நாமில் சிறந்த இடங்களில், உலக பாரம்பரிய பட்டியலில் பட்டியலிடப்பட்ட ஃபோங் நா-கே பேங் தேசிய பூங்கா ஒரு வியத்தகு அரித்த சுண்ணாம்பு மலை குகை, ஹாலோங் விரிகுடா, கு சி மிலிட்டரி சுரங்கங்கள், மீகாங் நதியின் டெல்டா பகுதிகள், 19 ஆம் நூற்றாண்டின் நுயென் பேரரசர்களின் ஆட்சியின் நினைவுச்சின்னங்களால் சூழ்ந்த வியட்நாமின் மிகவும் வரலாற்று நகரங்களில் ஒன்றான ஹியூ எல்லாம் நம் கண்களுக்கும் மனதிற்கு விரிந்து வைக்க காத்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.