ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் பல பகுதிகள் பள்ளத்தாக்கு, மலைகளால் சூழப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் சாலைகளால் அடைந்துவிட முடியாது. ஒரு சில பகுதிகளுக்கு எந்த வாகனங்களாலும் செல்ல முடியாது. மலை ஏறி நடந்து செல்ல வேண்டி இருக்கும்.
மழை காலத்தில் நிலச்சரிவு, பனிச்சரிவு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் தொலைதூரத்தில் உள்ள உள்ளூர் மக்களே தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பர். பயணிகள் யாரேனும் வழியில் சிக்கிக்கொண்டாலும் ஊருக்கு திரும்ப முடியாது.
அதே போல் சுற்றுலாத்தலங்களை பொறுத்த அளவில் பயணிக்க சில அழகிய இடங்கள் சாலைகளால் இணைக்கப்பட்டு இருக்காது. அவற்றை எல்லாம் சாகச பயணிகள் மட்டுமே பார்த்து ரசித்து வருகின்றனர். அதை மாற்றி காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அணுக முடியாத இடங்களைக்கூட ஹெலிகாப்டர் மூலம் அடைய அரசு சார்பில் சேவைகள் தொடங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : 4400 மீட்டர் உயரத்தில் கடல் உயிர்கள் படிமம் கொண்ட இந்திய கிராமம் பற்றி தெரியுமா?
சமீபத்திய செய்தி அறிக்கைகளின்படி, ஜம்முவின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குளிர்காலத்தில் தங்கள் தொலைதூர வீடுகளுக்குச் செல்லவும், பயணிகள் புதிய இடங்களைக் காணவும் ஹெலிகாப்டர் சேவைகள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக ஜம்மு மாகாணத்தின் செனாப் பள்ளத்தாக்கு மற்றும் பிர் பஞ்சால் பகுதிக்கு ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், தொலைதூர பகுதிகளுக்கு பயணிக்கும் வாய்ப்பையும் வழங்கும்.
ஜம்மு மாகாண ஆணையர் ரொமேஷ் குமார் தலைமையில் , கிஷ்த்வார், ரம்பன், தோடா, ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் துணை ஆணையர்கள், சுற்றுலா, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், குளோபல் வெக்ட்ரா ஹெலிகாப்டர் பிரைவேட் லிமிடெட், சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கடல், மணல் , பனி மூன்றும் சேரும் ஒரு இடம் இருக்கு தெரியுமா?
கட்டணம் :
கட்டணத்தைப் பொறுத்தவரை, ஜம்முவிலிருந்து ரஜோரிக்கு 2,000 ரூபாய், ஜம்முவிலிருந்து பூஞ்ச் வரை INR 4,000, ஜம்முவிலிருந்து தோடாவிற்கு INR 2,500, ஜம்முவிலிருந்து கிஷ்த்வாருக்கு INR 2,500, கிஷ்த்வாரில் இருந்து 4,000 ரூபாய்,கிஷ்த்வார் முதல் நவபாச்சி வரை சுமார் 1,500 ரூபாய் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட ஹெலிபேடுகளின் தயார்நிலையை உறுதிப்படுத்த, குளோபல் வெக்ட்ரா ஹெலிகாப்டரின் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து நோடல் அதிகாரிகளை நியமிக்கவும், கூட்டு ஆய்வு நடத்தவும் அந்தந்த துணை ஆணையர்களை மாகாண ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களின் வசதிக்காக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதியையும் உருவாக்குமாறு மாகாண ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சேவைகளை ஒருங்கிணைக்க சுற்றுலாத்துறை இணை இயக்குனர் நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kashmir, Tourism, Travel, Travel Guide