டாய்லெட்டிற்காக பிரம்மாண்ட அருங்காட்சியகம்: இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா?

இங்கு 3000 கி.மு. முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான அனைத்து கழிவறை வரலாற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

டாய்லெட்டிற்காக பிரம்மாண்ட அருங்காட்சியகம்: இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா?
இங்கு 3000 கி.மு. முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான அனைத்து கழிவறை வரலாற்றையும் தெரிந்துகொள்ளலாம்.
  • News18
  • Last Updated: October 9, 2019, 11:39 PM IST
  • Share this:
மதம், வாழ்க்கை முறை, கலாசாரம், வீடு என எல்லாவறிற்கும் இங்கு வரலாறு உண்டு. அவற்றை நாமும் கண்டிருப்போம், கேட்டிருப்போம், படித்திருப்போம். இவற்றைப் போல் கழிவறைக்கும் வரலாறு இருக்கிறதா என என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? இதற்காக ஒரு அருங்காட்சியகமே உள்ளது.

மோடி அரசு கட்டாயம் வீட்டிற்கு ஒரு கழிவறையை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது. குக்கிராமங்களிலும் கழிவறையின் விழிப்புணர்வை அறிந்து பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டு வருகின்றனர். டிஜிட்டல் யுகத்திலும் கழிவறையின் அவசியத்தை சொல்லவேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள்..? இதற்கு சரியான விடை வேண்டுமாயின் டெல்லியில் உள்ள கழிவறை அருங்காட்சியகம்தான் போக வேண்டும்.
ஆம், டெல்லியில் மஹாவீர் என்ற இடத்தில்தான் இந்த டாய்லெட் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு முன்னோர்கள் உடல் கழிவை அகற்ற எந்த மாதிரியான யுத்திகளைக் கையாண்டார்கள், அவர்கள் பயன்படுத்திய கழிவறைகள் எப்படி இருந்தன. இன்று அது எப்படி பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த அருங்காட்சியகத்தில் தெரிந்துகொள்ளலாம்.இந்த அருங்காட்சியகம் மக்களிடம் சுகாதாரத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில் சுலாப் இண்டர்னேஷ்னல் என்ற இந்திய தொண்டு நிறுவனம் நிறுவியது. 1992 ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் 50 நாடுகளின் வரலாறுத் தகவல்களையும் அளிக்கிறது. இங்கு 3000 கி.மு. முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான அனைத்து கழிவறை வரலாற்றையும் தெரிந்துகொள்ளலாம். அதாவது உலக மன்னர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எந்த மாதிரியான டாய்லெட்டைப் பயன்படுத்தினார்கள் என்பதை இங்குக் காணலாம். பண்டைய , இடைகால மற்றும் நவீனம் என்று மூன்று காலகட்டமாக  கழிவறையை பிரித்து விளக்குகிறது.

ஒவ்வொரு வருடமும் நடக்கும் கண்காட்சியிலும் கழிவறைக் குறித்த ஆச்சரிய தகவல்களை வெளியிடும். அப்படி ஒரு கண்காட்சியில் ; ஒருவர் தன்னுடைய கழிவறையை தங்கம் மற்றும் வெள்ளியால் கட்டியதையும், ஒருவர் தங்கம் குவிக்கப்பட்ட குழியில்தான் மலம் கழிக்க விரும்புவார் என்பன போன்ற விசித்திர மனிதர்களையும் அடையாளம் கண்டு கண்காட்சியில் வைத்திருந்தது.இதனால்தான் இந்த அருங்காட்சியகத்தை தி டைம்ஸ் பத்திரிக்கையும் உலகிலேயே வித்யாசமான அருங்காட்சியம் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்