ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அஜந்தா குகைகளில் இருந்து நட்சத்திர வானத்தை ரசிக்கும் வசதி..!

அஜந்தா குகைகளில் இருந்து நட்சத்திர வானத்தை ரசிக்கும் வசதி..!

நட்சத்திர வானம்

நட்சத்திர வானம்

இந்த குகைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் மின்விளக்குகளின் தாக்கம் அதிகமாக இருக்காது. குளிர்காலத்தில் வானம் தெளிவாக இருப்பதால், இருண்ட வானில் மின்னும் நட்சத்திரங்களைக் காண இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Aurangabad, India

ராஜஸ்தானை அடுத்து மஹாராஷ்டிராவில் இரவு நட்சத்திர வானத்தை காணும் சுற்றுலா தொடங்கப்பட உள்ளது. இதற்காக மஹாராஷ்டிராவில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய இடமான அஜந்தாவில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மகாராஷ்டிரா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ( எம்டிடிசி) அடுத்த மாத இறுதிக்குள் அவுரங்காபாத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அஜந்தா குகைகளுக்கு அருகில் நட்சத்திரங்களைப் பார்க்கும் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன

அஜந்தா குகையில் இருந்து மேற்கு தொடர்ச்சிமலையின் சஹ்யாத்ரி மலையின் 270 டிகிரி பார்வையை வழங்கும் ‘அஜந்தா வியூ பாயின்ட்' எனப்படும் ஒதுக்குப்புறமான தளத்தில் இருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எம்டிடிசி பொது மேலாளர் சந்திரசேகர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

நிலாவையும் நட்சத்திரங்களையும் ஜாலியா ரசிக்கலாம்... சுற்றுலாவை தொடங்க ராஜஸ்தான் அரசு திட்டம்

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஏப்ரல் 28, 1819 அன்று மெட்ராஸ் பிரசிடென்சி அதிகாரி ஜான் ஸ்மித் புலியை வேட்டையாடும்போது தற்செயலாக இந்த குகைகளைக் கண்டுபிடித்தார். அதன் பின் முற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த குகைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் மின்விளக்குகளின் தாக்கம் அதிகமாக இருக்காது. குளிர்காலத்தில் வானம் தெளிவாக இருப்பதால், இருண்ட வானில் மின்னும் நட்சத்திரங்களைக் காண இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும். வரலாற்று தளத்தை பார்க்க போகும் இடத்தில் வானத்தின் அழகையும் ரசிக்கலாம்.

வானத்தில் காணப்படும் நட்சத்திரங்களைப் பற்றிய அடிப்படை அறிவை வழங்க உள்ளூர் மக்களுக்கு தொலைநோக்கிகளைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும். இது பருவகால அடிப்படையிலான திட்டமாகும். இந்த குறில் காலத்தில் ஒவ்வொரு மாலையும் இருள் சூழ்ந்தவுடன் ஆரம்பித்து இரண்டு மூன்று மணி நேரத்தில் முடிந்து விடும். நவம்பர் இறுதிக்குள் திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் ஜெய்ஸ்வால் கூறினார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Aurangabad S13p19, Maharashtra, Tourism