நாகலாந்து மாநிலம் மாநிலத் தலைநகர் கோஹிமாவில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோனோமா கிராமம் ஒரு காலத்தில் வேட்டைக்காரர்களின் கிராமமாக இருந்தது. பல நூற்றாண்டுகள் பழமையான ,கோனோமா இந்தியாவின் முதல் பசுமை கிராமமாகும். இதன் பரிணாம வளர்ச்சி எப்படி நடந்தது தெரியுமா?
ஆங்கிலேயர் ஆட்சியின் போது துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இங்கு வேட்டையாடும் வாழ்க்கை முறை இருந்து வந்தது. வாழ்வாதாரத்திற்காக வேட்டையாடுவதில் இருந்து, அது லாபத்திற்கான வேட்டையாக மாறியது. மெதுவாக, உள்ளூர் சமூகங்கள் தங்கள் காடு அழிந்து வருவதை உணர்ந்தனர்.
காடு குறைவாக உற்பத்தி செய்யத் தொடங்கியபோது, கிராமப் பெரியவர்கள் பல நூற்றாண்டுகளாக காட்டை மோசமாக நடத்தியதற்காக வன தெய்வமான சிகி-யு (Chiikhie-u) கொடுத்த சாபமாகக் கருதினர் . முழு கிராமமும் தங்கள் காடுகளை பாதுகாக்க உறுதிபூண்டது.
இதையும் படிங்க : 105 உடல்கள்.. காவு வாங்கும் காடு.. தொடரும் மர்மம்.. திகில் நிறைந்த ஜப்பான் காடு!
விரைவில் கிராம பெரியவர்கள் அனைத்து வகையான வேட்டையாடுதல் மற்றும் வன வளங்களை தவறாக பயன்படுத்துவதற்கு தடை விதித்தனர். அனைத்து மரத் தேவைகளுக்கும் காடுகளின் ஒரு பிரத்யேகப் பகுதி ஒதுக்கப்பட்டது. அதைத் தாண்டி வெளியே, மரங்களை வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் இந்தியாவின் முதல் பசுமை கிராமமாக மாறியது. ஆசிய அளவில் கூட இது தான் முதல் பசுமை கிராமமாம்.
இன்றைய கோனோமா இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமாகும். பசுமையான காடுகள், அழகான வயல்வெளிகள் என்று எழிலாடி கிடக்கிறது. கோனோமா கிராமம் காட்டு பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளைப் பார்ப்பதற்கும் சிறந்த இடமாக உள்ளது. இங்குள்ள அடர் காடுகள் தவிர்த்து கொனோமா கோட்டை ஒன்று உள்ளது. இங்குள்ள நாகர் இனத்திற்கும் ஆங்கிலேயர்களுக்கும் போர் நடந்த போது 'வடகிழக்கு பகுதியின் வலுவான கோட்டை' என்று ஆங்கிலேயர்கள் அதை வர்ணித்துள்ளனர்.
அதேபோல் பெண்வழி சமூக அமைப்பை கொண்டுள்ள இந்த கிராமத்து பெண்கள் தங்கள் பணிகளையும் சமூக கருத்துக்களை விவாதிக்கவும் குவேஹௌ என்ற இடத்தை நிறுவியுள்ளனர். வட்டமாக கற்களால் உட்காரும் இருக்கைளால் அமைக்கப்பட்டுள்ளது.
கொனோமா கிராமத்தின் நடுவில், உள்ளூர் அங்கமி மக்கள் சமூகக் கூட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக ஒன்றுகூடுகின்றனர். இவை 'டஹு' என்று அழைக்கப்படுகின்றன. அவை சமூக சமையலறைக்கு அடுத்ததாக அமைந்துள்ளன. திருவிழாக்கள், விழாக்கள் மற்றும் பிற சந்தர்ப்பங்களில், முழு கிராமத்திற்கும் உணவு பெரிய அளவில் சமைக்கப்படுகிறது.
இதையும் படிங்க : திண்டுக்கல்லில் அழகு கொஞ்சும் பன்றிமலை.. பட்ஜெட் ட்ரிப்புக்கு பக்கா இடம்..!
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) சமீபத்தில் உலகம் முழுவதும் இருந்து மொத்தம் 32 இடங்கள் 'சிறந்த சுற்றுலா கிராமங்கள் 2022' என அறிவித்துள்ளது. மேலும், உலகெங்கிலும் உள்ள மேலும் 20 கிராமங்கள் UNWTO இன் மேம்படுத்தல் திட்டத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த 52 கிராமங்கள் UNWTO சிறந்த சுற்றுலா கிராமங்கள் உலகளாவிய வலையமைப்பின் ஒரு பகுதியாக மாறும்.
மேம்படுத்தல் திட்டம் என்றால் என்ன?
ஐக்கிய நாடுகளின் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமமாக அங்கீகரிக்கப்படுவதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் UNWTO மற்றும் அதன் கூட்டாளர்களிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற தகுதியுடையவை. இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள கோனோமா கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கிராமங்களில் ஒன்றாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nagaland, Travel, Travel Guide, United Nation