பயணத்திட்டம் ரெடி.. டிராவல் பார்ட்னரைத் தேடுகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..

பயணம்

சோர்வுற்றிருக்கும் மனதை புத்துணர்ச்சியாக்க பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு நீங்கள் சரியான நபரை தேர்தெடுத்து, திட்டமிடுதலுடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

 • Share this:
  பயணங்கள் என்பது அதி அற்புதமானவை. உள நோய் முதல் உடல் நோய் வரை குணப்படுத்தும் சக்தி பயணத்திற்கு உண்டு. சோர்வுற்றிருக்கும் மனதை புத்துணர்ச்சியாக்க பல்லாயிரம் கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உங்களுக்குப் பிடித்த மிக அருகாமையில் இருக்கும் ஊர்களுக்கு சென்றாலே போதும். தனியாக செல்வதைக் காட்டிலும், தனக்கு ஒத்த அலைவரிசை உடைய மற்றொருவரையும் அழைத்துச் செல்லும்போது, அந்த பயணம் இன்னும் சிறப்பானதாக இருக்கும். அதற்கு நீங்கள் சரியான நபரை தேர்தெடுத்து, திட்டமிடுதலுடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

  பயணச் செலவு

  நீங்கள் புது இடத்திற்கு பயணம் செல்ல திட்டமிடுவதற்கு முன், அந்த இடத்திற்கு செல்ல ஆகும் செலவுகளை கணக்கிட வேண்டும். அதற்கேற்ப, உங்களுடன் வரும் நபர்களும் பணத்தை சரி சமமாக பங்கிட்டு கொள்பவர்களாக இருப்பவர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் எளிமையாக பயணிக்க திட்டமிடுகையில், உங்களுடன் வருபவர் ஆடம்பரத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணச் செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், அந்த நேரத்தில் முடிவெடுப்பதில் இருவருக்கும் இடையே சிக்கல் எழவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால், உங்களுக்கு அனைத்துவிதங்களிலும் ஒத்துபோகக்கூடிய நபரை அழைத்துச் செல்வது நல்லது.

  திட்டமிடுங்கள்  நீங்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை விரும்பும்போது, உங்களுடன் வருபவர் மலையேற்றத்தை விரும்புபவராக இருந்தால் பயணம் சிறப்பாக இருக்காது. முன்கூட்டியே எங்கு செல்ல வேண்டும் என்பதை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். செல்லும் இடங்கள் அனைத்தும் இருவருக்கும் பிடித்தமான, ரசிக்கக்கூடிய இடங்களாக இருக்க வேண்டும். அதாவது, சுற்றுலா இடத்தில் கிடைக்கக்கூடிய உணவு, தங்கும் இடங்களுக்கு எல்லாம் இருவரும் ஒரேசேர செல்ல வேண்டும். நீங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு அவர் வரவில்லை என்றால், அந்த நேரத்தில் தர்மசங்கடமான சூழல் உருவாகும்.
  நண்பரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

  பயணத்தை தொடங்குவதற்கும் முன்பு உங்கள் நண்பரின் விருப்பங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். கடற்கரை அல்லது மலையேற்றம் என எதுவாக இருந்தாலும் அங்கு சென்றால் இருவரும் ஒன்றாக அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். குறிப்பாக, கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் அங்கு போட்டிங் மற்றும் அலைச்சறுக்கு செய்ய விரும்பும்போது, அதில் உங்கள் பார்ட்னருக்கும் விருப்பம் உள்ளதா? என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் விளையாட்டுகளை தேர்ந்தெடுங்கள்.

  உணவு  பயணத்தையும் உணவையும் பிரிக்க முடியாது. அதேநேரத்தில் உணவை எடுத்துக்கொள்வதில் இருவருக்கும் வேறுபாடு இருப்பதில் தவறில்லை. அவருக்கு பிடித்தமான உணவுகளை அவரும், உங்களுக்கு பிடித்தமான உணவுகளை நீங்களும் எடுத்துகொள்ளலாம். ஏனென்றால், அவரவரின் உடல்நிலைக்கு ஏற்ப உணவுகளை எடுத்துகொள்ள வேண்டியது அவசியம். சைவம் அல்லது அசைவம் என நீங்கள் தேர்தெடுக்கும் உணவுகளுக்கு ஆகும் செலவு தொடர்பாக இருவருக்கும் இடையே விவாதம் எழுந்துவிடக்கூடாது. உணவும் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

  எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்  பயணம் என்பது இயற்கையானது. நீங்கள் திட்டமிட்டு செல்வது ஓர் இடமாக இருந்தாலும், அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்ப உடனடியாக உங்கள் திட்டத்தில் சிறு மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கும். அப்போது, நீங்கள் இருவரும் புதிய பயணத்தை தொடங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். திறந்த மனதுடன் ஒருவர் சொல்வதை மற்றொருவர் காது கொடுத்து கேட்க வேண்டும். சிறிய குழப்பங்களும் பயணத்தை நிம்மதியற்றதாக மாற்றிவிடும் என்பதால், முன்கூட்டியே சரியாக திட்டமிட்டு உங்கள் பயணத்தை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

  Published by:Sankaravadivoo G
  First published: