முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வயநாடு அருகே இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஹனிமூன் ஸ்பாட் பற்றி தெரியுமா..?

வயநாடு அருகே இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஹனிமூன் ஸ்பாட் பற்றி தெரியுமா..?

லக்கிடி

லக்கிடி

பொதுவாக கேரளா ஹனிமூன் ஸ்பாட்கள் எடுத்தால் ஆழப்பே, கொச்சின் வயநாடு தான் கண்முன் வரும். அதை இப்போது மாற்றுவோம்..

  • Local18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Wayanad |

திருமண சீசன் களை கட்டிக்கொண்டு இருக்கும் நேரம் ஹனிமூன் ஸ்பாட்களும் நிரம்பி வழிய தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தம்பதிகள் அருகில் இருக்கும் கேரள மாநிலத்துக்கு தான் ஹனிமூன் செல்கிறார்கள். அப்படி செல்லும் தம்பதிகள், கூட்டம் நிறைந்த இடத்திற்குள் சிக்காமல் இருக்க அழகான ஒரு ஸ்பாட் இருக்கு.

பொதுவாக கேரளா ஹனிமூன் ஸ்பாட்கள் எடுத்தால் ஆழப்பே, கொச்சின் வயநாடு தான் கண்முன் வரும். மலைப்பாங்கான குளிர்ப்ரதேசமான வயநாடு தான் அனைவரின் முதல் தேர்வாக இருக்கும். ஆனால் வயநாடு போன்ற பிரபலமான இடம் கொஞ்சம் கூட்டமாகவே இருக்கும். அதனால்தான் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள லக்கிடி( Lakkidi) என்ற சிறிய மலை பிரதேசத்தைப் பற்றி உங்களுக்கு சொல்கிறோம்.

வயநாத்தின் முக்கிய மலை பகுதிக்கு அருகில் கொஞ்சம் உயரம் குறைவான இடத்தில் அமைந்துள்ள இந்த லக்கிடி மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மூடுபனியுடன் கூடிய காலை நேரத்தில் எழுவதை நீங்கள் விரும்பினால், லக்கிடி உங்களுக்கான இடம். வயநாட்டில் இருக்கும் அதே பனி, சில்லென்ற காற்று, சாரல் என்று எல்லாவற்றையும் லக்கிடி மலையில் உங்களால் அனுபவிக்க முடியும்.

லக்கிடி பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இது ஒரு மிகச் சிறிய மலைவாசஸ்தலம். சிறிய மலை என்பதால் அங்கு பார்க்கக்கூடிய இடங்கள் எல்லாம் அருகிலேயே இருக்கிறது. பயணத்தில் அதிக நேரத்தை கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சில இடங்களுக்கு மட்டும் வாகன போக்குவரத்து தேவைப்படலாம் என்றாலும், பெரும்பாலான இடங்களை நீங்கள் எளிதாக நடந்தே அடையலாம்.

அதேபோல சுவாரசியமான இடங்களை பார்க்க விரும்பினால், லக்கிடியில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள பூக்கோடு ஏரிக்கு(Pookode Lake) ஒரு விசிட் அடிங்க. 3 கிலோமீட்டர் உங்களால் நடக்க முடியும் என்றால் இந்த ஏரிக்கு நடந்து செல்லும்\ங்கள். அந்த பாதையில் நடந்து செல்லும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மலைப்பாங்கான இடத்தில் இருந்து சொர்க்கத்துக்கு பாதை போவது போல இருக்கும். வாகனம் இல்லாமல் பொறுமையாக நடந்து சென்று வருவதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

இதையும் பாருங்க:  கோவை அருகே இப்படி ஓர் இடமா? - தொங்குபாலம் முதல் போட்டிங் வரை... அட்டகாசமான ஸ்பாட் இதோ!

அதேபோல லக்கிடியை சுற்றி உள்ள முக்கிய இடங்களுள் ஒன்று, செம்ப்ரா சிகரம்(Chembra Peak). செம்ப்ரா சிகரம் லக்கிடியில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, இது ஒரு சிறந்த ட்ரெக்கிங் இடமாகும். மலையேற சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். ஆனால் அதிக செங்குத்தாக இல்லாமல் நடப்பதற்கு நன்றாக இருக்கும். சுற்றி இருக்கும் இயற்கை அழகு உங்கலாய் சோர்ந்து போக விடாமல் பார்த்துக்கொள்ளும். ஒரே நாள் காலையில் மலை ஏறி மாலையில் திரும்பிவிடலாம். தங்கி இருந்து விடும் வரலாம்.

லக்கிடியில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுக்கு முந்தைய எடக்கல் குகைகளையும் நீங்கள் பார்க்கலாம். சில பழங்கால பாறைக் கலைகள் மற்றும் கல்வெட்டுகளைக் காண இந்தக் குகைகளுக்குச் செல்லுங்கள். ஆனால் லக்கிடி மலை மட்டுமே உங்களை இதமான வானிலையோடு லயித்து இருக்க வைக்கும்.

லக்கிடியை எப்படி அடைவது?

விமானம் மூலம்: லக்கிடிக்கு அருகிலுள்ள விமான நிலையம் காலிகட்/கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் ஆகும். இது லக்கிடியில் இருந்து சுமார் 71 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விமான நிலையத்திலிருந்து, நீங்கள் ஒரு டாக்சி அல்லது பேருந்து மூலம் லக்கிடியை அடையலாம்.

ரயில் மூலம்: லக்கிடிக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் கோழிக்கோடு ரயில் நிலையம் ஆகும், இது சுமார் 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சாலை வழியாக வர நினைத்தால் லக்கிடி கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சுயமாக ஓட்டுவதன் மூலம் லக்கிடியை அடையலாம். சாலைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. மேலும் மலைகள் வழியாக வாகனம் ஓட்டுவது மிகவும் அழகான அனுபவத்தை தரும்.

First published:

Tags: Honeymoon, Kerala, Travel, Wayanad