• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா காலத்தில் விமானப் பயணமா? இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருங்கள்..

கொரோனா காலத்தில் விமானப் பயணமா? இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருங்கள்..

  • Share this:
    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் நாடு முழுவதும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மீண்டும் பயணத்திற்கு திரும்பியுள்ளனர். முக்கிய நகரங்களில் இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், வைரஸ் பரவுவதை தடுக்கும் சில சிறப்பு நடவடிக்கையுடன் ஹோட்டல், உணவகம் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    மேலும் பல நாடுகளும் தங்களது பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சுற்றுலாவை இயல்பாக்கியுள்ளன.

    இருப்பினும் தொற்றுகளால் பாதிக்கப்படாமல் உங்கள் பயணம் இனிமையாய் அமைய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி), தந்துள்ளன. அந்த அறிக்கையின் படி விமானம் முற்றிலும் மூடப்பட்டிருக்கும் என்பதால், விமானத்தில் பயணம் செய்வது கொரோனா பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.



    பாதுகாப்பான பயணத்திற்கு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டாலும், விமானத்தில் பறக்கும் போது பாதுகாப்பான பயணத்தை திட்டமிட சில உதவிக்குறிப்புகள் இதோ..

    நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க மக்கள் பயணம் செய்யும் போது தங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.

    உங்கள் மூக்கு மற்றும் வாயை மூடி வைக்க எப்போதும் முகக்கவசங்களை அணியுங்கள். உங்கள் பயணத்தின் போது மேலும் சில முகக்கவசங்களை உங்களுடன் எடுத்து செய்யுங்கள். ஒன்று இழந்துவிட்டால் அல்லது சேதமடைந்தாலோ அந்த நேரத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.

    உங்கள் குடும்பம் உறுப்பினர்களை தவிர மற்றவர்களிடம் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும். குறைந்தது 6 அடி தூரத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.



    கிருமிநாசினி துடைப்பான்களை (wipes) கையில் வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களுக்கும் எளிதாக அணுகக்கூடிய வகையில் இருக்கும். இந்த துடைப்பான்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீங்கள் அமரும் இடத்தை துடைக்க பயன்படும்.

    உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். குறிப்பாக விமானத்தின் மேற்பரப்பையும் தொட்ட பிறகு கழுவ வேண்டும். அதெற்கென கை சுத்திகரிப்பு திரவங்கள் கிடைக்கிறது. அதில் குறைந்தது 60% ஆல்கஹால் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

    நீங்கள் எப்போதும் சோர்வுடன் இருக்கிறீர்கள் எனில் இந்த குறைபாடு காரணமாக இருக்கலாம்..

    ஆடைகளை தேர்வு செய்யும் போது வசதியானதாகவும், உடலை முழுவதையும் மூடும் வகையிலான இருப்பதை தேர்வு செய்யுங்கள். ஒரு ஜோடி நீண்ட பேன்ட் மற்றும் நீண்ட ஸ்லீவ் போன்ற உடைகளை அணியலாம்.

    உங்களது இருப்பிடத்தை சென்றடைந்தவுடன் முதல் வேலையாக உடைகளை கழற்றி துவைத்து வெயிலில் காயவைத்து விடுங்கள்.



    கண்ணாடிகள் அல்லது சன்கிளாஸ்கள் மூலம் கண்களை பாதுகாக்கவும். நோய்வாய்ப்பட்ட எவருடனும் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டாம்.

    உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். நீங்கள் விமானத்தில் பயணம் செய்யும் போது உங்கள் பயண நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே என்றால் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: