வடஇந்தியாவில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் தான் பிரயாக்ராஜ். இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவே உலகெங்கிலும் இருந்து மக்கள் வருகின்றனர். தற்போது திரிவேணி சங்கமம் அருகே உள்ள லாவயங்கலாவில் ஒரு புதிய நதி சுற்றுலாத் தலத்தை அமைக்க திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
திரிவேணி சங்கமத்தில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் பிரயாக்ராஜ்ஜில் அமைந்துள்ள லவயங்கலா, கங்கை நதிக்கரை வாழ்க்கையை அனுபவிக்க ஏற்ற இடமாகும். மேலும் இது நதியில் வாழக்கூடிய அறிய உயிரினமான கங்கை டால்பின்களின் தாயகமாக உள்ளது. மேலும் கங்கை நதியை ஒட்டிய சில தீவுகளின் சங்கமமாகவும் உள்ளது.
'கங்கா த்வீப்' என்ற திட்டத்தின் மூலம், லவயங்கலாவின் கங்காபூர் மற்றும் துய்பூர் கச்சார் பகுதிகளில் உள்ள தீவில் ஒரு நதி சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக லவயங்கலா தீவில் ஒரு வேத கூடார நகரம், படகுகள், மிதக்கும் படகுத் தளங்கள், கட்டுமரங்கள் மூலம் நதியை சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இதற்காக தற்போது நடைபெற்று வரும் உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு-2023 இல் ரூ.75 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள தால் ஏரியை போலவே இந்த நதியையும் பிரபலப்படுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.
கங்கா த்வீப் திட்டத்தை முன்மொழிந்துள்ள தாரகஞ்ச் பகுதியைச் சேர்ந்த தன்மய் கிஷோர் அகர்வால், படகு சவாரி தவிர்த்து இந்த பகுதியில் வேறு சில துறைகளையும், அது சார்ந்த சுற்றுலா அம்சங்களையும் உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஆன்மீகம், தியானம், ஆயுர்வேத மற்றும் யோகா பயிற்சிகளில் கவனம் செலுத்த உள்ளனர்.
மேலும் உயர்நிலை வேத திருமணங்கள், ஆற்றங்கரையில் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகியவை புனித அனுபவங்களை முன்னெப்போதும் இல்லாத புதிய நிலைக்கு கொண்டு செல்லும். யோகாவை ஊக்குவிக்க ஒரு தியான மையம் மற்றும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், "நாங்கள் இங்கு மென்மையான ஒலி அமைப்புகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம், இதன் மூலம் பக்தி பாடல்களின் ட்யூன்கள் நாள் முழுவதும் இந்த இடத்தில் ஒலிக்கும். அமைதியான அலைகளுக்கு மத்தியில், மக்கள் மன அமைதியை அனுபவிக்க காலை மற்றும் மாலை வேளைகளிலும் பாடல்கள் போடா திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 50 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Travel Tips, Uttar pradesh