ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சாகச விரும்பிகளுக்கு குட் நியூஸ்! கண்டிப்பா இந்த ராட்சத ஊஞ்சல மிஸ் பண்ணிடாதீங்க!

சாகச விரும்பிகளுக்கு குட் நியூஸ்! கண்டிப்பா இந்த ராட்சத ஊஞ்சல மிஸ் பண்ணிடாதீங்க!

மணாலி ஊஞ்சல்

மணாலி ஊஞ்சல்

100 க்கும் மேற்பட்ட சாத்தியமான ஜம்ப் ஸ்டைல்கள் 70 மீ வரை ஊஞ்சலாடும் அட்ரினலின் ரஷ் அனுபவத்தை AI உடன் அனுபவிக்க அனுமதிக்கின்றன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Manali |

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி நீண்ட காலமாக உலகெங்கிலும் உள்ள சாகசப் பிரியர்களின் சுற்றுலாத் தளமாக இருந்து வருகிறது. இப்போது, ​​அங்கு செல்ல மற்றொரு காரணத்தையும் இப்பொது சேர்த்துள்ளனர்.

குட்டி குழந்தை முதல் கிழவர்கள் வரை ஊஞ்சல் ஆட வேண்டும் என்றால் உள்ளே ஒரு பட்டாம்பூச்சி பறக்கும். அதுவும் மலையின் உச்சியில் இருந்து ஊஞ்சல் ஆடுவது என்றால் அது இன்னும் ஒரு படி மேல். சாகச அனுபவத்தோடு ஒரு குதூகலம். அப்படி ஒரு அனுபவத்தை தான் மணாலியில் கொண்டு வருகின்றனர்.

மணாலியில் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி), மண்டி இந்த ஜனவரியில்செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவுடன் இயங்கக்கூடிய மாபெரும் ஊஞ்சலை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது.

தமிழகத்தில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்.. என்னென்ன நன்மைகள்!

'மணாலி ஸ்விங்' என்று அழைக்கப்படும் இது நான்கு சாகச ஆர்வலர் மற்றும் பொறியாளர் நண்பர்களால் நிறுவப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற்ற பாறை ஏறுபவர்கள் மற்றும் மலையேறுபவர்கள் கொண்டு ஊஞ்சல் சோதனைகளை நிறைவு செய்துள்ளனர். இப்போது கருத்து மற்றும் வடிவமைப்பிற்கான காப்புரிமைகளை பெரும் பணியில் உள்ளது. 2023 இல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழுவின் கூற்றுப்படி, இது போன்ற ஊஞ்சலை நிறுவ துபாய் மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் அவர்கள் அணுகப்பட்டுள்ளனர்.அதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நிறுவனர்களில் ஒருவரான உத்சவ் சோனி கூறுகையில், “உலகின் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான ராட்ச ஸ்விங்கை நாங்கள் வழங்குவோம். இதில் ரப்பர் ஊஞ்சலுக்குப் பதிலாக, இரட்டை டைனமிக் கயிறுகளில் ராட்சத ஊஞ்சலாட்டத்தை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

நிலாவையும் நட்சத்திரங்களையும் ஜாலியா ரசிக்கலாம்... சுற்றுலாவை தொடங்க ராஜஸ்தான் அரசு திட்டம்

100 க்கும் மேற்பட்ட சாத்தியமான ஜம்ப் ஸ்டைல்கள் 70 மீ வரை ஊஞ்சலாடும் அட்ரினலின் ரஷ் அனுபவத்தை AI உடன் அனுபவிக்க அனுமதிக்கின்றன. இது முன்னெப்போதும் இல்லாத தவறுகள் இல்லாத பாதுகாப்பு அனுபவத்தை உறுதியளிக்கிறது.

விலையைப் பொறுத்தவரை, ஒரு முறை ஊஞ்சலாட 3000 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் போக்குவரத்து, புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோகிராஃபி சேவைகள் ஆகியவை அடங்கும். இந்த ராட்சத ஊஞ்சல் ஹிமாச்சலத்தின் சுற்றுப்புறத்தின் அழகிய காட்சிகளை ரசிக்கும் அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். இது ஒரு சிறந்த தனித்துவமான அனுபவங்களில் ஒன்றாக இருக்கும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Himachal Pradesh, Manali, Travel, Travel Guide