ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

2041க்குள் "நிகர பூஜ்ஜிய கார்பன்" சுற்றுலாத் தலமாக மாறும் மதுரா-பிருந்தாவனம்!

2041க்குள் "நிகர பூஜ்ஜிய கார்பன்" சுற்றுலாத் தலமாக மாறும் மதுரா-பிருந்தாவனம்!

பிருந்தாவனம்

பிருந்தாவனம்

பயணிகள் நகருக்கு வெளியே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு  சர்க்யூட்டிற்குள் மின்-ரிக்ஷாக்கள் மற்றும் மினிபஸ்கள் போன்ற மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Vrindavan, India

இந்தியாவின் மிகப்பெரிய புனித யாத்திரை மையங்களில் ஒன்றான மதுரா-பிருந்தாவனம், 2041 ஆம் ஆண்டுக்குள் "நிகர பூஜ்ஜிய கார்பன்" சுற்றுலாத் தலமாக மாற்றப்பட உள்ளது.

இந்தியா, 2070 க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை இலக்காகக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்தல பகுதிகளில்  நிகர பூஜ்ஜிய கார்பன் நிலையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக உத்தரபிரதேசத்தில் உள்ள பிருந்தாவனம் மற்றும் கிருஷ்ண ஜென்மபூமி உள்ளடக்கிய பிரஜ் பகுதி நிகர பூஜ்ஜிய கார்பன் பகுதியாக மாற்றப்பட உள்ளது.

திட்டத்தின் படி, பிரஜ் பிராந்தியத்தின் வருடாந்திர யாத்ரீகர்-சுற்றுலா வருகை 2041 ஆம் ஆண்டளவில் தற்போதைய 2.3 கோடியில் இருந்து ஆறு கோடியாக பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்குள்ள உள்ளூர் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதற்கும் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது.

நடு இருக்கையை தேர்ந்தெடுத்தால் 2 கோடி பரிசு ... ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் அசத்தும் ஆஃபர்!

திட்டத்தின் உள்ளடக்கம்:

மதுரா-பிருந்தாவன் முழு பிராந்தியத்தையும் நான்கு குழுக்களாகப் பிரிக்கிறது, ஒவ்வொன்றும் இரண்டு முக்கிய நகரங்களைக் கொண்டு  நகரங்கள் இடையே பயணிகள் நடந்தோ அல்லது மின்சார வாகனம் மூலமாகவோ செல்லக்கூடிய 'பரிக்ரமா ரூட்' என்ற சிறிய சர்க்யூட்டை உருவாக்குகிறது.

புதிய திட்டத்தின் மூலம் பிரஜ் பகுதி முழுவதும் தனியார் வாகனங்கள் தடை செய்யப்படும். பயணிகள் நகருக்கு வெளியே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு  சர்க்யூட்டிற்குள் மின்-ரிக்ஷாக்கள் மற்றும் மினிபஸ்கள் போன்ற மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

ஒவ்வொரு சர்கியூட்டிலும் மூன்று முதல் ஐந்து மின்சார வாகன சார்ஜிங் புள்ளிகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பாதையிலும் குடிநீர் வசதி, சாப்பாட்டு கூடம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்வு இடம் ஆகியவை அமைக்கப்படுகிறது.

மேலும் அப்பகுதியில் உள்ள  252 நீர்நிலைகள் மற்றும் 24 காடுகளும் புத்துயிர் பெறும் என்று உ.பி. அரசாங்கத்தின் வரைவு மறுவடிவமைப்பு திட்டம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோரக்பூர் டூ கர்னூல்.. வழி: திருப்பதி, மதுரை, ராமேஸ்வரம்.. IRCTC இன் தென்னிந்திய பக்திச்சுற்றுலா!

அதோடு மதுரா, பிருந்தாவன், கோகுல், பர்சானா, பல்டியோ, கோகுல், நந்த்கான், கோவர்தன் மற்றும் மஹாவன் ஆகிய எட்டு முக்கிய நகரங்களும் உள்நாட்டு நீர் அமைப்பு மற்றும் குறுகிய-கேஜ் ரயில் பாதை மூலம் இணைக்கப்படும் எனத் தெரிகிறது. மதுரா மற்றும் பிருந்தாவன் ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் தற்போதைய 12.9 கிமீ ரயில் பாதை மேம்படுத்தப்பட இருக்கிறது. இது கிருஷ்ண ஜென்ம பூமி, மதுரா துவாரகதீஷ் கோவில் , பிருந்தாவனில் உள்ள பாங்கே பிஹாரி கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச்செல்லும்.

இதேபோல், பிருந்தாவன், மதுரா மற்றும் கோகுலை இணைக்கும் 24 கிலோமீட்டர் தேசிய நீர்வழிப்பாதைகளும் உருவாக்கப்படும். இதனால்  சுற்றுலாப் பயணிகள் 24 கிமீ பாதையை சுமார் 45 நிமிடங்களில் கடக்க முடியும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Mathura S24p17, Travel, Uttar pradesh