இந்திய நாடு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதிகளை தனது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலேயே எழுதியுள்ளது. சட்டத்தில் மட்டும் அல்லாது நிஜத்திலும் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிருத்துவர்கள் எல்லாரும் சகோதர்களாக பழகுவதை கண்டிருப்போம். ஆனால் புனித தளங்கள் என்று பார்க்கும் போது மற்ற சமயத்தவரை அனுமதிக்க கொஞ்சம் தயக்கம் இருக்கும்.
ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து 15 கிமீ தூரத்தில். நைனார் கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு சௌந்தர நாயகி சமேத நாக நாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இஸ்லாமியர்களுக்கான சிவன் கோவில் என்று சொல்லப்படுகிறது. காலம் காலமாக இங்கு இஸ்லாமியர்கள் இந்து கடவுளான சிவனை வழிபாடு செய்துவிட்டு போகின்றனர்.
இதையும் படிங்க: நீர் வீழ்ச்சி, படகு சவாரி, அருவி என தண்ணீர் காதலர்களுக்கான சூப்பர் ஸ்பாட்... பெடகாட் பற்றி தெரியுமா..?
அதற்கு ஒரு முக்கிய கதையை சொல்கின்றனர். முல்லா சாகிப் என்ற இஸ்லாமியர் ஒருவரால்தான் இந்த ஊருக்கு நைனார் கோவில் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பிறவியிலேயே பேசும் திறனற்ற தன் பெண் குழந்தைக்கு பேச்சு வரவைக்க முல்லா சாகிப் பல மசூதிகள், வழிபாடுகள், மருத்துவம் என தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். ஆனால் குழந்தை பேசவே இல்லை.
பின்னர் இந்த ஊரில் உள்ள வாசுகி தீர்த்தத்தில் குளித்து விட்டு இறைவனை வழிபாடு செய்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அந்த சிறுமி கோயில் வளாகத்தில் தனது தந்தையை "நைனா" என்று அழைத்தது. அதனாலேயே இந்த கோவிலுக்கு நைனார் கோவில் என்று பெயர் வந்ததாம். அதிலிருந்து பேசும் திறனற்றவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
அன்றிலிருந்து உள்ளூர் மற்றும் வெளி ஊர்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து வழிபாடு செல்கின்றனர். பள்ளியறை அருகே இஸ்லாமியர்கள் அமர்ந்து இங்கு தொழுகை செய்வதை காணலாம். சக்தி வாய்ந்த சிவபெருமான கருதப்படும் இக்கோயில் மூலவரை அவர்கள் "நைனா முகமது" என்று அன்புடன் அழைக்கின்றனர்.
அதோடு உடல் நலம் சரி இல்லாத குழந்தைகல் இருந்தால் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு புற்றடியில் பூட்டு போட்டு சாவியை உண்டியலில் செலுத்தி வேண்டுதல் செய்கின்றனர்.
இந்த கோவிலின் முக்கிய தெய்வமான நாக நாதர் பல அநீதிகளை தடுத்து நியாயம் வழங்குவதாக நம்பப்படுகிறது.இந்த கோயிலில் பல பஞ்சாயத்துகளும், வழக்குகளும் அரங்கேறுகின்றன. அதில் நியாயம் உள்ளவர் பக்கம் தீர்ப்பு கிடைக்கிறது. பொய் சாட்சி சொல்பவர்களை இங்குள்ள நாகம் தீண்டிவிடும் என்று நம்புகின்றனர்.
அது மற்றொரு கதையும் இந்த கோவிலுக்கு சொல்லப்படுகிறது. திரிசங்கு என்ற மன்னன் இந்த பூத உடலோடு சொர்க்கத்துக்கு போக ஆசை படுகிறான். அதற்கு வசிஷ்டரிடம் உதவி கேட்கிறான். அவர் மறுத்ததுடன் திருங்குவிற்கு சாபம் கொடுக்கிறார். பின்னர், விஸ்வமித்திரரிடம் உதவி கேட்கிறான்.
1000 முனிவர்கள் சேர்ந்து தவம் செய்தால் உன் சாபம் நீங்கி நீ சொர்க்கத்திற்கு போகலாம் என விசுவாமித்திரர் கூறி 1000 முனிவர்களையும் வரவழைக்கிறாராம். அனால் கடைசியில் முனிவர்கள் மறுக்க, விசுவாமித்திரர் அவர்களுக்கு காபமிடுகிறார். அந்த 1000 முனிவர்களும் திருமருதூர் என்ற பெயர் கொண்ட இந்த ஊரில் உள்ள சிவபெருமானை வணங்கி சாப விமோட்சணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, Ramanathapuram, Travel