Home /News /lifestyle /

பட்ஜெட் செலவில் தாய்லாந்து சுற்றுலா போகணுமா..? உங்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது ஐஆர்சிடிசி

பட்ஜெட் செலவில் தாய்லாந்து சுற்றுலா போகணுமா..? உங்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது ஐஆர்சிடிசி

தாய்லாந்து

தாய்லாந்து

கோடை கால திட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சுற்றுலாவில் ஒரு நபருக்கு ரூ.47,775 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா ஆர்வலர்களின் சொர்க்கபுரி எதுவென்று கேள்வியை உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள். ஏறக்குறைய அனைவரின் பதிலும் ஒரே மாதிரியாக இருக்கும். உள்நாட்டைப் பொறுத்தவரையில் கோவா என்றும், சர்வதேச நாடுகளைப் பொருத்தவரையில் தாய்லாந்து என்றும் கூறுவார்கள்.

இந்தியாவைப் போலவே தொன்மை வாய்ந்த பாரம்பரியமும், கலாச்சாரமும் நிறைந்த தாய்லாந்து சுற்றுலாவுக்கான சிறந்த இடமாக இருக்கிறது. அங்கு உள்ள இயற்கை காட்சிகளின் கண்கொள்ளா அழகும், பல கேளிக்கை நிகழ்ச்சிகளை கொண்ட மாநகரங்களும், அழகிய கடற்கரைகளும் நம்மை ஈர்ப்பதற்கு காரணங்களாக அமைந்துள்ளன.

நாமெல்லாம் தாய்லாந்து போக முடியுமா, அதுவும் பட்ஜெட் செலவில் அது சாத்தியமா என்ற கேள்வி உங்களுக்குள் இருக்குமானால், கண்டிப்பாக அது சாத்தியம் தான். உங்களுக்கான வாய்ப்பை ஐஆர்சிடிசி வழங்குகிறது. கோடை கால திட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சுற்றுலாவில் ஒரு நபருக்கு ரூ.47,775 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



6 நாட்கள், 5 இரவுகள் சுற்றுலா

தாய்லாந்து சுற்றுலா திட்டத்தில் பட்டாயா, பாங்காக் உள்ளிட்ட முக்கிய இடங்கள் சுற்றிக் காண்பிக்கப்படும். மொத்தம் 6 நாட்கள் மற்றும் 5 இரவுகளைக் கொண்டதாக இந்த சுற்றுலா இருக்கிறது. இதுகுறித்து ஐஆர்சிடிசி டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெள்ளை மணல் கடற்கரைகள், புத்துணர்ச்சி தரும் தாய் மசாஜ் மற்றும் மகிழ்ச்சியை தரும் பல்வேறு அழகிய இடங்கள் ஆகியவற்றை நீங்கள் பார்வையிடலாம். இதற்கான கட்டணம் ரூ.47,775 ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் ஓட்டுவதால் இத்தனை நன்மைகளை பெறலாமா..? இன்றே தொடங்குங்கள்..!

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து டூர்

ஐஆர்சிடிசி நடத்தும் டூர், மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் இருந்து தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி பயணம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்பால் நகரில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் கொல்கத்தா வழியாக பாங்காக் நகருக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.



கட்டணத்தில் என்னென்ன சேவைகள் கிடைக்கும்

wஈங்கள் செலுத்தும் கட்டணத்தில் விமானக் கட்டணம், விடுதிகளில் தங்கும் செலவு, உணவு, உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்றும் பயணக் காப்பீடு ஆகியவை கிடைக்கும். நீங்கள் ரூ.47,775 கட்டணம் செலுத்தினால் விடுதிகளில் இருநபர் அறைகளில் தங்க வேண்டியிருக்கும்.

அதுவே ஒருநபர் அறையில் நீங்கள் தங்குவதற்கு விரும்பினால் ரூ.53,781 கட்டணமாக செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ரூ.41,000 முதல் ரூ.46,000 வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்மருக்கு வெக்கேஷன் பிளான் பண்றீங்களா..? இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க..!

எங்கு புக்கிங் செய்வது

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் புக்கிங் செய்து கொள்ளலாம். இது தவிர ஐஆர்சிடிசி நிறுவனத்தின் உதவி மையங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களில் நீங்கள் புக்கிங் செய்து கொள்ளலாம். பட்ஜெட் விலையில் தாய்லாந்து சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Thailand, Travel

அடுத்த செய்தி