முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெளிநாடு பயணத்தில் ஆசையா? விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய 10 ஆசிய நாடுகளின் பட்டியல் இதோ !

வெளிநாடு பயணத்தில் ஆசையா? விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய 10 ஆசிய நாடுகளின் பட்டியல் இதோ !

விசா தொந்தரவு இல்லாமல் பயணம் செய்ய கூடிய 10 ஆசிய நாடுகள்

விசா தொந்தரவு இல்லாமல் பயணம் செய்ய கூடிய 10 ஆசிய நாடுகள்

விசா பற்றிய கவலை தேவையில்லை சுற்றியுள்ள செல்ல சிறந்த இடங்கள்

  • Last Updated :

வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்ல ஆர்வமிருந்தும் விசா பற்றிய கவலை இருந்தால் அதற்குத் தீர்வு இதோ.

சில நாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்திய மக்களுக்கு அந்நாட்டிற்குச் செல்ல விசா எடுக்கத் தேவையில்லை நம் நாடு பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் அல்லது ஆன்-அரைவல்-விசா (On-Arrival-visa) இருந்தால் மட்டும் போதுமானது. இங்கே நாம் விசா தொந்தரவு இல்லாமல் பயணம் செய்யக் கூடிய 10 ஆசிய நாடுகள் பற்றிப் பார்க்கலாம்.

Visa on Arrival என்பது நீங்கள் ஒரு நாட்டிற்குச் செல்லும் போது வழங்கப்படும் விசா ஆகும். ஒரு நாட்டிற்குள் நுழைய விசா தேவைப்படும் ஆனால் பயணத்திற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லாத வெளிநாட்டினருக்கு இந்த வகை வழங்கப்படுகிறது. குறிப்பாகக் குறுகிய கால பயணங்களுக்காகச் செல்லும் பயணிகளுக்கு இது வழங்கப்படுகிறது.

பூட்டான்:

பூட்டானுக்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகள் இப்போது விசா தொந்தரவு இல்லாமல் செல்ல முடியும். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்றால், செல்லுபடியாகும் கீழ்க்காணும் 2 பயண ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கையோடு கொண்டு செல்ல வேண்டும். இதில் முதலாவது குறைந்தபட்சம் 6 செல்லுபடி மாதங்கள் கொண்ட இந்திய பாஸ்போர்ட். மற்றொன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை.

கம்போடியா (VOA):

கம்போடியா நாட்டிற்குச் செல்ல விரும்பும் இந்தியர்கள்  விசா-ஆன்-அரைவல் (VOA) முறையில் பெறலாம். இருப்பினும், இதற்குச் சிறிது நேரம் ஆகலாம். எனவே புறப்படுவதற்குச் சற்று முன்பு ஆன்லைனில் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். படிவத்தை நிரப்புவது உட்பட முழு செயல்முறையும் முடிக்க சில நிமிடங்களே எடுக்கும். பதிவுகளின் படி, பெரும்பாலானவர்கள் 3-4 பிசினஸ் நாட்களில் தங்கள் விசாவை பெற்றுள்ளனர்.

Also Read:சித்த பிரமை பிடித்தது போல் அலறி துடித்து கதறி அழுத பள்ளி மாணவிகள்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

இந்தோனேஷியா:

அழகான நாடான இந்தோனேஷியாவிற்கு இந்தியப் பயணிகள் விசா இல்லாமல் செல்லலாம். ஆனால் உங்கள் பயண காலம் 30 நாட்களுக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இமிக்ரேஷன் கவுண்டரில் விசா விலக்கு முத்திரையை (visa exemption stamp) பெற வேண்டும். இந்தோனேஷியாவில் 30 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் அங்கு நுழையும் போது VOA-க்கு விண்ணப்பிக்கலாம்.

லாவோஸ் (VOA):

விசா தொந்தரவு இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ஏதுவான மற்றொரு அழகிய நாடு லாவோஸ். லாவோஸ் விசாவிற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க ஒருவர் கஷ்டப்பட வேண்டியதில்லை. லாவோஸில் VOA-ஐ எளிதாகப் பெறலாம் என்றாலும் 30 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதே போல லாவோஸுக்குள் நுழையும் நேரத்திலிருந்து குறைந்தது 6 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை ஒருவர் வைத்திருக்க வேண்டும்.

மகாவ்:

30 நாட்கள் மட்டுமே பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியப் பயணிகளுக்கு மகாவ் நாட்டிற்குச் செல்ல விசா தேவையில்லை. இந்நாட்டில் நுழையும் ஒருவர் நுழையும் தேதியில் குறைந்தது 6 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.

மாலத்தீவுகள் (VOA):

இந்த அழகியா தீவு நாடு இந்தியப் பயணிகளுக்கு VOA-வை இலவசமாக வழங்குகிறது. மாலத்தீவில் இந்தியர்களுக்கான ஆன்-அரைவல் டூரிஸ்ட் விசாக்கள், வரும் நாளிலிருந்து 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும், இது 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மியான்மர் (VOA):

இந்தியப் பயணிகள் மியான்மரில் இருக்கும்போது VOA-ஐ எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். இது மியான்மரில் அதிகபட்சமாக 30 நாட்கள் தங்கியிருக்கும் வாய்ப்பை வழங்குகிறது. மியான்மருக்கு சென்ற பின் ஒருவர் இதை அந்நாட்டு விமான நிலையத்தில் கட்டணம் செலுத்தி, அதைத் தொடர்ந்து விசா முத்திரையைப் பெறலாம்.

நேபாளம்:

அண்டை நாடான நேபாளத்திற்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. எனினும் இந்திய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம் போன்றவற்றால் வழங்கப்பட்ட சரியான ஆவண சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.

Also Read:குழந்தைகள் இரகசியம் காப்பதை பெற்றோர் ஊக்குவிக்கக் கூடாது... ஏன் தெரியுமா..?

இலங்கை (VOA):

இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் இலங்கை செல்லும் போது VOA பெற்றுக் கொள்ளலாம். எனினும் ஆவணத்தைப் பெற ஒருவர் நாட்டிற்குச் செல்லும் முன் இலங்கையின் Electronic Travel Authorisation-ல் (ETA) விண்ணப்பிக்க வேண்டும்.

தாய்லாந்து (VOA):

top videos

    சுற்றுலா நோக்கங்களுக்காகத் தாய்லாந்து செல்லும் இந்தியர்கள் விசா ஆன் அரைவல் திட்டத்தின் கீழ் தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் குறைந்தது 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை ஒருவர் வைத்திருக்க வேண்டும்.

    First published:

    Tags: Travel