முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / New Year's Eve rules: சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கான புத்தாண்டு விதிகள்..

New Year's Eve rules: சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கான புத்தாண்டு விதிகள்..

மாதிரி படம்

மாதிரி படம்

2021 புத்தாண்டை நண்பர்களுடன் வெளியே சென்று கொண்டாட திட்டமிட்டிருந்தால் பின்வரும் SOPகள் அல்லது விதிகளைப் கண்டிப்பா பாத்துட்டு போங்க, ஏன்னா கவர்மன்ட் இப்போ ரொம்ப ஸ்ட்ரிக்ட்...

  • Last Updated :

2020 விடைபெற்று 2021 ஐ வரவேற்க தயாராகும் இந்த நேரத்தில் புத்தாண்டு தினத்தன்று உங்கள் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு எந்த நேரத்தில் தொடங்குகிறது என்பதை சரிபார்க்க விரும்புகிறீர்களா? சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், மற்றும் கொல்கத்தாவுக்கான விவரங்களை இங்கே செக் செய்து கொள்ளுங்கள்...

புத்தாண்டன்று உங்களுக்கு நண்பர்களுடன் ஏதேனும் பிளான் இருந்தால் இதை பார்த்துவிட்டு செய்யுங்கள். இந்தியாவின் பல பெருநகரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக இரவு ஊரடங்கு உத்தரவுகளைப் பார்க்கும்போது, 2021க்கான புத்தாண்டு கொண்டாட்டம் - கிறிஸ்துமஸ் மற்றும் தீபாவளி இரவுகளைப் போலவே - பொது இடங்களில் கடுமையான விதிகள் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக யுனைடெட் கிங்டமில் (United Kingdom) கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு, விதிகள் இப்போது கடுமையாக்கப்பட்டுள்ளது. 2021 புத்தாண்டை நண்பர்களுடன் வெளியே சென்று கொண்டாட திட்டமிட்டிருந்தால் பின்வரும் SOPகள் அல்லது விதிகளைப் கண்டிப்பா பாத்துட்டு போங்க, ஏன்னா கவர்மன்ட் இப்போ ரொம்ப ஸ்ட்ரிக்ட்...

பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்க்கான சட்ட திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கே காண்போம்.

சென்னை (Chennai):

தி நியூஸ் மினிட் (The News Minute) படி , சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் - சென்னையின் இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகள் பல நகர்புறங்களையும் ஊர்களையும் இணைக்கும், கோவிட் (Covid) காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய அனுமதி இல்லை.

Covid-19 தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் வழியாக ரிசார்ட்டுகளில் தங்கியிருக்கும் நபர்கள் டிசம்பர் 31 இரவு 10 மணி வரை மட்டுமே இந்த வழித்தடங்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கடற்கரைகள், பண்ணை வீடுகள் மற்றும் ஹோட்டல் / கிளப்புகளில் எந்த பார்ட்டிகளுக்கு அனுமதியில்லை.

டெல்லி (Delhi):

புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் பொது நிகழ்வுகள் அல்லது மொட்டை மாடி பார்ட்டிகளை நடத்தக்கூடாது என்று டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முறையான போலீஸ் அனுமதியின்றி நடைபெறும் எந்தவொரு செயல்பாடும் சட்டப்பூர்வமாக கருதப்படாது என்றும் இதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இருப்பினும், 2020 டிசம்பர் 31ம் தேதிக்கான விரிவான வழிகாட்டுதல்கள் 2020 டிசம்பர் 30 அன்று வழங்கப்படும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், டெல்லி என்.சி.ஆர் (National Capital Region), காஜியாபாத்-நொய்டா (U.P.), ஃபரிதாபாத்-குர்கான் (ஹரியானா) விதிகள் அந்தந்த மாநில அதிகார வரம்பின்படி மாறுபடும். இந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி- இந்த ஆண்டு நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஒரு இடத்தில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்க அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கூறியுள்ளனர்.

இது தவிர, டிசம்பர் 31ம் தேதி கவுதம் புத் நகரில் பார்ட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அனைத்து ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளின் உரிமையாளர்கள் அவ்வாறு செய்வதற்கு முன்பு மாவட்ட நீதிபதி அல்லது போலீஸ் கமிஷனரிடமிருந்து (District Magistrate or Commissioner of Police (CP) ) அனுமதி பெற வேண்டும், அத்துடன் எதிர்பார்க்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கையையும் தெரிவிக்க வேண்டும். ஒரு வாளகத்திற்குள் அந்த இடத்தின் திறனில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு, மற்ற இடங்களில் ஒரே நேரத்தில் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்று உத்தரபிரதேச மாநில அரசு கூறியுள்ளது.

New year celebrations, புத்தாண்டு கொண்டாட்டங்கள்,

ஒருவர் "புத்தாண்டுக்கான பிளானை ஏற்பாடு செய்வதற்கான அனுமதியை போலீஸ் அலுவலகத்தின் உள்ளூர் துணை ஆணையரிடமிருந்து பெறப்பட வேண்டும், மேலும் அமைப்பாளர்கள் தங்கள் பெயர்கள், முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. திறந்தவெளிகளுக்கான அதிகபட்ச வரம்பு, இதற்கிடையில், மொத்த திறனில் 40% ஆக இருக்கும், தெர்மல் ஸ்கேனிங், சானிடைசர், மாஸ்க், சமூக இடைவெளி போன்ற அனைத்து ஏற்பாடுகளும் இருக்க வேண்டும், ”என்று போலீஸ் கமிஷனர் அலோக் சிங் (Commissioner of Police Alok Singh) கூறியுள்ளார் .

பெங்களூரு (Bengaluru):

பெங்களூரு (Bengaluru) நகரத்தில் கோவிட் -19 வைரஸ் பரவாமல் இருப்பதற்கான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அமல்படுத்த பெங்களூரு நகர காவல்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் அல்லது திறந்தவெளிகளில் நான்கு பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது. குடும்பங்கள் தங்கள் சொந்த NYE ஏற்பாடுகளை வைத்திருக்கவேண்டும், ஆனால் பொது நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது.

4க்கும் மேற்பட்டவர்களைக் கூட்ட கிளப்புகளுக்கு அனுமதியில்லை மேலும் அங்கு பொது கொண்டாட்டங்கள் எதுவும் கூடாது என்றும் காவல்த்துறை கூறியுள்ளது. ஹோட்டல்கள், மால்கள், உணவகங்கள், கிளப்புகள் போன்றவை வழக்கமான செயல்பாட்டைக் கொண்டிருக்கலாம், ஆனால் டி.ஜே, பார்ட்டிகள்,டான்ஸ் நிகழ்ச்சிகள், இசை இரவுகள், போன்ற சிறப்பு நிகழ்வுகள் எதற்கும் அனுமதி இல்லை. ஹோட்டல்கள் இயங்க அனுமதி உண்டு. உணவகங்கள் அனுமதிக்கப்படுகின்றன, மின்-டோக்கன்களுடன் முன்பதிவு மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஹைதராபாத் (Hyderabad):

ஹைதராபாத் (Hyderabad) காவல்துறையினர் 2020 டிசம்பர் 31ம் தேதி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். புத்தாண்டு நிகழ்வுகள் அனைத்தும் டிசம்பர் 31 இரவு 8 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை 1 மணி வரை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.

Outer Ring Road (ORR) டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணி வரை மூடப்படும், விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு என்று காவல் துறையினர் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (New Indian Express) செய்தி வெளியிட்டுள்ளது.

ஏதேனும் விதிமீறல் நடந்தால் அனைத்து நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். காவல்துறையின் முன் அனுமதியின்றி புத்தாண்டு நிகழ்வுகள் எதுவும் ஏற்பாடு செய்யக்கூடாது என்று சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனர் (Cyberabad police commissioner VC Sajjanar) எச்சரித்துள்ளார்.

கொல்கத்தா (Kolkata):

புத்தாண்டு தினத்தன்று கொல்கத்தாவில் பொது மக்கள் பங்குபெறும் நிகழ்வுகள் உதாரணமாக புதுடெல்லியில் நடந்து வரும் வேளாண் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைப் போல சில நிகழ்வுகள் நடைபெறும். அதோடு கூட CAA ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும். இதனால் பல இடங்களில் COVID-19 கட்டுப்பாட்டுகள் கடுமையாக அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை (Mumbai) :

இரவு ஊரடங்கு உத்தரவு (இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை) ஏற்கனவே 2021 ஜனவரி 5 வரை நடைமுறையில் உள்ளது. புத்தாண்டு தினத்தன்று 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட வயதான குடிமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மத அல்லது கலாச்சார பேரணிகள் / நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை.

அதிகபட்சமாக நகரத்தில் சுமார் 35,000 மும்பை காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு நிலைமையை (law and order situation) காப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

COVID-19 விதிமுறைகளை மீறாமல் இரவு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளின்படி, உணவகங்கள், விடுதிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிறுவனங்கள் இரவு 11 மணிக்குள் கடைகளை அடைத்திருக்க வேண்டும்.

2020 டிசம்பர் 31ம் தேதி இரவு 11 மணிக்குள் கடையை மூடத் தவறும் உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

மும்பைக்காரர்கள் கேட்வே ஆஃப் இந்தியா, மரைன் டிரைவ், கிர்காம் சவுபட்டி, ஜுஹு, கோராய் மற்றும் மத் தீவு பகுதி (Gateway of India, Marine Drive, Girgaum Chowpatty, Juhu, Gorai and Madh Island area) போன்ற நகரத்தில் தங்களுக்கு பிடித்த இடங்களை நோக்கி வருவதற்கு எந்த தடையும் இருக்காது, ஆனால் சமூக இடைவெளி, மாஸ்க் மற்றும் COVID-19 விதிமுறைகளை பின்பற்றவேண்டும். மேலும் இந்த இடங்களில் கூட்டமாக மக்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

New year Resolution | 4,000 ஆண்டுகளாக தொடரும் 'நியூ இயர் ரெசல்யூஷன்' - இது எதற்காக என்று தெரியுமா?

மொட்டை மாடிகளிலும் படகுகளிலும் எந்தக் பார்ட்டிகளையும் நடத்த அனுமதி இல்லை, அதை மீறினால் குறிப்பிட்ட நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். ஈவ் டீசிங், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், துன்புறுத்தல் (Eve-teasing, no drunken-driving, no harassment) போன்றவற்றிற்கு வழக்கம் போல் அனுமதியில்லை. மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருக்கக்கூடும் என்பதால் போலீசார் விழிப்புடன் உள்ளனர்.

இரவு ஊரடங்கு உத்தரவின் போது, சில விஷயங்களுக்கு தளர்வு இருக்கும். "பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு (பப்கள், உணவகங்கள், தியேட்டர்கள் போன்றவை) பயன்படுத்தப்படும் நிறுவனங்கள் தவிர அனைத்து வணிக நடவடிக்கைகள் மற்றும் நைட் ஷிப்டுகள் அனுமதிக்கப்படும். இவை இரவு 11 மணிக்கு மூடப்பட வேண்டும்" என்று மும்பை காவல்துறை இணை ஆணையர் விஸ்வாஸ் நங்ரே பாட்டீல் (Joint Commissioner of Mumbai Police, Vishwas Nangre Patil) தெரிவித்தார்.

top videos

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதையாவது உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பிளான் செய்து வைத்திருந்தீர்கள் என்றால் அதை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கொண்டாடுங்கள் அல்லது பிளானை வேறு ஒரு தினத்திற்கு மாற்றலாம் அல்லது எளிமையாக வீட்டிலேயே கொண்டாடலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் உஷார் படுத்துங்கள். கோவிட் தொற்று போன்ற நேரங்களில் அரசிற்கு நாம் ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை அல்லவா.

    First published:

    Tags: New Year 2021, New Year Celebration