• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஹேப்பி நியூஸ் மக்களே... லடாக்கில் சுற்றுலா கட்டுப்பாடுகள் தளர்வு!

ஹேப்பி நியூஸ் மக்களே... லடாக்கில் சுற்றுலா கட்டுப்பாடுகள் தளர்வு!

லடாக்

லடாக்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இந்தியர்களாக இருப்பவர்கள் Inner Line Permit -ஐ பெறத் தேவையில்லை.

  • Share this:
லடாக்கில் உள்நாட்டு பயணிகளுக்கான சில கட்டுப்பாடுகள் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தளமான லடாகிற்கு வாழும் காலத்தில் ஒருமுறையாவது பயணித்துவிட வேண்டும். இயற்கையின் பேரழகு மற்றும் அதிசயங்கள் சங்கமித்திருக்கும் அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து செல்கின்றனர். பைக் பிரியர்கள் பலர் கன்னியாகுமரி முதல் லடாக் வரை தங்களுடைய இரு சக்கர வாகனத்திலேயே பயணம் மேற்கொள்பவர்களும் உள்ளனர். ஆபத்துகள் எப்போதும் நிறைந்திருக்கும் கரடுமுரடனா பாதைகளின் வழியே பயணித்துவிட்டு, வீடு திரும்புவதில் இருக்கும் சுகமே வேறுமாதிரியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழியில் ஆயிரக்கணக்கான புதிய மனிதர்களையும், சூழல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ராணுவ நிலைகளை பார்க்கும் வாய்ப்புகளுடன், எல்லைப் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களுடனும் கலந்துரையாடலாம். இந்தியர்களாக இருந்தாலும் லடாக் பகுதிக்கு செல்லும்போது, குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த பகுதிகளுக்கு செல்ல விரும்பினால் Inner Line Permit -ஐ கட்டாயம் பெற வேண்டும். இல்லையென்றால், கார்கில் உள்ளிட்ட சில பகுதிகளில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை பார்க்க முடியாது.

தற்போது அந்த கட்டுப்பாடுகளில் சிலவற்றை லடாக் நிர்வாகம் நீக்கியுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இந்தியர்களாக இருப்பவர்கள் Inner Line Permit -ஐ பெறத் தேவையில்லை. ஆனால், வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. லடாக் நிர்வாகம் கொடுத்துள்ள புதிய விதிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

1. லடாக் செல்லும் இந்தியர்கள் கட்டாயம் முறையான அடையாள அட்டையை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் Inner Line Permit -ஐ பெற வேண்டும்.

2. ஐ.எல்.பி அனுமதி அனைத்து இடங்களுக்கும் பொருந்தாது என்பதை சுற்றுலாப் பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும். எந்தெந்த இடங்களுக்கு செல்லலாம் என்பதையும், செல்லக்கூடாத பகுதிகளையும் லடாக் நிர்வாகம் அறிவுறுத்தும்.

3. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, ராணுவம் மற்றும் காவல்துறையுடன் ஆலோசனை நடத்திய பிறகு அனுமதி இல்லாமல் செல்லக்கூடிய பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Also read... Motivational Story : மோதி வெற்றி கொண்டே ஆகவேண்டும் - ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

4. பாகிஸ்தானின் எல்லையான நுப்ரா பள்ளத்தாக்கில் உள்ள டங்டி, கோயுல், தாங் கிராமம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல அனுமதியில்லை. நியோமாவில் உள்ள டெம்சோக், சுமார் ஆகிய பகுதிகளுக்கும் செல்ல முடியாது.

பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டு வெற்றிப்பெற்ற பகுதிகளான படாலிக் பகுதிக்கு செல்ல இன்னர் லைன் பர்மிட் தேவையில்லை. இன்னும் கூடுதல் பகுதிகள் இதனுடன் இணைக்கப்பட உள்ளதால், தற்போது லடாக் பயணத்தை திட்டமிட்டிருப்பவர்கள் சிறிது காலம் ஒத்திவைத்தால் கூடுதல் பகுதிகளை பார்வையிட்டு திரும்பலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: