Home /News /lifestyle /

பயணத்தின் போது டிராவல் பேகில் கட்டாயம் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள்... மிஸ் பண்ணிடாதீங்க...

பயணத்தின் போது டிராவல் பேகில் கட்டாயம் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள்... மிஸ் பண்ணிடாதீங்க...

பயணப்பை

பயணப்பை

Travel essentials: ஜூலை தொடங்கிவிட்டது.  வெயிலின் வெக்கை எல்லாம் குறைந்து மழையும் குளிரும் ஆரம்பித்து விட்டது.. சுற்றுலா சீசனும் தொடங்கி விட்டது. பயணத்திற்கான பையை ரெடி பண்ண வேண்டாமா?

ஜூலை தொடங்கிவிட்டது.  வெயிலின் வெக்கை எல்லாம் குறைந்து மழையும் குளிரும் ஆரம்பித்து விட்டது.. சுற்றுலா சீசனும் தொடங்கிவிட்டது. பயணத்திற்கான பையை ரெடி பண்ண வேண்டாமா?

பயத்திற்கான பையில் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய பொருட்களை சொல்கிறோம் . எடுத்து வைத்து விட்டீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

பயணத்திற்கு எடுத்துச்செல்லும் போது தேவையான எல்லா பொருட்களையும் உள்ளடக்கும் ஒரே பெரிய பையை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை நாள் பயணமானாலும் அதற்கு ஏற்ற பொருட்களை அடக்கும் பையாக இருக்கவேண்டும்.

பாதுகாப்பு பொருட்கள்: கொரோனா காலம் இன்னும் முடியாத காரணத்தால் மாஸ்க் பாக்கெட் ஒன்று வைத்துக்கொள்ளுங்கள் . சானிடைசர்கள் பாட்டிலில் அல்லது பாக்கெட்டுகளில் கிடைக்கும். அதை பயணத்தின் போது பயன்படுத்துங்கள். இடம் மிச்சமாகும்.

மருந்துகள்: அடிப்படையாக தலைவலி, காய்ச்சல், சளிக்கான மருந்துகளை எப்போதும் கையில் வைத்துக்கொள்வது நன்று. ஒரு சிறிய கிருமிநாசினி, பேண்ட் எயிட் வைத்து கொள்ளுங்கள்.துணி: எங்கு செல்கிறோம், எவ்வளவு நாள் செல்கிறோம் என்பதை பொறுத்து ஆடைகள், உள்ளாடைகள், துண்டு முதலியவற்றை எடுத்துக் கொள்ளவும். துணியின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பையின் எடையைக் குறைக்கும். எடை அதிகமான துணியாக இல்லாமல் லேசான துணியாக இருப்பது நன்று. அதோடு அவசரத்திற்கு கூடுதலாக 1 செட் உள்ளாடைகளை வைத்துக்கொள்ளுங்கள்.

காற்றடிக்கும் தலையணை , குளிர் தாங்கும் ஆனால் எடை குறைவான சால்வை வைத்துக்கொள்ளுங்கள்.

குளியல் பொருட்கள்: பயணத்திற்காகவே சிறிய குளியல் பொருட்கள் கிடைக்கின்றன. பிரஷ், சிறிய பேஸ்ட், 1 சோப், ஷாம்பு, தேங்காய் எண்ணெய், சன்ஸ்கிரீன், வாசலின் ஜெல்லி சிறிய அளவுகளில் வைத்துக்கொள்ளுங்கள்.போனுடன் அதனுடைய மின்னூட்டி (charger ), மின்தேக்கி (powerbank ), ஹெட்போன் ஆகியவற்றை மழையில் நனையாமல் இருக்க ஒரு ஜிப் பையில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். பாஸ்ட் சார்ஜ்ர் நன்று.

கேமரா எடுத்து செல்பவர்கள் கூடுதல் லென்ஸ், பேட்டரி, அதை துடைக்கும் பொருள்களோடு கேமரா பையை தயார் செய்துகொள்ளவும்.டைரி: பயணங்களின் நினைவுகளை சேகரித்து வைக்க படங்களோடு  நம் கையெழுத்துக்களால் பதியவைப்பது தனி சுகம். கையில் ஒரு சிறிய பயண டைரி, பேனா வைத்துக் கொள்ளுங்கள். ஒரு இடத்திற்கு போகும் முன் அதன் வழிக் குறிப்புகள், மாற்று வழிக் குறிப்புகள், எந்த இடங்கள் எல்லாம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்று குறித்துக் கொள்ளுங்கள். இணையம் இல்லாத பகுதி அல்லது போன் இல்லாவிட்டாலும் இந்த குறிப்புகள் நமக்கு உதவும்.

டிக்கெட்களை போனில் வைத்திருப்பதோடு பேப்பர் காப்பி வைத்துக்கொள்ளுங்கள்.

அடையாள அட்டை, தேவையான பணம்,பண அட்டைகளை வாலட்டில் மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்.ஒரு லிட்டர் தண்ணீர் குடுவை ஒன்றை எப்போதும் கையில் வைத்துக்கொள்ளுங்கள். பயணங்களில் சளி பிடிக்கும் மக்கள் சிறிய அளவில் உள்ள பிளாஸ்க் வைத்துக்கொள்ளுங்கள்.

மழை பெய்யும் இடமென்றால் மெலிதான ரெயின் கோட் வைத்துக்கொள்ளுங்கள். குளிர் தாங்கும், தலையையும் மூடும் ஜாக்கெட் வைத்துக் கொள்ளுங்கள்.

வானில் பறக்க ரெடியா? சென்னையில் பாராகிளைடிங், பாராமோட்டரிங் ஐடியாக்கள்

பயணத்தின் போது படிக்க ஒரு சிறிய புத்தகம்/கிண்டல்/பாடல் கேட்க mp3 பிளேயர் வைத்துக்கொள்ளுங்கள்.

ட்ரெக்கிங் பயணங்களுக்கு.. மருந்துகளோடு கட்டு போடும் காஸ் துணி, கொஞ்சம் பஞ்சு, அன்டிபையோட்டிக் மருந்தை வைத்துக்கொள்வது நன்று. கொசுவிரட்டியும் முக்கியம். மடக்கும் சிறிய கத்தி, கூடுதல் பாட்டெரியோடு கையடக்க டார்ச் முக்கியம். கூடுதலாக ஒரு காலனி வைத்துக்கொள்ளுங்கள்.பெண்கள் அவர்களுக்கு தேவைப்படும் நப்க்கின்,டாம்பூன், டிஷ்யூ கையில் எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Travel, Travel Guide, Travel Tips

அடுத்த செய்தி