முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு கட்டிடம்தான் நகரமே.. எல்லாமே இங்க இருக்கும்.. ஆச்சர்யப்படுத்தும் அலாஸ்கா

ஒரு கட்டிடம்தான் நகரமே.. எல்லாமே இங்க இருக்கும்.. ஆச்சர்யப்படுத்தும் அலாஸ்கா

விட்டியர் நகரம்

விட்டியர் நகரம்

1953 இல் அலாஸ்காவின் ராணிவ வீரர்கள், அரசு ஊழியர்கள் தங்குவதற்காக 15 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஒரு நகரம் என்று சொன்னால் உங்கள் மனதில் ஒரு கட்டமைப்பு உருவாகும். 10 சாலைகள் அதில் 4 சாலை சந்திப்புகள் 100 வீடுகள், 20 அடுக்குமாடி குடியிருப்புகள், 5 கடைவீதியில் என்று எல்லாம் கத்தி பட விஜய் போல ஒரு டிஜிட்டல் மேப் போட்டுகொண்டு இருப்போம். ஆனால் ஒரு கட்டிடம். ஒரே ஒரு 15 மாடி கட்டிடம் தான் ஒரு நகரம் என்று சொன்னால் நம்ப கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கும். ஆனால் உண்மையில் அப்படி ஒரு நகரம் இருக்கிறது.

விட்டியர் என்பது அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் , ஏங்கரேஜிலிருந்து தென்கிழக்கே சுமார் 58 மைல்கள் (93 கிமீ) தொலைவில் உள்ள பாசேஜ் கால்வாயின் கடைசியில் உள்ள ஒரு நகரம். அதன் அனைத்து குடியிருப்பாளர்களும் பெகிச் டவர்ஸ் காண்டோமினியத்தில் வசிப்பதால் அந்த ஒற்றை கட்டிடமே ஒரு நகரமாகக் குறிப்பிடப்படுகிறது. இது "ஒரே கூரையின் கீழ் உள்ள நகரம்" என்ற புனைப்பெயரை கூட பெற்றுள்ளது.

விட்டியர் பகுதி ஒரு காலத்தில் சுகாச் இன மக்களின் துறைமுக பாதையின் ஒரு பகுதியாக இருந்தது . பின்னர், இந்த இடத்தில் இருந்து தங்கம் தோண்டி எடுத்த ரஷ்ய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களால் பயன்படுத்தப்பட்டது.1915 ஆம் ஆண்டில் அலாஸ்கா பகுதியில் உள்ள பனிப்பாறைக்கு அமெரிக்க கவிஞர் ஜான் கிரீன்லீஃப் விட்டியர் பெயரிடப்பட்டது. அதை ஒட்டிய நிலத்திற்கும் அந்த பெயரை சூட்டினார்.

இரண்டாம் உலகப் போரின் போது , ​​அமெரிக்காவின் இராணுவம் விட்டியர் பனிப்பாறைக்கு அருகில் துறைமுகம் மற்றும் இரயில் பாதையுடன் கூடிய இராணுவ வசதியை உருவாக்கியது மற்றும் அந்த வசதிக்கு கேம்ப் சல்லிவன் என்று பெயரிடப்பட்டது . 1943 ஆம் ஆண்டில் அலாஸ்கா ரயில்பாதையின் ஸ்பர் கேம்ப் சல்லிவன் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் துறைமுகம் அலாஸ்காவுக்குள் அமெரிக்க வீரர்களுக்கான நுழைவாயிலாக மாறியது.

அதன்பின்னர் 1953 இல் அலாஸ்காவின் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் தங்குவதற்காக 15 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. கடுமையான காலநிலையில் இங்குள்ள மாணவர்கள் மேற்கு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக நிலத்திற்கு அடியில் ஒரு சுரங்கமும் அமைக்கப்பட்டது. இதுபோக கடல் வழியாகவும் சீவார்ட் நெடுஞ்சாலை வழியாகவும் இந்த நகரத்தை அடையலாம்.

ஒரு நகரத்தில் என்னென்ன கட்டிடங்கள் இருக்க வேண்டுமோ அது எல்லாமே இந்த ஒரே கட்டிடத்திற்குள் இருக்கிறதாம் . இங்கு சுமார் 150 வீடுகள் இருக்கிறது. அதில் பத்து 1 படுக்கை அறைகள் உள்ள வீடுகள் மற்றவை 3 படுக்கை அறைகள் உள்ள வீடுகள். சகல வசதிகளோடு காணப்படுகிறது.

இதுபோக கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஒரு காவல் நிலையம், ஒரு தபால் நிலையமும் உள்ளது. முதல்தளத்தில், விருந்துகள் மற்றும் விழாக்கள் நடத்த ஒரு மண்டபமும் உள்ளது. அதே போல உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், ஒரு தொடக்கப்பள்ளி அனைத்தும் இந்த ஒற்றை கட்டிடத்தில் உள்ளது.

கிடைத்தட்ட நம் ஊரில் உள்ள கம்யூனிட்டி அப்பார்ட்மெண்டுகள் போலவே தோன்றுகிறது. ஆனால் அந்த அமைப்புகளில்  கூட நிறைய கட்டிடங்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பாக இருக்கும். விட்டியர் ஒரே ஒரு கட்டிடத்தை மட்டுமே உள்ளடக்கியது. தனித்து நிற்கும் இந்த கட்டிடத்தை சுற்றி சமீப காலமாக தான் சில சின்னசின்ன உணவகங்கள் வந்துள்ளன.

இதையும் படிங்க: பூமியின் வடகோடி நகரம் எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டா..? இங்கே பாருங்க...

ஒருபுறம் மலை, மறுபுறம் கடல் சூழ் இந்த நகரத்தின் சுரங்க பாதைகள் இரவு 10.30 க்கு எல்லாம் மூடி விடுகின்றனர். அவ்வளவு பாதுகாப்பு. நீங்கள் அலாஸ்கா பக்கம் செல்ல நேரிட்டால் இந்த ஒற்றை கூரை நகரத்தை மறக்காமல் பார்த்து வாருங்கள்.

First published:

Tags: Alaska, Travel