முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இன்று முதல் அமைதியான விமான நிலையமாக மாறும் ஜெய்ப்பூர் சர்வதேச ஏர் போர்ட் : எப்படி இது இயங்கும்..?

இன்று முதல் அமைதியான விமான நிலையமாக மாறும் ஜெய்ப்பூர் சர்வதேச ஏர் போர்ட் : எப்படி இது இயங்கும்..?

ஜெய்ப்பூர் விமான நிலையம்

ஜெய்ப்பூர் விமான நிலையம்

இரைச்சல் ஒலி எதுவும் இல்லாமல் விமான நிலையம் இருந்தால்  எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். அப்படியே அலை ஓய்ந்த கடலின் ஆழமான அமைதி போல இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jaipur, India

பொதுவாக விமான நிலையத்திற்கு நுழைந்தாலே மாற்றி மாற்றி அறிவிப்புகள் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கும். உள்ளே நுழைந்தது முதல் போர்டிங் பாஸ் வாங்குவது, பைகளை சமர்ப்பிப்பது, காத்திருக்கும் நிலையத்தை அடைவது , பாதுகாப்புச் சோதனை, விமானம் வந்து சேர்ந்ததா, கிளம்பியதா, பயணிகள் ஏராளமா, பைகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்று அனைத்திற்கும் அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கும்.

அந்த இரைச்சல் ஒலி எதுவும் இல்லாமல் விமான நிலையம் இருந்தால்  எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். அப்படியே அலை ஓய்ந்த கடலின் ஆழமான அமைதி போல இருக்கும். அப்படி ஒரு சூழலை தான் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம் கொண்டுவர உள்ளது.  விமான நிலையத்தில் நீங்கள் வழக்கமாகக் கேட்கும்  எந்த வகையான சத்தத்தையும்  இன்று முதல் பயணிகள் கேட்க மாட்டார்கள்.

சைலண்ட் விமான நிலையம் என்றால் என்ன?

சைலண்ட் விமான நிலையங்கள் என்பது சத்தத்தை உருவாக்காத விமான நிலையங்களாகும். அமைதியான இந்த வகை விமான நிலையமானது, காத்திருப்பு நேரத்தில் பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான செயல்களில், இடையூறு இல்லாமல், பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு முயற்சியாகும்.

விமான நிலையத்தில் நிசப்தம் என்றால், பயணிகள் புத்தகம் படிக்கலாம். பிடித்தமான பாடல்களை நாய்ஸ் ரிடக்சன் ஹெட் போன்களில் போட்டு காதை கொல்லாமல் மெல்லிய ஒலிகளை வைத்து கேட்கலாம். தங்கள் சக பயணிகளிடம் பேச, தங்களுக்கு பிடித்த  வேலை செய்ய அதிக நேரம் கிடைக்கும். இரைச்சலுக்கு நடுவில் தவிக்காமல் ஒரு நிம்மதியான நிசப்த சூழலை உருவாக்கும்.

சத்தம் இல்லாமல் இருப்பது சரி, ஆனால் அறிவிப்புகள் இல்லாமல் எப்படி  விபரங்களை தெரிந்து கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு தான் ஜெய்ப்பூர் விமான நிலையம் கூடுதல் திரைகளை நிறுவியுள்ளது. விமானம் குறித்த அனைத்து விபரங்களையும் திரைகள் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கின்றனர். அதோடு பயணிகளின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு  குறுந்செய்திகளை அனுப்புகின்றனர்.

அந்த செய்திகளை சரியாக கவனித்து போனால் போதும். பயணம் இனிதாகும்.  திடீர் மாற்றங்கள், மற்றும் ஏதேனும் அவசர அறிவிப்புகள் இருந்தால் அதை மட்டும் எப்போதும் போல் மைக்கில் சொல்வார்கள். மற்றபடி எல்லாமே திரைகள் மூலம் தான் செயல்பட இருக்கிறது.

இதையும் படிங்க: இந்தியாவிலிருந்து முதன்முறையாக அமெரிக்க விசா பெறுபவர்களுக்கு காத்திருக்கும் அதிஷ்டம்!

இந்தியவில் சத்தம் இல்லாத அமைதியான முதல்  விமான நிலையம் இது அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த முன்னெடுப்பை லக்னோ விமான நிலையம் செய்தது. இந்த ஆண்டு அமைதி விமான நிலைய முன்னெடுப்பை மேற்கொள்ளும்  முதல் விமான நிலையம் தான் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம்.

First published:

Tags: Airport, Flight travel, Jaipur S20p07, Travel