ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

செர்ரி ப்ளாசம்ஸ் திருவிழா.. இலக்கிய விழாவுடன் மேகாலயாவை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு...

செர்ரி ப்ளாசம்ஸ் திருவிழா.. இலக்கிய விழாவுடன் மேகாலயாவை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு...

செர்ரி ப்ளாசம்ஸ் திருவிழா

செர்ரி ப்ளாசம்ஸ் திருவிழா

ஷில்லாங் செர்ரி ப்ளாசம் திருவிழாவில் ..... உணவு, உள்ளூர் மது, நல்ல இசை, ஆகியவற்றை இத்திருவிழாவில்   ருசிப்பார்கலாம் . உள்ளூர் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும், உள்ளூர் மக்களுடன் பழகவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Shillong, India

நவம்பர் வந்துவிட்டாலே இமயமலை ஓரம் இருக்கும் மாநிலங்கள் எல்லாம் விழாக்கோலம் பூண்டு விடும். காஷ்மீர் தொடங்கி அருணாச்சலம் வரை நீண்டு கிடக்கும் இமயமலையில் பனிப்பொழிவு நிகழும் நேரம் வசந்த கால இயற்கை மலை அழகோடு கண்களுக்கு விருந்தாக அமையும்.

அப்படியான ஒரு அற்புதமான திருவிழாவிற்கு செல்லத் தயார் என்றால் திருவிழாத்திட்டம் இதோ…

'செர்ரி ப்ளாசம்ஸ்' என்று நீங்கள் கேட்டவுடன் ஜப்பான் நினைவுக்கு வந்தால், அதுபோன்ற ஒரு அழகிய  இடம் நமது நாட்டிலேயே இருப்பதை மிஸ் பண்ண எப்படி மனம் வரும்?

கங்ககையை சென்றடைய ஓடும் பிரம்மபுத்திரா நதி ஓடும் வழியில் அமைந்த காஷி, காரோ, ஜெயின்டியா மலைகள் சூழ்ந்த இடத்தில் மேகாலயா மாநிலம் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த இங்கு வசந்த காலத்தில் மலர்ந்த இளஞ்சிவப்பு-வெள்ளை பூக்கள் பூத்துக்குலுங்கும் நேரத்தில் தான் இந்த திருவிழா வருகிறது. அதனால் தான் இந்த திருவிழாவிற்கு செர்ரி ப்ளாசம்ஸ் என்ற பெயரும் வந்தது.

இதையும் பாருங்க: சிலுசிலு சிம்லாவில் மிஸ் பண்ணக்கூடாத 5 பட்ஜெட் இடங்கள்!

ஷில்லாங் கோல்ஃப் மைதானத்தில் இருந்து, கோல்ஃப்லிங்க் என பிரபலமாக அறியப்படும் போலோ மைதானம், திருவிழாவின் முக்கிய இடமாகும். ஷில்லாங் செர்ரி ப்ளாசம் திருவிழா முதலில் போலோ மைதானத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த நிகழ்வு நகரின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

வார்டின் ஏரி

திருவிழா நடைபெறும் இடங்களில் வார்டின் ஏரியும் ஒன்று.இந்த ஏரி ஆண்டு முழுவதும் அழகாக இருக்கும்.  குறிப்பாக, மென்மையான வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கள்  பூக்கும்போது குலுங்கி சொர்க்கத்தையே கண்முன் கொண்டுவரும்.

அதோடு ஷில்லாங் தெருக்களில் பைன் மரங்கள் மற்றும் செர்ரி பூக்கள் பூத்துக்குலுங்குவதால், சாலை ஓரம் நடந்து செல்வதே பேண்டஸி படங்களில் வரும் காட்சியைப்போல் இருக்கும்.

நடைபெறும் தேதி:

வருடாந்திர ஷில்லாங் செர்ரி ப்ளாசம் திருவிழா, தொற்றுநோய் காரணமாக இடையில் இடைநிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஷில்லாங் திருவிழா பகுதி திறக்கப்பட்ட நிலையில் அதை எல்லாம் சேர்த்து வைத்து இந்த ஆண்டு கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இத்திருவிழா நவம்பர் 23 முதல் 26 வரை நான்கு நாள் நிகழ்வாக இருக்கும்.

இதையும் பாருங்க: பனிமுகடுகளுக்கு இடையே மலையேற ஆசையா.. உத்தரகாண்டில் உங்களுக்கான 5 ஸ்பாட்ஸ்!

அதற்கு முன்னதாக நவம்பர் 21-23 அன்று ஷில்லாங் இலக்கிய விழா வேறு  நடைபெறுகிறது. ஷில்லாங்கில் ஒரு வாரம் திட்டமிட இது  சரியான நேரம்!

ஷில்லாங் செர்ரி ப்ளாசம் திருவிழாவில் .....

உணவு, உள்ளூர் மது, நல்ல இசை, ஆகியவற்றை இத்திருவிழாவில்   ருசிப்பார்க்கலாம் . உள்ளூர் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும், உள்ளூர் மக்களுடன் பழகவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

மேகலாயாவிற்கு செல்லும்போது ரியாட்சம்தியா ஜெயாவில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி அருங்காட்சியகம், ஷில்லாங்கிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாவ்ப்லாங் கிராமம் , பளிங்குபோல் இருக்கும்  உம்கோட் நதி, வேர்களில் அமைந்த பாலம்,  உமியம் ஏரி ஆகிய இடங்களைக் காண மறந்துவிடாதீர்கள்.

டாக்ஸியை முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை, உள்ளூர் பயணிகளை ஏற்றிச் செல்லும் உள்ளூர் வண்டியை வரவழைத்தால் போதும், 20 ரூபாய்க்கும் குறைவான  கட்டணத்தில் பயணத்தை மேற்கொள்ளலாம். மாருதி-800 கருப்பு-மஞ்சள் லோக்கல் டாக்சிகளை நீங்கள் ஏராளமாகப் பார்க்கலாம். அவை  ஷில்லாங்கின் எந்த மூலைக்கும் உங்களை அழைத்துச் செல்லும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Meghalaya, Shillong S15p01, Tourism, Travel Guide