"மம்மி" என்ற வார்த்தையைக் கேட்டதும், நமக்கு தானாகவே எகிப்தின் நினைவுதான் வரும். எகிப்தில்தான் உடல்களை பதப்படுத்தி மம்மிகளாக வைத்திருப்பார்கள் என்று படித்திருக்கலாம். அனால் இந்தியாவில் ஒரு மம்மி இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. இன்று அதை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் குயே என்ற கிராமத்தில்தான் இது உள்ளது. மம்மிபிகேஷன்( mummification ) என்று அழைக்கப்படும் முறையில் சில வகையான தாதுக்களை எண்ணெயோடு கலந்து இறந்த உடல்கள் மேல் தடவப்பட்டு அந்த உடல்கள் பாதுகாக்கப்படும். ஆனால் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் கிடைத்துள்ள மம்மி முழுக்க முழுக்க இயற்கையாக பதப்படுத்தப்பட்டது.
இப்படி ஒரு மம்மி இருப்பது 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளி உலகத்திற்கு தெரியாமலே இருந்தது. 1975 இல் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில நிலங்கள் பிளவுபட்டன. அப்போது ஸ்பிட்டியில் உள்ள புகழ்பெற்ற தபோ மடாலயத்திலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள காலத்தால் தேய்ந்த கல்லறையை ஒன்று வெளிப்பட்டது.
அந்த கல்லறை உள்ளே தெளிவான தோல், முழுமையான பற்கள், சிரிக்கும் உதடுகள், தலையில் முடியுடன் பதப்படுத்தப்பட்ட ஒரு உடல் இருந்துள்ளது. அனால் 2004 இல் தான் அந்த கல்லறை முழுமையாக திறக்கப்பட்டு அதில் இருந்த பதப்படுத்தப்பட்ட உடல் வெளியே எடுக்கப்பட்டது. இது 500 ஆண்டுகள் பழமையான சங்கா டென்சின் என்ற புத்த துறவியின் மம்மியாக்கப்பட்ட உடல் என்பது தெரிய வந்தது.
புத்த மாதத்தில் இயற்கையாக உடலை பதப்படுத்தும் நுட்பங்கள் சிலவற்றை சொல்கின்றனர். குறிப்பாக புத்த துறவிகளின் சோகுஷின்புட்சு என்று அழைக்கப்படும் நியிங்மா பிரிவு துறவிகள் தான் இதை கையாள்கின்றனர். உடலின் கொழுப்புகள் மற்றும் திரவங்களை நிலையான விகிதத்தில் குறைக்கும்போது அது இயற்கை மம்மிபிக்ஷனுக்கு உதவுகிறது.
கொழுப்புகள்தான் கிடந்த பின்னர் உடலை அழுகை வைக்கிறது.
அதை தடுக்க துறவிகள் பார்லி, அரிசி மற்றும் பருப்பு வகைகளை தவிர்த்து உடலில் கொழுப்பை சேரவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர். அதன் பின்னர் த்யானத்தில் அமர்ந்து பட்டினி இருக்கும் பொதுஅவர்களது மேல் மெழுகு பூசப்படுகிறது. இது தோலை மெதுவாக வறண்டுபோக செய்கிறது. இப்படியே 3 ஆண்டுகள் உலர வைத்து பின்னர் புதைக்கின்றனர். இதனால் தாதுக்கள் ஏதும் இல்லாமல் உடல் பதப்படுத்தப்படுகிறது.
ஜப்பானில் உள்ள வடக்கு ஹோன்சு தீவில் இயற்கையாக பதப்படுத்தப்பட்ட மம்மிகள் நிறைய கிடைத்துள்ளன. அதே வழிமுறையில் தான் இந்த துறவியின் உடலும் பதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் 500 ஆண்டுகளுக்கு முன் ஹிமாச்சல பகுதியில் தேள் மற்றும் பிளேக் தொல்லை அதிகரித்து வந்ததால் புத்த துறவி இங்கே தனது உடலை இயற்கையாக பதப்படுத்தி புதைக்க முடிவெடுத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் அவர் உயிரோடு இருக்கும்போதே இந்த உடலை பதப்படுத்தும் பணி தொடங்கியதாம். இவர் உயிர் பிரிந்த பின்னர் அடிவானில் ஒரு வானவில் தோன்றியதாகவும் அதற்கு பின் இங்கு இருந்த கொடிய தேள்கள் காணாமல் போனதாகவும் உள்ளூர் கதைகள் கூறுகின்றன.
தற்போது கல்லறை கிடைத்த இடத்தில் கண்ணாடி கூண்டுக்குள் பதப்படுத்தப்பட்ட துறவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் துறவியை இறைவனாக வழிபடுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Himachal Pradesh, Mummy, Travel