சென்னையை சுற்றி கடல், கடற்கரை, மால்கள் மட்டுமல்லாது சில நீர்வீழ்ச்சி, ட்ரெக்கிங் ஸ்பாட்களும் உள்ளன. அதில் முக்கியமானது நாகலாபுரம். பாதுகாப்பு காரணங்களுக்காக மொடப்பட்ட இடம் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 70கிமீ தொலைவில் ஆந்திர பகுதியில் அடர்ந்த காடுகள், தெளிந்த நீரோடை, அள்ளித்தெளிக்கும் நீர்வீச்சி என்று இயற்கையின் மடியில் சுகமாக உலாவர ஏற்ற இடமாக நாகலாபுரம் உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில அழகிய ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
நாகலாபுரம் பகுதியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சுற்றுலா சென்ற சிலர் நீர்வீழ்ச்சியில் சிக்கி மரணமடைந்தனர். மக்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்னர் தற்போது பாதுகாத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வனத்துறையினர் உதவியோடு நீர்வீழ்ச்சி மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.
இது ஆந்திர மற்றும் தமிழக மக்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வெயில் காலம் தொடங்கிவிட்டது. வார இறுதியில் குடும்பம் , குழந்தைகளோடு எங்கே செல்லலாம் என்று திணறும் நேரம் நீர்வீச்சி திறக்கப்பட்ட செய்தி வந்துள்ளது. இதனால் இந்த கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு பிக்கினிக் ஸ்பாட் கிடைத்துவிட்டது.
ஏற்கனவே நீர்வீழ்ச்சி திறக்கப்பட்ட தகவல் அறிந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் நாள்தோறும் நீர்வீழ்ச்சிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்வோர் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதன் மூலமாக, மேலும் பலர் இது குறித்து அறிந்து கொண்டு நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தற்போது ஏராளமான பயணிகள் வருவதால் அங்கு மேலும் சில வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் உள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகளையும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து திறக்க வேண்டும் என்றும், கழிப்பறை மற்றும் உணவகங்களை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரே குறை என்னவென்றால் இந்த இடத்திற்கு பொதுப் போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. தனியார் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். பைக் ட்ரிப் செல்பவர்களுக்கு சரியாக இருக்கும்.
ஒரு வாகனத்துக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது போக நுழைவுக்கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. ஆனால் காலை முதல் மாலை வரை குடும்பத்துடன் கொண்டாட ஏற்ற ஸ்பாட்டாக இது இருக்கும்.
இதையும் பாருங்க: இந்த மார்ச் மாதம் புதிய தம்பதிகள் ஹனிமூன் செல்ல சிறந்த ஸ்பாட்கள்..!
மேலும் இங்குள்ள காடுகளுக்குள் குழந்தைகளோடு ஒரு குட்டி ட்ரெக்கிங் பயணமும் போகலாம். வார இறுதி நாட்கள் வந்துவிட்ட நிலையில் இப்போவே வண்டியை நாகலாபுரம் போக ரெடி பண்ணுங்க பாஸ்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.