ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் … பாசம் வழியும் தாய் மகன் பாசத்தை படங்களிலும் கதைகளிலும் பார்த்திருப்போம், ஆனால் அம்மாவுக்காக 60000 கிலோமீட்டர் வண்டியில் சுற்றுலா அழைத்துச் செல்லும் மகனை கேட்டதுண்டா? அப்படி ஒரு பாசமிக்க மகனின் கதை இது ..
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(45). இவரது தந்தை தட்சிணாமூர்த்தி, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவர்.நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதிலிருந்து இவரது தாய் ரத்தினம்மா மன அழுத்தத்தில் இருந்தார்.
மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டுவர அவரை ஆன்மிக தலங்களுக்கு அழைத்து செல்ல கிருஷ்ணகுமார் முடிவு செய்தார். அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு தனது தந்தை பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகுமார் தனது தாய் ரத்தினம்மாளுடன் ஆன்மிக பயணத்தை தொடங்கினார்.
இதையும் படிங்க:நாட்டில் அதிக மதுப்பிரியர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியீடு - தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
மைசூரில் தொடங்கிய அந்த பயணம் அப்படியே விரிவடைந்து ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், கோவா, புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இப்படி தொடரும் இந்த பயணத்தில் இதுவரை 60,459 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். இதனை அடுத்து காசியில் இருந்து கொண்டு வந்த கங்கை தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்த பின் அடுத்த மாதம் மைசூர் திரும்ப உள்ளதாக கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.