சமீபத்தில் அந்தமான் தீவுகளில் உள்ள பண்டைய சிறைச்சாலைகள் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டிருப்பதை கேட்டிருப்போம். அது போலவே மெக்ஸிகோ தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிறைச்சாலையை சுற்றுலாத்தலமாக மெக்ஸிகோ அரசு தற்போது அறிவித்துள்ளது. மோசமான சிறைச்சாலைகளில் ஒன்று தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம்.
மெக்ஸிகோவிற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் கடந்த வாரம் இஸ்லாஸ் மரியாஸ் சிறைச்சாலை சுற்றுலா மையத்தைத் திறந்து வைத்தார்.பசிபிக் கடற்கரையில் உள்ள மரியாஸ் தீவுகளின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவான இஸ்லாஸ் மரியாஸ் மாட்ரேயில் இந்த கூட்டாட்சி சிறை அமைந்துள்ளது .
அமெரிக்க வரைபடத்தை எடுத்து பார்த்தால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்கு இடையே இணைப்பு பாலம் போல் மெக்ஸிகோ அமைந்திருக்கும். கிழக்கே அட்லாண்டிக் கடல்- மேற்கே பசிபிக் கடல் - மத்தியில் மெக்ஸிகோ அமைந்திருக்கும். பிரதான நிலப்பகுதியோடு சில தீவுக்கூட்டங்களையும் உள்ளடக்கியது தான் மெக்சிகோவின் கூட்டாட்சி எனப்படுகிறது.
இதையும் படிங்க: தேயிலை நகரத்தில் நடக்கும் தேஹிங் பட்காய் திருவிழா.. அசாம் டிரிப் அடிக்க ரெடியா..
மெக்சிகோவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் மேற்கு மாநிலமான நயாரிட்டில் இருந்து சுமார் 62 மைல் தொலைவில் அமைந்துள்ள இஸ்லா மரியாஸ் தீவு கட்டிடம் 1905 ஆம் ஆண்டில் சர்வாதிகாரி போர்பிரியோ டயஸின் கீழ் சிறையாக மாறியது.
ஒரு காலத்தில் இச்சிறைச்சாலையில் பல அரசியல் தலைவர்கள் கைதிகளாக இருந்தனர், இதில் செல்வாக்குமிக்க மெக்சிகன் எழுத்தாளர் ஜோஸ் ரெவல்டாஸ் குறிப்பிடத்தக்கவர். அவரது இடதுசாரி செயல்பாட்டிற்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார்.
எர்னஸ்டோ ஜெடில்லோவின் ஆட்சி காலத்தின் போது, சிறைச்சாலை நவீனமயமாக்கபட்டது. பின்னர் இதன் சுற்றுசூழல் முக்கியத்துவம் கருதி 27 நவம்பர் 2003 அன்று, இது உயிர்க்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்பும் இங்கு சிறைச்சாலை செயல்பட்டு வந்தது. 2006 ஆம் ஆண்டு மெக்சிகோவின் போதைப்பொருள் போரின் போது இந்த சிறைச்சாலையில் சுமார் 8,000 முதல் 10,000 கைதிகள் வைத்திருந்தனர்.
இதையும் படிங்க: மனிதர்களை கடலுக்கடியில் 6000மீ வரை கொண்டு செல்லும் சமுத்ராயன் திட்டம்.. விபரங்கள் இதோ!
அதீத கைதிகளை கொண்டு இருந்ததால் 2013 ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குள் கலவரம் ஏற்பட்டு 6 பேர் இறந்துள்ளனர். அதன் பின், 18 பிப்ரவரி 2019 அன்று, அன்றைய மெக்சிகன் ஜனாதிபதி, ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், இஸ்லாஸ் மரியாஸில் உள்ள கூட்டாட்சி சிறையை மூடும் அறிவிப்பில் கையெழுத்திட்டார். சிறைச்சாலையை குறைத்து பள்ளிகளை அதிகரிக்கும் கொள்கையைக் கொண்டிருந்தவர் அவர்.
2019 இல் லோபஸ் ஒப்ராடரால் மூடப்படும் வரை இந்த சிறைச்சாலை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் அதை புதுப்பித்து தற்போது சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளனர். அடுத்தவாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கும் சிறைச்சாலை முகப்பில் 18 ஆண்டுகள் தென்னாபிரிக்காவின் ராபன் தீவில் சிறையில் இருந்த மண்டேலா முகம் பொரித்த வளைவுகள் அமைக்கப்ட்டுள்ளது.
இந்த சிறையில் கம்பிகள் கதவுகள் அவ்வளவு கடினமானதாக எல்லாம் இருக்காதாம். காரணம் அதன் சுவர்களும் கம்பிகளும் அதை காப்பதில்லை. சுற்றி உள்ள கடல் தான் அந்த சிறையைக் காக்கிறது. இதுவரை இந்த சிறைச்சாலையில் இருந்து சுமார் 30 பேர் தப்பிக்க முயன்று கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்று அதன் வரலாறு கூறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jail Tourism, Mexico, Prison, Travel