‘3V’ திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கும் மாலத்தீவு

‘3V’ திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கும் மாலத்தீவு

Maldives

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் புதிய திட்டத்தை இயற்றிய முதல் நாடாக மாலத்தீவுகள் திகழ்கிறது.

  • Share this:
தற்போது பல நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தபோதிலும், கடந்த ஆண்டை போலவே 2021ம் ஆண்டிலும் கொரோனா பிடியில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் வெளியிடங்களுக்கு பயணம் செய்வது இன்னும் பலருக்கு ஆடம்பரமாக இருக்கிறது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பல உயிர்களை பறித்து வருவதால், மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அரசாங்கங்களால் அறிவுடுத்தப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், மாலத்தீவு தனது சுற்றுலாத் துறையை உயர்த்தும் முயற்சியில், சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. தெற்காசிய தீவுக்கூட்டத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மவுசூம், நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக ‘Visit’, ‘Vaccinate’, ‘Vacation’, ஆகியவற்றைக் குறிக்கும் ‘3V’ திட்டத்தை அறிவித்தார். இதுதொடர்பாக CNBC-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, " எங்கள் சுற்றுலா தளத்தை திறந்து வைப்பதன் முக்கிய நோக்கம் பாதுகாப்பான சுற்றுலாவை குறைந்தபட்ச சிரமத்துடன் வழங்குவதாகும்.

மேலும் படிக்க... தூத்துக்குடி: ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி

எனவே, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தவுடன், நாங்கள் ‘3V’ சுற்றுலா திட்டத்திற்கு செல்வோம், ”என்று தெரிவித்துள்ளார். மாலத்தீவு அதன் சுற்றுலாத் துறையையே பெரிதும் நம்பியுள்ளது. எனவே, நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டவுடன் தங்கள் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து அமைச்சர் மவுஸூம் தெரிவித்ததாவது, "இதுவரை 90 சதவீத முன்கள சுற்றுலா பணியாளர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றும், சுமார் பாதி மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் கூறினார். எங்கள் மக்கள் தொகை ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால் மாலத்தீவில் தடுப்பூசி விநியோகம் பிரச்சினையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்காது. மேலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகளிடமிருந்து நாங்கள் பெறும் தடுப்பூசிகள் எங்களுக்கு உதவியாக இருக்கிறது" என்று மவுஸூம் தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாட்களில் வெளிநாடுகளில் இருந்து அதிலும் இந்தியாவிலிருந்து வரும் மக்கள் நாட்டின் வரையறுக்கப்பட்ட நுழைவுத் தேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதால், இந்த ஆண்டு மாலத்தீவுக்கு 3,50,000 வருகைகள் கிடைத்துள்ளன என்றும் சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், மாலத்தீவுகள் பயணத்திற்கு முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள், மூன்று நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் பி.சி.ஆர் பரிசோதனையுடன் வரும் சுற்றுலா பயணிகளை அந்நாடு அனுமதித்து வருகிறது. மேலும், நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் புதிய திட்டத்தை இயற்றிய முதல் நாடாக மாலத்தீவுகள் திகழ்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: