ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வடகிழக்கு இந்தியர்களின் பாரம்பரிய அரிசி பீர் பற்றி தெரியுமா?

வடகிழக்கு இந்தியர்களின் பாரம்பரிய அரிசி பீர் பற்றி தெரியுமா?

அஸ்ஸாமின் அரிசி பீர்

அஸ்ஸாமின் அரிசி பீர்

Lungzubel ,  வார்த்தை உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கப்படும் போது , ​​அரிசி பீர் கல் ஜாடிகளை குறிக்கிறது .

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில்  நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அங்கு ஒருமித்த ஒரு பாரம்பரிய கலச்சாரத்தை காண முடியும்.  அங்கு கிடைக்கும் அரிசி பீர் அல்லது திணை பீர் என்பது உள்ளூர் பாரம்பரியத்தின் ஒரு பெரிய பகுதியாக விளங்கும்.

வடஇந்தியாவில் பாங்கு, தென்னிந்தியாவில் கள் எப்படி ஒரு பானமாக விளங்குகிறதோ அது போல வடகிழக்கு இந்தியாவில் அரிசியை புளிக்கவைத்து தயாரிக்கப்படும் இந்த பானமும் பிரபலமானது. முதலில் எல்லாம் சாதாரணமாகவே மக்களால் பருகப்பட்டு வந்த இந்த பீர் இப்போது திருவிழாக்கள் மற்றும் பெரிய சமூக நிகழ்வுகள் போன்ற விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே பருக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்து பழக்கத்தில் இருந்துவரும் இந்த பானத்தில் ஒரு சிறப்பான விஷயம் உண்டு...

வடகிழக்கு இந்தியாவின் மிகப் பழமையான மலைவாழ் பழங்குடியினரில் ஒன்றான சின்-குகி-மிசோ குடும்பத்தைச் சேர்ந்த பயாட் மக்கள் தான் பெரும்பாலும் இந்த பீருடன் தொடர்பு கொண்டவர்கள். தற்போது, அசாம், மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயாவின் சில பகுதிகளில் வசிக்கும் பயாட் சமூகமக்கள்  வரலாற்றில் லுங்சுபெல்ஸ் பயாட் என்பது  ஒரு பெரிய பகுதியாகும்.

இதையும் படிங்க: அருணாச்சல பிரதேசம் செல்ல விரும்பினால் இனி ஈஸியா பெர்மிஷன் கிடைத்துவிடும்... இதை ஃபாலோ பண்ணுங்க..!

Lungzubel ,  வார்த்தை உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கப்படும் போது , ​​அரிசி பீர் கல் ஜாடிகளை குறிக்கிறது . இந்த 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் பேழைகளை பயாட் மக்கள் வசிக்கும் பல பகுதிகளில் காணலாம். குறிப்பாக அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹஃப்லாங்கிலிருந்து சுமார் 130 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோபக் என்ற பயேட் கிராமத்தில் இந்த கல் பேழைகளின் வயல்களைக் காணலாம். இங்கு அனைத்து அளவுகளிலும் கல் ஜாடிகள் உள்ளன.

அந்த நாட்களில் எழுதப்பட்ட பதிவுகள் இல்லாததால், இந்த கல் ஜாடிகள் ஆரம்பத்தில் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. வடகிழக்கு கலாச்சாரத்தில் அரிசி பீரின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து, மதுபானங்களை சேமிக்க அவை பயன்படுத்தப்பட்டதாக இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்கள் :சிலுசிலு சிம்லாவில் மிஸ் பண்ணக்கூடாத 5 பட்ஜெட் இடங்கள்!

பயாட் புராணங்களின்படி, கல் நினைவுச்சின்னங்களை செதுக்குவது பயாட் சமூகத்தின் பாரம்பரியத்தின் ஒரு பெரிய பகுதியாகும். அந்த காலத்தில் பெரிய கல் ஜாடிகளில் பழங்குடியினத் தலைவர்களுக்காகவும், அவர்களைக் கௌரவிப்பதற்காகவும், போர்களில் அவர்கள் பெற்ற வெற்றிக்காகவும், தியாகச் சடங்குகளின் போது பயன்படுத்தப்பதாகவும் அரிசி பீர் செய்யப்பட்டு பயன்படுத்த பட்டதாக தெரிகிறது.

இந்த பழக்கம் கிறித்துவ மதம் பழக்கத்திற்கு வந்த பிறகு மக்களால் கைவிடப்பட்டிருக்கலாம். பல ஆண்டுகளுக்கு பின்னர் மீட்டெடுக்கப்பட்ட கோபாக் ஜாடிகள் இப்போது அசாமின் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளன.

இப்போதும் ஜாடிகளில் ஊற்றி  அரிசியை புளிக்க வைத்து பருகும் பழக்கம் பெரிதாகவும் பெருமையாகவும் அவர்கள் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் போற்றப்பட்டு வருகிறது. இப்பொது கல் ஜாடிகள் இல்லாவிடினும் மண் மற்றும் மரக்குடுவைகளில் சேமித்து வைக்கின்றனர்.

First published:

Tags: Assam, Beer