ஹோம் /நியூஸ் /lifestyle /

இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் மஹாராஷ்டிரா காவலர்கள்...கல்சுபாய் சிகரத்தை சுத்தம் செய்த குழு

இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் மஹாராஷ்டிரா காவலர்கள்...கல்சுபாய் சிகரத்தை சுத்தம் செய்த குழு

கல்சுபாய் சிகரத்தை சுத்தம் செய்த குழு

கல்சுபாய் சிகரத்தை சுத்தம் செய்த குழு

மூன்று நாட்களில் 1646 மீ மலையேற்றம் செய்து,  சுற்றுலாப் பயணிகள் விட்டுச்சென்ற அனைத்து குப்பைகளையும் சேகரித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thane |

இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை மற்றும் தானே காவலர்கள் குழு, சஹ்யாத்ரி மலைத்தொடரில் சுற்றுலாப் பயணிகளால் விட்டுச் சென்ற குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சஹ்யாத்ரி ஷில்லேதார் பிரதிஸ்தான் என்று அழைக்கப்படும் குழுவில் 29 போலீசார் இடம்பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவிற்குள் சுத்தம் செய்யும் பணிகளுக்கு செல்லும் மலையேற்ற வீரர்களை உள்ளடக்கிய இது ஒரு வருடத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்த இயற்கையை நேசிக்கும் குழுவின் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் செய்தியை பரப்புவதாகும்.

இந்த குழு இம்மாதம், மகாராஷ்டிராவின் மிக உயரமான இடமான கல்சுபாய் சிகரத்தை சுத்தம் செய்யும் பணியை  மேற்கொண்டது. அவர்கள் மூன்று நாட்களில் 1646 மீ மலையேற்றம் செய்து,  சுற்றுலாப் பயணிகள் விட்டுச்சென்ற அனைத்து குப்பைகளையும் சேகரித்தனர். இந்த சமீபத்திய தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் நான்கு காவலர்கள், நான்கு மலையேற்ற வீரர்கள் , ஒரு சப்-இன்ஸ்பெக்டர், மூன்று தலைமை காவலர்கள் மற்றும் ஒரு உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் இருந்தனர்.

ஹம்பி முதல் சிலிகுரி வரை... ஜி20 கூட்டங்கள் நடைபெற இருக்கும் பாரம்பரிய தலங்கள் !

கல்சுபாய் சிகரம் பற்றி…

கல்சுபாய் மகாராஷ்டிராவின் மிக உயரமான சிகரமாகும். அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சஹ்யாத்ரி மலைகளில் (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) அமைக்கப்பட்டுள்ளது. இது கல்சுபாய் ஹரிச்சந்திரகாட் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். இந்த மலையில் இருந்து மக்கள் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் சிகரங்களின் அழகிய காட்சிகளை காண முடியும்.

ஆனால் சமீபகாலமாக அந்த அழகிய இடம் மாசுபட்டு வருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவுப் பொதிகள், பாலிதீன் மற்றும் பல அசுத்தமான பொருட்களை உள்ளடக்கிய பெரிய குப்பைக் குவியலை விட்டுச் செல்கின்றனர். காவலர்கள் குழு இந்த பிரச்னையை தங்கள் கைகளில் எடுக்க முடிவு செய்து குப்பைகளை சுத்தம் செய்யத் தொடங்கினர்.

வார இறுதி நாட்களில் நூற்றுக்கணக்கான மலையேறுபவர்கள் இங்கு வருகை தருவதால், மழைக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ​​சுற்றுப்புறத்தையும் இயற்கையையும் கவனத்தில் கொள்ளுங்கள் என்று பயணிகளிடம்  இவர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Clean india, Maharastra, Thane, Tourism