லாங்சா என்பது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் உள்ள கண்ணுக்கினிய ஆனால் ஒப்பீட்டளவில் பெரிதாக பயணிக்காளால் கண்டுகொள்ளப்படாத கிராமம். இந்த பிரமிக்க வைக்கும் இமயமலை குக்கிராமம் கடல் விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதைபடிவங்களால் நிறைந்தது என்பது பலருக்கு தெரியாது.
மலையில் எப்படி கடல் உயிரினங்களின் படிமங்கள் இருக்கும் இன்று யோசிக்கலாம். அதற்கு ஒரு பழங்கதை பற்றி தெரிய வேண்டும், மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பூமி இன்றைக்கு இருப்பது போல இருக்கவில்லை. கண்டங்கள் சிதறி வெல்வேறு அமைப்பில் இருந்தது. அப்படி இந்திய நிலத்தட்டு ஆசிய நிலப்பகுதியில் சேருமுன் அங்கு டெதிஸ் கடல் என்ற பகுதி இருந்தது.
அந்த கடலில் வாழ்ந்த உயிரினங்கள் இந்திய கண்டம் ஆசிய பகுதியில் மோதிய வேகத்தில் நிலம் உயரும் போது இமயமலை நிலத்துடன் சேர்த்து உயர்ந்துள்ளது. இன்னும் இமயமலை வளர்த்துக் கொண்டு தானே இருக்கிறது. அப்படி தான் கடல் உயிர்கள் மலை மேல் உள்ள இடத்தில் படிமங்கள் ஆயின.4400 மீ உயரத்தில் அமைந்துள்ள லாங்சா (ஸ்பிடி) கிராமத்தின் பல பகுதிகளில் இந்த படங்களைக் காணலாம்.
இதையும் படிங்க: ஐரோப்பிய கடற்படையை வென்ற கன்னியாகுமரியின் பொக்கிஷ பீச் நகரம் 'குளச்சல்' பற்றித் தெரியுமா?
லாங்சா எங்கே அமைந்துள்ளது?
இளவரசி மலை என்றும் அழைக்கப்படும் சாவ் சாவ் காங் நில்டா மலையின் அடிவாரத்தில் லாங்சா என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது . அழகான குக்கிராமம் இரண்டு மலைகளின் பகுதிகளில் அமைந்துள்ளது மற்றும் மேல் மற்றும் கீழ் கிராமப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஸ்பிட்டியில் லாங்சா மற்றும் ஹிக்கிமைச் சுற்றியுள்ள மலைகளில் நீங்கள் பயணம் செய்தால், சில அற்புதமான, மற்றும் மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் புதைபடிவங்களால் சூழப்பட்டிருப்பதைக் காண்பீர்கள், அவை பெரிய பெரிய பாறைகளின் கீழ் நன்கு புதைந்துள்ளன. இது போன்ற புதைபடிவங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சௌடுவா மையத்தில் (புதைபடிவத்திற்கான உள்ளூர் பெயர்) அறிந்துக்கொள்ளலாம்.
இங்கு 250 முதல் 199 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ட்ரயாசிக் காலத்தின் பவளப்பாறைகள் மற்றும் 199 மற்றும் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரயாசிக்-ஜுராசிக் காலத்தின் அம்மோனாய்டுகளைக் காணலாம்.புதைபடிவங்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன
இதையும் படிங்க: இமயமலையில் 428 கிமீ 'லே -மணாலி ' சாலையை நடந்து கின்னஸ் சாதனை படைத்த மருத்துவர்... எவ்வளவு நேரத்தில் தெரியுமா?
பல ஆண்டு பழமையான புதைபடிவங்களின் மதிப்பை புரிந்து கொண்ட பலர், இந்த துண்டுகளை சேகரித்து சுற்றுலாப் பயணிகளுக்கு மலிவான விலையில் விற்கத் தொடங்கினர். இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் ஸ்பிதி பள்ளத்தாக்குக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடல் படிமங்களை விற்பனை செய்ய இமயமலை பிரதேச அரசு தடை விதித்தது.
அதோடு கிராமத்தின் அருகே மலையின் நடுவில் பெரிய புத்தர் சிலையும் ஒரு கோவிலும் அமைந்துள்ளது. இமைய மலை பின்னணியில் இந்த இடத்தை காண்பது கண்களுக்கு விருந்தாக அமையும்.
தலைமையகமான காசாவிலிருந்து லாங்சாவை எளிதாக அடையலாம். ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைத்துள்ள முக்கிய நகரங்களில் இதுவும் ஒன்று. மேலும் மக்கள் மலையேற்றம் செய்ய தகுந்த இடம். ஹிமாச்சலம் செல்லும் திட்டத்தில் இந்த இடத்தைத் தவறவிட்டு விடாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Himachal Pradesh, Travel, Travel Guide, Trip