பவளங்களின் இனப்பெருக்கத்தை சீர்குலைக்கும் ஒளி மாசுபாடு!... எவ்வாறு தெரியுமா?

பவளங்களின் இனப்பெருக்கத்தை சீர்குலைக்கும் ஒளி மாசுபாடு!... எவ்வாறு தெரியுமா?

மாதிரி படம்

உலகெங்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதால், ஒளி மாசுபாடு பவளங்களை மேலும் அச்சுறுத்தக்கூடும்,

  • Share this:
பவள சுற்றுச்சூழல் அமைப்புகள் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு ஆதாரமாக இருக்கின்றன. புயல்கள் மற்றும் அரிப்புகளிலிருந்து கடற்கரையோரங்களை பாதுகாத்தல், பொருளாதார ரீதியாக முக்கியமாக மீன் இனங்களுக்கு வாழ்விடம், மீன்பிடித்தல், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கு உள்ளூர் பொருளாதாரங்களுக்கான வேலைகள் மற்றும் வருமானத்தை வழங்குதல், புதிய மருந்துகளின் மூலமாகவும் இந்த பவளங்கள் செயல்படுகிறது.

மேலும் இதுபோன்ற எண்ணற்ற பலன்களை அளிக்கும் பவளங்கள் பற்றிய சமீபத்திய ஆய்வு ஒன்று நம்மை உண்மையில் யோசிக்க செய்துள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் தொடங்கியவுடன், காற்று மாசுபாட்டை பற்றி நாடு முழுதும் பரவலாக பேச்சுக்கள் எழ தொடங்கியுள்ளது. இருப்பினும், ஒளி மாசுபாட்டின் மோசமான விளைவுகளைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை.

Current Biology-யில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, கடலோரப் பகுதிகளில் வாழும் பவளங்களின் "இயற்கையான இனப்பெருக்க சுழற்சிகள் செயற்கை ஒளி மாசுபாட்டால் எவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றன" என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. கடல் உயிரினங்கள், குறிப்பாக பவளங்களின் காலனிகள் (Colonies of Corals), அவற்றின் நடத்தை மற்றும் உயிரியல் செயல்முறைகளை கட்டுப்படுத்த சூரிய ஒளி மற்றும் நிலவொளியின் இயற்கையான சுழற்சிகளை நம்பியுள்ளன. ஆனால் தெரு விளக்குகள், விளம்பர பலகைகள் மற்றும் கட்டிடங்களிலிருந்து செயற்கை ஒளி கடலில் பரவுவதால், பவளங்களின் இந்த இயற்க்கை இயக்கங்கள் தொந்தரவு செய்யப்படுகின்றன.

LED விளக்குகளால் எக்ஸ்போஸாகும் பவளம் தவறான நேரத்தில் முட்டையிடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வதை தடுக்கிறது. கரீபியன் கடல், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் செயற்கை ஒளியால் அதிகம் பாதிக்கப்படும் கடல்களின் வரைபடத்தை ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியது.செங்கடலில் உள்ள அகாபா வளைகுடா இயற்கையாக இருப்பதை விட இரவில் கிட்டத்தட்ட 47 சதவீதம் பிரகாசமாகவும், சில இடங்களில் 60 மடங்கு பிரகாசமாகவும் இருக்கும். இந்த ஆய்வு குறித்து விளக்கிய இஸ்ரேலில் உள்ள பார்-இலன் பல்கலைக்கழகத்தின் எழுத்தாளரும், உயிரியலாளருமான ஓரன் லெவி, பூமியின் சுழற்சியில் இருந்து எழும் தினசரி ஒளி-இருண்ட சுழற்சி கடல் உயிரியலுக்கு மிகவும் முக்கியமானது.

உலகெங்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதால், ஒளி மாசுபாடு பவளங்களை மேலும் அச்சுறுத்தக்கூடும், அவை ஏற்கனவே புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான சீரழிவிற்கு உள்ளாகியுள்ளன. 'வெளிப்புற கருத்தரித்தல்' (External Fertilization) எனப்படும் ஒரு செயல்பாட்டில் ஒரே நேரத்தில் கேமட்கள் எனப்படும் பாலியல் செல்களை, அவற்றின் சுற்றியுள்ள நீரில் வெளியிடுவதன் மூலம் பவளங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையுடன், ஒத்திசைக்கப்பட்ட முட்டையிடல் உறுதி செய்யப்படுகிறது.

கொரோனா காலத்தில் தீபாவளிக்கான ஷாப்பிங்கை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது..?

பேராசிரியர் லெவி மற்றும் அவரது சகாக்கள், சமீபத்திய ஆராய்ச்சியில், இந்தோ-பசிபிக் பெருங்கடலில் இருந்து அக்ரோபோரா டிஜிட்டல்ஃபெரா மற்றும் அக்ரோபோரா மில்லெபோரா ஆகிய இரண்டு பவள இனங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த குழு 90 பவள காலனிகளை வெளிப்புற தொட்டிகளாக மாற்றி, அதில் கடல் நீர் நிரப்பப்பட்டு அவை இயற்கையாக சூரிய ஒளி மற்றும் நிலவொளியை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.பின்னர் அவர்கள் பவளப்பாறைகளை மூன்று குழுக்களாக பிரித்தனர், ஒவ்வொன்றும் இரண்டு இனங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 15 காலனிகளை கொண்டிருந்தன. ஒரு குழு இயற்கையான ஒளிக்கு மட்டுமே வெளிப்படும், மற்றொன்று சூடான LED விளக்குகளுக்கும், இறுதியான குழு குளிர்ச்சியான LED வெளிச்சத்திற்கும் வெளிப்பட்டது. LED ஒளியில் வெளிப்படும் பவளப்பாறைகள் இயற்கை ஒளியின் கீழ் எஞ்சியிருக்கும் பவளங்களுடன் ஒப்பிடுகையில் முட்டை மற்றும் விந்தணுக்களின் உற்பத்தியில் தாமதத்தை சந்தித்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

பவளப்பாறைகள் அவற்றின் ஒத்திசைக்கப்பட்ட பாலியல் உயிரணு வெளியேற்றங்களை எவ்வாறு திட்டமிடுகின்றன என்பதில் சூரிய மற்றும் சந்திர ஒளி சுழற்சிகள் அவசியம் என்று ஊகிக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் விரைவான மக்கள் தொகை பெருக்கம் பெருங்கடல்களை பாதிக்கும் LED விளக்குகளின் அளவு அதிகரிக்க வழிவகுத்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். LED விளக்குகள் தண்ணீரில் ஆழமாக ஊடுருவி செல்லும். மேலும் இது நீல ஒளியைத் தருகின்றன. நகர்ப்புறங்களுக்கு அருகில் அமைந்துள்ள பவளப்பாறைகளை பாதுகாக்க, செயற்கை ஒளியின் தாக்கத்தை பற்றி நிர்வாகம் கருத்தில் கொள்வது தற்போது அவசியமாகிறது.

 

 
Published by:Sivaranjani E
First published: