இந்திய நாட்டில் இன்று இயங்கிவரும் பெரும்பாலான ரயில் மற்றும் சாலை வழிகள் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது தான். இந்தியாவில் வணிகம் செய்வதற்காக நுழைந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக நாடு முழுக்க தங்களது அதிகாரத்தை பரப்பத் தொடங்கினர். அப்போது அவர்களது இந்திய தயாரிப்புகளை இங்கிலாந்துக்கு அனுப்ப கடல் மார்க்கம் தான் ஒரே வழி.
உள்நாட்டில் இருந்து கரையோர இடங்களுக்கு பொருட்களை மாற்ற ரயில்சேவை தொடங்கப்பட்டது. அப்படியே பயணிகள் பயணிக்கும் சிறிய அளவிலான டிராம்கள் கொண்டுவரப்பட்டன. குதிரைகளால் இழுக்கப்பட்டு வந்த டிராம்கள் பின்னர் எரிபொருளால் இயக்கப்பட்டு வந்தது.
டிராம்கள் சென்னை, மும்பை,கொல்கத்தா, டெல்லி, கொச்சின், கான்பூர், நாசிக், பாட்னா ஆகிய நகரங்களில் இயங்கி வந்தது. நாடு விடுதலை அடைந்து பல மாற்றங்கள் ஏற்பட டிராம்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால், கொல்கத்தா நகரம் மட்டும் 150 ஆண்டுகளைக் கடந்தது நாட்டில் இயங்கும் ஒரே டிராம் அமைப்பாக இயங்கி வருகிறது.
முதன்முதலில் கொல்கத்தா நகரில் பிப்ரவரி 24, 1873 இல் டிராம் இயக்கப்பட்டது. 2023 வருடம் அதன் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்காக சிறப்பு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. இது முதல் முறை அல்ல..1996 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய கலைஞர்கள், டிராம் ஆர்வலர்கள், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் “டிராம்ஜாத்ரா” (Tramjatra) என்ற திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வந்தது.
கொரோனா காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஆனால் 150 குறிக்கும் இந்த முக்கிய வருடம் மீண்டும் திருவிழா கலைக்கட்டியுள்ளது. மேலும் இந்த டிராம்ஜாத்ரா திருவிழா மெல்போர்ன் மற்றும் கொல்கத்தாவில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா ஆரோக்கியமான வாழ்க்கை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் நிலைத்தன்மைக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் டிராம்களின் மதிப்பைக் கொண்டாடுகிறது.
இந்த ஆண்டு விழாவின் கருப்பொருள் ‘பாரம்பரியம் , சுத்தமான காற்று மற்றும் பசுமை இயக்கம்’ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாள் திருவிழாவின் போது, வண்ணமயமான டிராம்கள் சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு நகரம் முழுவதும் பயணித்துக்கும். அதோடு உள்ளூர் இளைஞர்கள் நகரும் டிராம்களில் நாடக மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
அறிக்கைகளின்படி இந்த ஆண்டு சிறப்பு பெற்று விளங்குவதால் ஆஸ்திரேலிய டிராம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நடத்துனரான ராபர்டோ டி' ஆண்ட்ரியா பயணிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டிராம்ஜாத்ரா அட்டைகளை விநியோகிக்கிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் டிராம் சேவையின் 150 வது ஆண்டு விழாவில் கலந்துகொள்வது தனக்கு கிடைத்த ஒரு பாக்கியம் என்றும் அவர் கூறினார்.
இதுபற்றிக் குறிப்பிட்டுப் பேசிய வங்காள போக்குவரத்துத் துறை அமைச்சர் சினேகசிஸ் சக்ரவர்த்தி, மேம்பாலங்கள் மற்றும் மெட்ரோ ரயில் உள்கட்டமைப்பு காரணமாக அனைத்து வழித்தடங்களிலும் டிராம்களை இயக்க முடியவில்லை. இருப்பினும், கொல்கத்தாவில் இருந்து டிராம்களை அகற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. கொல்கத்தா மாநகராட்சி மற்றும் கொல்கத்தா காவல்துறையினரிடமும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சில வழித்தடங்களில் டிராம்களை இயக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் பாருங்க: ரூ50,000 இருந்தாலே போதும்.. இந்த நாடுகளுக்கு சம்மர் வெக்கேஷன் சென்று வரலாம்..!
மேற்கு வங்க போக்குவரத்து கழகம் (WBTC) இயக்கி வரும் கொல்கத்தா நகரத்தில் மொத்தம் 257 டிராம்கள் உள்ளன. ஆனால் இப்போது தினமும் 35 டிராம்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.இந்த ஒற்றை அடுக்கு டிராம்களில் ஒரே சமயத்தில் 200 பேர் பயணிக்க முடியும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kolkata, Travel, Travel Guide