ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இமயமலையில் 428 கிமீ 'லே -மணாலி ' சாலையை நடந்து கின்னஸ் சாதனை படைத்த மருத்துவர்... எவ்வளவு நேரத்தில் தெரியுமா?

இமயமலையில் 428 கிமீ 'லே -மணாலி ' சாலையை நடந்து கின்னஸ் சாதனை படைத்த மருத்துவர்... எவ்வளவு நேரத்தில் தெரியுமா?

மஹிந்தர்

மஹிந்தர்

2021 இல் 6 நாட்கள் மற்றும் 12 மணிநேரத்தில் கால் நடையாக லேயில் இருந்து மணாலிக்கு இந்தப் பயணத்தை முடித்த அல்ட்ரா ரன்னர் சிஃபியா கான் அமைத்த முந்தைய சாதனையை மகாஜன் முறியடித்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Leh, India

நாசிக்கை சேர்ந்த பல் மருத்துவர் மகேந்திர மகாஜன் என்பவர் ஒரு புதிய உலக சாதனையை படைத்து இந்தியாவின் பெருமையை மேலும் ஒரு கட்டம் மேலே உயர்த்தியுள்ளார்.

அதுவும் சாதாரண சாதனை என்று சொல்லிவிட முடியாது. இமயமலையின் லேஹ்-மனாலி நெடுஞ்சாலை என்பது லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லே மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலியுடன் இணைக்கும் வட இந்தியாவில் உள்ள 428 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலை ஆகும். லே மற்றும் மணாலி இடையே நடந்தே அதிவேக பயணத்தை முடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் மஹேந்திரன்.

கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, கின்னஸ் புத்தகம் அதிகாரப்பூர்வமாக நாசிக்கைச் சேர்ந்த பல் மருத்துவர் மகேந்திர மகாஜனின் உலக சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையும் படிங்க :   மைசூர் டூ ராமேஸ்வரம்.. அம்மாவிற்காக 60,000 கிமீ ஆன்மிக பயணம் செய்யும் மகன்!

இந்த ஆண்டு ஜூலை மாதம், மஹாஜன் லே மற்றும் மணாலி இடையே 428 கிமீ கால்நடையாக பயணித்தார். அதோடு இந்த பயணத்தை நான்கு நாட்கள் மற்றும் 21 மணி நேரத்தில் முடித்தார்.

இதற்கு முன்னர் , 2021 இல் 6 நாட்கள் மற்றும் 12 மணிநேரத்தில் கால் நடையாக லேயில் இருந்து மணாலிக்கு இந்தப் பயணத்தை முடித்த அல்ட்ரா ரன்னர் சிஃபியா கான் அமைத்த முந்தைய சாதனையை மகாஜன் முறியடித்தார். ஆனால் அவர் பயணித்த போது இடையே லே-மணாலி இடையே அடல் சுரங்கப்பாதை இல்லை. அதனால் அவர், ரோஹ்தாங் கணவாய் வழியாக ஏறி மொத்தம் 480 கிமீ பயணித்து சாதனையை முடித்தார்.

தனது பயணத்தைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்ட மகாஜன். வழியெங்கும் ராணுவ வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் தன்னை உற்சாகப்படுத்தியாக குறிப்பிட்டார். மணாலிக்கு அருகிலுள்ள அடல் சுரங்கப்பாதை வழியாக நடப்பதற்கு அனுமதி பெற நேரம் கூடுதலாக செலவானத்தைத் தவிர வேறு எங்கும் எந்த நேர விரயமும், அனுமதி பெற எந்த சிரமமும் இல்லை என்றும் கூறினார்.

இப்போது, ​​மஹாஜனுக்கு அதிகாரப்பூர்வமாக லே மற்றும் மணாலி இடையே நடைபயணம் மேற்கொண்டதற்காக கின்னஸ் புத்தகத்தின் சான்றிதழ் கிடைத்துள்ளது.

First published:

Tags: Guinness, Manali, Travel, World record