டிசம்பர் மாத குளிர் குறைந்து வானிலை மிதமாக, கதகதப்பாக ரசிப்பதற்கு ஏற்றதாக மாறியுள்ளது. புது வருடத்தில் எங்காவது போக நினைத்தால் உங்களுக்காகவே மத்திய பிரதேசத்தில் திருவிழாக்கள் தொடங்கிவிட்டது.
ஏற்கனவே மத்தியப் பிரதேச உஜ்ஜயினியில் ஸ்கை டைவிங் திருவிழா தொடங்கிவிட்ட நிலையில் தற்போது மாண்டு பகுதியில் மெகா கலாச்சாரத் திருவிழா மற்றும் ஸ்கை டைவிங் திருவிழா ஜனவரி 7 முதல் 11, 2023 வரை நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் திருவிழா 5 நாட்களுக்கு நடைபெறும். இது மாண்டுவின் திருவிழாவின் நான்காவது முறையாகும்.
இந்த திருவிழா நர்மதை நதிக்கரையில் நவீன விளையாட்டு சாகசங்களுடன் இணைந்த வரலாற்று பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழாவில் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள், சாகச விளையாட்டுகள், கலை பட்டறைகள், கவிதை வாசிப்பு, இயற்கை பயணம் என்று எல்லாவற்றையும் கொண்டுள்ளது.
யுனெஸ்கோ தற்காலிக கலாச்சார தல பட்டியலில் இருக்கும் மாண்டுவில் நடைபெறும் திருவிழா குறித்து, சுற்றுலா மற்றும் கலாச்சார முதன்மை செயலாளரும், சுற்றுலா வாரியத்தின் நிர்வாக இயக்குநருமான ஷியோ சேகர் சுக்லா கூறுகையில், மாண்டு திருவிழாவில் 2000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது முழு உலகிற்கும் வந்த இடத்தின் சிறப்பை வெளிப்படுத்த வாய்ப்பாக இருக்கும் என்றார்.
மேலும், திருவிழாவின்போது இங்கு தங்குவதற்கான கூடார நகரமும் அமைக்கப்பட்டுள்ளது. பயணம் தொடங்கும் முன்னர் தங்களுக்காக டெண்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அதோடு இந்த வருடம் மாண்டு திருவிழாவில் ஹெரிடேஜ் வாக், மற்றும் சைக்கிள் டூர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாண்டு பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் இயற்கை அழகு கொஞ்சும் இடங்களுக்கும் நம்மை அழைத்து செல்வர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madhya pradesh, Travel, Travel Guide