ஒரு சாலையில் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் வண்டியை நிறுத்திவிட்டால் வண்டி தானாக 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது செல்லும் என்று சொன்னால் அதை என்னவென்று நினைப்பீர்கள்… அமானுஷ்யம் என்று சொல்வீர்களா? மர்மம் என்று நடுங்குவீர்களா? அறிவியல் என்று சொல்வீர்களா? அப்படியான ஒரு இடத்தை பற்றி தான் இதில் நாம் பார்க்க இருக்கிறோம்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேவிலிருந்து கார்கில் நோக்கி சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய தேசிய நெடுஞ்சாலை பகுதியை காந்த மலை (Magnetic Hill) என்று அழைக்கின்றனர். இந்த இடத்தில் வரையப்பட்டுள்ள பெட்டிக்குள் நிறுத்தும் வாகனம் தானாக நகர்கிறதாம். நகர்வது மட்டும் அல்லாமல் யாருமே இயக்காமல் வண்டி சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்லுமாம். இதற்கு பல விதமான கதைகள் சொல்லப்படுகிறது.
முதலாவது, லடாக்கின் காந்த மலையில் வசிக்கும் கிராமவாசிகள் ஒரு காலத்தில் அந்த பகுதியில் மக்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சாலை ஒன்று இருந்ததாக நம்புகிறார்கள். தகுதியானவர்கள் நேரடியாக அந்த சொர்க்க பாதைக்கு இழுக்கப்பட்டனர். அதே முறையில் தான் இப்போதும் அந்த இடத்தில் வாகனங்கள் இழுத்து செல்லப்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
மறுபுறம் கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில், அமைந்துள்ள இந்த மலையானது உலோகப் பொருட்களை ஈர்க்கும் காந்த பண்புகளைக் கொண்டிருப்பதாக மற்றொரு கோட்பாடு கூறப்படுகிறது. அந்த காந்த ஈர்ப்பால் தான் வாகனங்கள் ஈர்க்கப்பட்டு நகர்வதாக கூறுகின்றனர்.
இந்த மலையின் காந்த சக்தியால் சாலையில் செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி, இந்த பகுதிக்கு மேலே பறக்கும் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் கூட காந்த தாக்கத்தை உணர்வதாக கூறுகின்றனர். விபத்துகளைத் தவிர்க்க, இந்த மலையின் மேலே ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் பறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருவதாக இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையினரும் (ITBP) கூறுகின்றனர். இப்போதும், இந்திய விமானப்படை விமானிகள் இந்த காந்த மலையிலிருந்து சிறிது தூரம் விலகியேச் செல்கின்றனர்.
இருப்பினும், உண்மைக்கு மிக நெருக்கமான மூன்றாவது விளக்கம் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. அது என்னவென்றால் இங்கு இருப்பது ஒரு காட்சி மாயை ( optical illution) என்பதாகும். காந்த மலையில் சுற்றியுள்ள நிலம் ஒரு ஒளியியல் மாயையை உருவாக்குகிறது. அந்த மாயையின் விளைவால் கீழ்நோக்கி செல்லும் சாலை மேல்நோக்கி செல்வது போல தோற்றமளிக்கிறது. உண்மையில் வண்டி இறக்கத்தில் தான் செல்கிறதாம். பொதுவாக வண்டி மேட்டில் விட்டால் இரக்கம் வரை தானாக செல்லும் தானே. அது தான் நடக்கிறதாம். ஆனால் பார்ப்பதற்கு மலை ஏறுவது போலவே தோன்றுமாம்.
கதந்தமோ, ஒளியியல் மாயையோ எதோ ஒன்று அதை தனித்துவமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளது. இந்த விசித்திர காட்சியை அனுபவிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் காந்த மலையை அடையாளம் காண உதவும் வகையில் இந்த இடத்தில உள்ளூர் நிர்வாகம் ஒரு போர்டையும் வைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ladakh, Travel, Travel Guide