ஏப்ரல் 1 முதல் வழிகாட்டியின் உதவியின்றி நேபாளத்தில் தனியாகவோ மலையேற்றம் செல்வதைத் தடை செய்ய நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
உலகில் உள்ள மலை ஏற்ற வீரர்கள் அனைவரும் என்றாவது ஒரு நாள் இந்த மலையை ஏறிபார்த்தே ஆக வேண்டும் என்று நினைப்பது இமயமலை தான். உலகின் உயரமான மலை உச்சி என்று அறியப்படும் எவரெஸ்ட் நேபாளத்தில் அமைந்துள்ளது. இந்த மலை உச்சியை அடைவதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நேபாளத்திற்கு வருகிறார்கள்.
நேபாள நாட்டின் பொருளாதாரத்தில் இது ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. தற்போது அதற்காக வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மலை ஏற்றத்திற்காக வரும் பயணிகள் தனியாக வரும்போது, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
உள்நாட்டு பயணிகள் தனியாக மலை ஏற அனுமதிக்கிறது. அவர்கள் விருப்பப்பட்டால் வழிகாட்டியை அழைத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்து மலையேற்றம் செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் அவர்களது பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட முடிவு என்று நேபாள சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் மணி ராஜ் லாமிச்சனே(Mani Raj Lamichhane) கூறினார். "ஆண்டுதோறும் 40 முதல் 50 வரையிலான மலையேற்றப் பயணிகள் மலையேற்றத்தை மேற்கொள்ளும் போது காணாமல் போகின்றனர். அவர்களை தொடர்பு செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால் நேபாளம் பாதுகாப்பான இடமாக இல்லை என்ற செய்தி உலகம் முழுவதும் நினைக்கும் அளவிற்கு மாறிவிட்டது.
"எனவே இந்த முடிவின் மூலம் நேபாளத்தில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மலையேற்றத்தை ஊக்குவிக்க முடிவு செய்தோம். இந்த முடிவின் பின்னணியில் உள்ள மற்றொரு காரணம் நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும்" என்று அவர் மேலும் கூறினார்.
சுதந்திரமான மலையேற்றம் செய்பவர்கள் தங்கள் சொந்த பயணங்களை திட்டமிடுபவர்கள் மற்றும் மலையேற்ற ஏஜென்சிகளின் உதவியின்றி தனியாக பயணம் செய்ய விரும்புபவர்கள் நேபாள நாட்டின் விலை மதிப்புமிக்க பயணிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் பயணங்களை மேம்படுத்தவே இந்த நடவடிக்கைகளை எல்லாம் எடுத்து வருகின்றன.
லாமிச்சானே இன் கூற்றுப்படி, கொரோனா பாதிப்புக்கு முன்பாக 46,000 க்கும் மேற்பட்ட தனி வெளிநாட்டு மலையேற்றக்காரர்கள் சுற்றுலா வாரியத்திடமிருந்து அனுமதி பெற்றனர். 2022 இல் இந்த எண்ணிக்கை 19,415 ஆக இருந்தது.
இதையும் படிங்க: சாக்கடல் மட்டுமல்ல... இந்த ஏரியிலும் நீங்கள் நீந்தாமல் மிதக்கலாம்... எங்க இருக்கு தெரியுமா?
ஆண்டுதோறும் வரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் அவர்களது பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தவும், நேபாளத்தின் மலையேற்ற ஏஜென்சிகள் சங்கம் 2012 ஆம் ஆண்டு முதல் தனியாக மலையேற்றம் செய்பவர் ஒரு வழிகாட்டியை உடன் அழைத்துசெல்லுமாறு பரப்புரை செய்து வருகிறது. அது தற்போது கட்டாயமாக்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.