பெண்கள் தங்குவதற்கு தனி லாட்ஜ்... கேரளாவில் பெண் சுற்றுலாவாசிகளுக்கான சிறப்புச் சலுகை..!

”சுற்றிக் காட்டவும், பிக் அப் மற்றும் டிராப்பிற்கு ஷீ டக்ஸி என்ற பெயரில் பெண்கள் ஓட்டுநராக இருக்கும் கார் வசதிகளும் உள்ளன”

news18
Updated: September 12, 2019, 4:15 PM IST
பெண்கள் தங்குவதற்கு தனி லாட்ஜ்... கேரளாவில் பெண் சுற்றுலாவாசிகளுக்கான சிறப்புச் சலுகை..!
ஷீ லாட்ஜ்
news18
Updated: September 12, 2019, 4:15 PM IST
பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கருதி கேரள அரசு ஷீ லாட்ஜ் (she lodge) என்ற பெயரில் விடுதிகளை திறந்துள்ளது.

பெண்கள் பயணம் செய்கிறார்கள் எனில் முதலில் அவர்களின் பாதுகாப்புதான் முக்கியமாகக் கருதப்படும். அப்படி கடவுளின் பூமி என்று அழைக்கப்படும் கேரளாவில், குழுவாகவோ அல்லது தனியாகவோ பெண்கள் சுற்றுலாவாசிகளாக வந்து செல்கின்றனர். அவர்கள் ஒரு நாளோ அல்லது ஒரு மாதமோ கூட தங்க நேரிடலாம். அவர்களுக்கு இருக்கும் பெரும்பாலான பயம் தங்குவதற்கான பாதுகாப்பு விஷயங்கள்தான்.

இதைக் கருத்தில் கொண்டு பெண்களுக்கான பிரத்யேகமாக ஷீ லாட்ஜ் என்ற விடுதி கேரளாவின் திருவனந்தபுரம், கோழிகோடு, திருசூர் ஆகிய முக்கிய இடங்களில் இருக்கின்றன.
மலையாள மனோரமா செய்தி படி, மூன்று அடுக்கு படுக்கைக் கொண்ட ஒரு அறைகள், தனியாக இருப்பதற்கேற்ற வசதிகள் கொண்ட அறைகள், உணவு சாப்பிடும் டைனிங் ஹால், படிப்பதற்கான வாசிப்பு அறைகள் என வீடு போன்ற சவுகரியங்களை அமைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு பெண்கள் மட்டுமே தங்கிக்கொள்ள முடியும். அதேசமயம் 12 வயதிற்குக் கீழ் உள்ள ஆண் சிறுவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதோடு அவர்களை சுற்றிக் காட்டவும், பிக் அப் மற்றும் டிராப்பிற்கு ஷீ டக்ஸி என்ற பெயரில் பெண்கள் ஓட்டுநராக இருக்கும் கார் வசதிகளும் உள்ளன.

Loading...இதுபோன்ற வசதிகளால் பெண் சுற்றுலாவாசிகளையும் தக்க வைத்துக்கொள்ள சிறந்த பங்களிப்பு என்பதைத் தாண்டி அவர்களின் பாதுகாப்பிற்கு சிறந்த வேலியாகவும் இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பார்க்க :

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் முதுகுவலியை சமாளிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்குகிறார்.. மருத்துவர் ஜெயக்குமார்


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...