இன்றைய கால கட்டத்தில் தனியாகவே எல்லா வேலைகளையும் செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், ஒரு சில விஷயங்களில் மட்டும் பெண்கள் அவற்றை தனியாக செய்ய கூடாது என்று வரையறுத்து உள்ளனர். குறிப்பாக பயணம் சார்ந்த விஷயங்களில் தனியாக செயல்பட கூடாது என்கிற எண்ணத்தை இந்த சமூகம் கொண்டுள்ளது.
இருப்பினும் பெண்கள் ஆண்களை போலவே தனியாக பயணம் செய்வது இயல்பான ஒன்றாக இந்த சமூகம் கருத வேண்டும். இதை முன்மொழியும் வகையில், இந்திய ரயில்வேயில் தனியாகப் பயணிக்கும் பெண் பயணிகளைப் பாதுகாக்க கூடிய வகையில் சில திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன்னர், ரயிலில் தனியாகப் பயணிக்கும் பெண்களை பாதுகாக்கும் சட்டம் ஒன்று உள்ளது என்பது குறித்து நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? ஆம், இதற்கான சட்டமும் உண்டு என்கிறது இந்திய இரயில்வே துறை. 1989 ஆம் ஆண்டில், இந்திய இரயில்வே பெண் பயணிகளை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கியது. இந்திய இரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 139 இன் படி, ஒரு பெண், ஆண் பயணி இல்லாமல் தனியாகப் பயணம் செய்து, தன் குழந்தையுடன் இருந்தால், இரயில் அனுமதிச் சீட்டு இல்லாமல் இருந்தால், இரவில் ரயிலில் இருந்து இறங்கும்படி உத்தரவிட முடியாது என்கிறது இந்த சட்டம்.
மேலும் அதிகாரிகளுடன் ஒரு பெண் கான்ஸ்டபிள் இருக்கும்போது மட்டுமே ஒரு பெண்ணை வெளியேறச் சொல்ல முடியும். இந்திய ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 311 இன் படி, இராணுவ வீரர்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் நுழைந்தால், அவர்கள் அத்தகைய பெட்டிகளில் நுழைவதை நாகரீகமாக தடுக்க வேண்டும். எனவே அவர்கள் பொதுவான பெட்டிகளில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட வேண்டும்.
Read More : கையில் ரூ.5000 இருந்தால் போதும்.. இந்தியாவில் இந்த 8 இடங்களை சுற்றிப் பார்க்கலாம்..!
இந்திய ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 162 இன் படி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் 12 வயதுக்கு குறைவான ஆண் குழந்தை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும். பெண்களின் பெட்டிகளில் நுழையும் ஆண் பயணிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த சட்டம் அறிவுறுத்துகிறது. இந்தப் பிரிவுகளைத் தவிர, பெண்களுக்கு 24*7 பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிசிடிவி மற்றும் கண்காணிப்பு அறைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, இரயில்வே துறை பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. உதாரணமாக, ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையம், முழுக்க முழுக்க பெண் பணியாளர்களால் கையாளப்படுகிறது. இந்த ரயில் நிலையம் 28 பெண் ஊழியர்களால் இயக்கப்படுகிறது. இதேபோல், மும்பை மாட்டுங்கா ரயில் நிலையத்தை முழுவதுமாக பெண் ஊழியர்கள் நிர்வகித்து வருகின்றனர். இது போல பல இரயில் நிலைங்களில் பெண் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Train